நிலாவைத் தின்ற எறும்பு

நீரில் மிதந்த எறும்பு
அலையினில் அசைந்து
கொண்டிருந்த நிலாவை
கடித்து கடித்து இழுத்தது.
எறும்பின் கூர்வாய்க்குள்

நிலாவின் விழும்பு

இழுபடுவது போல் தோன்ற
இன்னும் உற்சாகமாய்

இழுக்க முனைகையில்

நிலாவைத் தின்ற
எறும்பின் சுவையறிந்த
ஒரு பறவை
எறும்பைக்
கவ்விப் பறந்தது.

“நிலாவைத் தின்ற எறும்பு” இல் 3 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன