கவியோகி

சின்ன விஷயங்களுக்கெல்லாம்
அமிதமாய் உணர்ச்சிகளை
விரையம் செய்வதைக் கண்டு
கவிதை எழுதத்தூண்டினார்
எழுத்தை ஆள்கிறவர்
கவிதைகள் எழுத எழுத
உணர்வுகள் உணர்ச்சிகள்
மேலும் கூர்மைபெற்றன
முறுக்கேறின
உக்கிரம் கொண்டன
உணர்ச்சிகளின் உளறல்கள்
என்றுரைத்து
யோகத்தில் சித்தத்தைச்செலுத்த
பணித்தார் யோகி
யோகத்தில் முழுக முழுக
உரம் பெற்ற ஆன்ம பலத்துடன்
உணர்வுகளும் ஊக்கம் பெற்றன
மிச்ச நாட்களின்
நகர்தலில்
முற்றிலும் சமனம் அடையா
உணர்ச்சிகள் உணர்தல்களின் கூட
சேர்ந்துகொண்ட
கவிதையும்
யோகமும்

“கவியோகி” இல் ஒரு கருத்து உள்ளது

இராஜராஜேஸ்வரி உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன