அன்புள்ள நண்பர்களே,

நவீன விருட்சம் 87-88வது இதழ் தயாராகி விட்டது.

இந்த இதழ் எதிர்பார்த்தபடி 6 மாதம் மேல் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாளும் இரவு பத்து மணிக்குமேல்தான் இதழ் குறித்து சிந்திக்க முடிந்தது. அதனால் தாமதம்.

இதழில் கீழ்கண்டவர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இதழ் அனுப்ப முகவரிகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நானும் என் எழுத்தும் ஐராவதம்
கையெழுத்து முத்துசாமி பழனியப்பன்
கவிதை நந்தாகுமரன்
யாவரும் கேளீர் அசோகமித்திரன்
துரோகத்தின் கத்தி ஆதி
கிழிசல் சேலை குமரி எஸ் நீலகண்டன்
இலா கவிதைகள் 6 இலா
பழம் புத்தகக் கடை விட்டல்ராவ்
விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
யாருக்காக ப மதியழகன்
G ராமசாமி 60+ ன் புலம்பல்
மூன்று கவிதைகள் அய்யப்பன் மாதவன்
அவளா இது மீனு
ஆறு கவிதைகள் அழகியசிங்கர்
இரு கவிதைகள் விநாயக முருகன்
தமிழ்ப் பேசும் ஆங்கில படம் தாஜ்
பெண் கவிதைகள் மொழிபெயர்ப்பு குவளைக்கண்ணன்
அம்மா மாதிரி செல்வராஜ் ஜெகதீசன்
குற்றச்சாட்டு நீலமணி
மொழிபெயர்ப்புக் கதை எம்.ரிஷான் ஷெரீப்
ஐயப்பப் பணிக்கர் கவிதை
சில குறிப்புகள் அழகியசிங்கர்
கழைக்கூத்தாடிச் சிறுவன் ப மதியழகன்
மைனஸ் மாத்ருபூதம் உஷாதீபன்
வரம் யோசிப்பவர்
ஐராவதம் புத்தக விமர்சனம்
அரசியல்வாதியும் அவர் வளர்த்த பூனையும் குமரி எஸ் நீலகண்டன்
ஊழிக்காலம் எம்.ரிஷான் ஷெரீப்
மெய்ப்பொருள் மிருணா
கவிதை நந்தாகுமரன் (2 முறை ஒரே கவிதை பிரசுரமாகிவிட்டது)

வழக்கம்போல் நல்லி விளம்பரத்துடன் இதழ் 80 பக்கம் வரை கொண்டு வந்துள்ளேன். இதழில் தவறு கண்டால் மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து சுட்டிக்காட்ட தவற வேண்டாம். 88வது இதழுடன் 22 ஆண்டிற்கான பணியை விருட்சம் மேற்கொண்டுள்ளது.

தொடர்ந்து விருட்சத்திற்குப் படைப்புகள் அனுப்புவர்கள் navina.virutcham@gmail.com மூலம் அனுப்பவும்.முதலில் படைப்புகள் navinavirutcham.blogspot லும் பின் இதழிலும் வரும். படைப்பாளிகள் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும். நவீன விருட்சத்திற்கு அனுப்பியதை வேறு எங்கும் அனுப்ப வேண்டாம். அல்லது அனுப்பினால் விபரம் தெரிவிக்கவும். இதழ் குறித்து உங்கள் கருத்துக்களை அல்லது திட்ட வேண்டுமென்று தோன்றினால் திட்டுக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதழ் பிரதிகளைக் கூடிய சீக்கிரம் அனுப்பி விடுகிறேன்.

நன்றி.

அழகியசிங்கர்

“அன்புள்ள நண்பர்களே,” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. வாழ்த்துக்கள் அழகிய சிங்கர்.

    //நவீன விருட்சத்திற்கு அனுப்பியதை வேறு எங்கும் அனுப்ப வேண்டும். அல்லது அனுப்பினால் விபரம் தெரிவிக்கவும்//

    அனுப்ப வேண்டாம் என இருக்க வேண்டும். சரிதானே.. மாற்றி விடுங்கள்.

    இதை பதிக்க வேண்டாம்.

  2. 22 வருடம் ஒரு சிற்றிதழ் நடத்திய ஒருவரை யார் திட்டக்கூடும்.

    /திட்ட வேண்டுமென்று தோன்றினால் திட்டுக்களைத் தெரிவிக்கும்படி/

    இந்த வரிகள் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

    மற்றபடி, என் சிறுகதையை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

  3. என் படைப்புக்கள் நவீன விருட்சம் இதழில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இதழின் ஒவ்வொரு எழுத்திலும் உங்களின் சோர்வற்ற உழைப்பு தெரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன