பூனைக் கவிதைகள்
செல்வராஜ் ஜெகதீசன்
01 கடைசியாய் காரொன்றில் அடிபட்டு இறக்குமுன் அந்தக் கறுப்புப் பூனை முழித்தது யார் முகத்திலோ? o 02 திருடனொருவனை காட்டிக்கொடுத்த அடுத்த வீட்டுத் திருட்டுப் பூனைக்கு அதற்குப் பிறகும் அதே பெயர்தான். O 03 இருந்தும் கடந்தும் போயின எத்தனையோ. இன்னும் பல எங்கோ எப்படியோ இருந்து கடக்க. O
