கார் நனையாமலிருக்க
கவர் போட்டு விட்டு
திரும்பினேன்
ஒரு கிழவர்
அரைகுறை வேட்டியோடு
சட்டை இல்லாமல்
மழையில் நனைந்தவாறு
பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்
ஓடிப்போய் என் பழைய
சட்டையொன்றை எடுத்து வந்து
அவரை கூப்பிட்டேன்
அதெல்லாம் வேணாம் தம்பி
சோறு கொஞ்சம் போடேன்….
என்று
வயிற்றை தடவினார் கிழவர்…!
பிரசுரம் ஆக செய்ததற்கு நன்றி
– ரா. கணேஷ்.
கவிதையின் தலைப்பும், முதல் மூன்று வரிகளுக்குமான தொடர்பும் அருமை
தங்கள் கருத்துக்கு
நன்றி விநாயகமுருகன்.
– ரா. கணேஷ்