ஓஷோ கூட்டத்தின் முதல் பகுதி ஓஷோ கூட்டத்தின் முதல் பகுதி 

16.09.2017 (சனகிழமை) நடந்த கூட்டத்தின் காணொலியின் முதல் பகுதியை அளிக்கிறேன்.  எதாவது தவறு தென்பட்டால் குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இதன் அடுத்த 2 பகுதிகள் தொடர்ந்துவர உள்ளது.

 

குவிகம் நடத்திய இலக்கியக் கூட்டம்…

24ஆம் தேதி குவிகம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தியது. இது மாதம் ஒரு முறை நடத்தும் கூட்டம். இந்தக் கூட்டத்தில் சந்தியா பதிப்பக அதிபர் நடராஜன் அவர்கள் அகராதிகள் என்ற தலைப்பில் பேசியதை முதல் பகுதியாக வெளியிட்டேன். 28.06.2017 அன்று வெளியிட்டேன்.

அதன் இரண்டாம் பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.

 

 

திருப்பூர் கிருஷ்ணன் தி ஜானகிராமனை அழைத்துக்கொண்டு வந்து விட்டாரா?   

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 26வது கூட்டம் ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது போல் தோன்றுகிறது.  திருப்பூர் கிருஷ்ணனுக்கு நன்றி.   

நாம் பழகிய எழுத்தாளரை நினைவு கூர்ந்து அவரைப் பற்றி சொல்வதோடல்லாம் அவர் படைப்புகளையும் நல்ல முறையில் அறிமுகம் செய்வவது முக்கியம்.  அதைச் சரியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்த்திக் காட்டியவர் திருப்பூர் கிருஷ்ணன்.  எதிர்பார்க்காமலேயே நல்ல கூட்டம் அன்று.  சனி ஞாயிறுகளில் சென்னை மாநகரத்தில் பல இலக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வந்திருந்து சிறப்பு செய்தவர்களுக்கு நன்றி.   

அவர் பேசியதை ஆடியோவில் பதிவு செய்துள்ளேன்.  இதை இங்கு அளிக்க விரும்புகிறேன்.  எல்லோரும் கேட்டு மகிழும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விருட்சம் ஏற்பாடு செய்துள்ள பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 9

 
 
 
வழக்கம்போல  ஒன்பதாவது கூட்டம் இது.  வெளி ரங்கராஜன் அவர்களைப் பேட்டி கண்டுள்ளேன்.  முன்பெல்லாம் நானும் வெளி ரங்கராஜனும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளாமல் இருக்க மாட்டோம்.  எதாவது இலக்கியக் கூட்டங்களில் சந்திப்போம்.  இப்போது முன்பு போல் முடிவதில்லை.
பத்து கேள்விகள் பத்து பதில்கள் சார்பாக அவரைப் பேட்டி கண்டுள்ளோம். இதைப் பார்த்து ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  என் முயற்சிக்கு முழு ஆதரவு தருபவர் கிருபானந்தன்.  இதில் எதாவது குறைகள் தென்பட்டால் தெரிவிக்கவும்.  திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறோம்.  சோனி காமெராவின் டிஜிட்டல் பயன்பாடை இவ்வளவு தாமதமாகத்தான் கண்டு பிடித்தேன்.

நவீன விருட்சம் 100 வது இதழ் வெளியீட்டு விழா

100வது கூட்டத்திற்கு வர முடியாதவர்கள், கூட்த்தில் பேசியதை ஷ்ருதி டிவி படம் பிடித்துள்ளது.  அதை உங்களுக்கு திரும்பவும் தருகிறேன்.பார்க்கவும். பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிரவும்.

1

2

3.

4.

விருட்சம் ஏற்பாடு செய்துள்ள பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 8

வழக்கம்போல எட்டாவது கூட்டம் இது.  என் நண்பர் பெ சு மணி நாங்கள் இருந்த போஸ்டல் காலனி முதல் தெருவின் எதிரிலுள்ள ராமகிருஷ்ணபுரம் 2வது தெருவில் வசித்து வருகிறார்.  ஒவ்வொரு முறையும் தெருவில் நடந்து செல்லும்போது அவரைச் சந்திப்பது வழக்கம்.
இப்படி ஒவ்வொரு விழாக்கிழமையும் பலரைச் சந்தித்து பேட்டி எடுக்க வேண்டுமென்பது அடியேனின் விருப்பம்.  இதை எத்தனைப் பேர்கள் ரசிப்பார்கள் என்பது தெரியாது.  இதை இன்னும் கொஞ்சம் முன்னதாகவே ஆரம்பித்திருக்க வேண்டும்.  இப்போதுதான் இது புரிய வருகிறது.
https://www.youtube.com/watch?v=Wwzk5ADv8qs&authuser=0

https://www.youtube.com/watch?v=Wwzk5ADv8qs