ஏழு ஜென்ம வதைப்படுத்தி
எம்.ரிஷான் ஷெரீப்
உன் மௌனத்தில் வலியுணர்த்தி
எதுவும் பேசாமல்
நின்று நின்று பார்த்தபடியே
மெல்ல நகர்கிறாய் நீ
காயப்பட்டவுன்னிதயத்துக்கு
ஆறுதலாகவொரு துளிக்கண்ணீரோ
ஒரு கண அரவணைப்போ
தரவியலாத் துயரத்தோடு நான்
எந்த நம்பிக்கையிலுன் சிறு ஜீவனை
எனதூர்தியின்
நான்கு சக்கரநிழலுக்குள்
நீ வந்து உறங்கவைத்தாய்
நசுங்கிச் சிதைந்தவுன் வாரிசின்
சடலத்தைக் காணநேர்ந்த பிற்பாடும்
எந்தவொரு அனல்பார்வையோ,
சாபமிடலோ,வைராக்கியமோ இன்றி
ஒதுங்கிப் பார்த்திருக்கிறாய்
ஆறறிவாய் நீ
கணங்களைச் சப்பிவிழுங்கும்
பணியின் அவசரநிமித்தம்
ஒரு நிமிடமொதுக்கி
வண்டியின் கீழ்ப் பார்க்கமறந்து
ஏழேழு ஜென்மத்துக்குமான
வேதனையில் சிக்கித் தவிக்கும்
ஐந்தறிவாய் நான்
Tag: தொகுப்பாளர் : அழகியசிங்கர்
பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……14
வித்தியாசமான மியாவ்
சுந்தர ராமசாமி
எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது.
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்.
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்.
குழந்தைகள் அழுதன.
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்.
நான் பேசத் தொடங்கினேன்:
இந்தப் பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது மேலும்…
பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் 13 ……
சுகுமாரன்
பூனை…
மனிதர்கள் தவிரமற்ற பிராணிகளுடன்பழக்கமில்லை எனக்கு
எனினும்
உள்ளங்கைச் சூடுபோலமாறாத வெதுவெதுப்புள்ளபூனைகளின் சகவாசம்சமீப காலமாய்ப் பழக்கமாச்சு
மயிலிறகை அடை வைத்த பருவத்தில்கால் குலுக்கக் கை நீட்டிவிரல் கிழித்த பூனையால்’மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்
இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்வடுவாக மிஞ்சிய இப்போதுபூனைப்பயம் பொய்த்துப் போச்சு
வீடு மாற்றியபோது புரிந்தது -நன்றியின் சொரூபம்நாய்களல்ல பூனைகள்நாய்கள்
மாநிதரைச் சார்ந்தவைசுதந்திரமற்றவை
எப்போதோசிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவைஇன்னும் உறிஞ்சியபடிகாலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது
பூனைகள்வீடுகளைச் சார்ந்தவைசுதந்திரமானவை
நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவுபூனையின் பார்வையில் நட்பின் கர்வம்
உலர்ந்த துணியில் தெறித்தசொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்பூனைகளுடன் இப்போதுபகையில்லை எனக்கு உடல் சுத்தம்சூழ்நிலைப் பராமரிப்புரசனையுள்ள திருட்டுகாதல்காலக் கதறல்பொது இடங்களில் நாசூக்கு – என்றுபூனைகளைப் புகழக் காரணங்கள் பலப்பல
எனினும்என்னைக் கவரக்காரணங்கள் இரண்டு
ஒன்று:எனக்குத் கடவுளுக்கும்வாகனமாய்ப் பூனை இல்லை
இரண்டு:பூனை கண் மூடினால்இருண்டுவிடும் உலகம்
நானும்கண்மூடுகிறேன் “மியாவ்”
o
பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……
மியாவ்வென்று ஸ்நேகமாய்க் கத்தாமல்
பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்
11
விளையாடும் பூனைக்குட்டி
க நா சு
மல்லாந்து படுத்துக் கால்நீட்டிக்
குறுக்
கிக்கயிற்றின் நுனியைப் பல்லால்கடித் திழுத்துத்
தாவி எழுந்து வெள்ளைப்
பந்தாக
உருண்டோடிக் கூர்நகம் காட்டி
மெலிந்து சிவந்த நாக்கால்
அழுக்குத் திரட்டித் தின்னும்
பூனைக்குட்டி –
என்னோடு விளையாடத் தயாராக
வந்து நின்று, என் கால்களில் உடம்பைச்
சூடாகத் தேய்த்துக் கொண்டு நிமிர்ந்து
அறிவு ததும்பும் கண்களுடன் என்னைப்
பார்க்கிறது. அப்போது நான்
சிலப்
பதிகாரம் படிந்திருந்து விட்டேன்
பின்னர்
நான் அதை விளையாட
‘மியாவ் மியாவ் ஓடி வா’
என்று கூப்பிடும் போது நின்று
ஒய்யாரமாக ஒரு பார்வையை என்
மேல் வீசிவிட்டு மீன் நாற்றம்
அடிக்கும் கொட்டாவி விட்டுக்கொண்டே
அடுப்படியிலே போய்ச் சுருண்டு படுத்துக்கொள்கிறது
பூனைக்குட்டி
(எழுத்து / ஏப்ரல் 1959)
பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……
10
பூனையைப்போல அலையும் வெளிச்சம்
குட்டி ரேவதி
கதவுகளை ஓசைப்படாது திறந்து
மழைபெய்கிறதாவென
கைநீட்டிப் பார்க்கிறது வெளிச்சம்
தயங்கியபடி
பின் இல்லையென்றதும்
மரவெளியெங்கும் நிழற்கடைவிரித்து
கூடார முகப்பில் ஏறி அமர்கிறது
வேடிக்கைப் பார்க்க
பூமியெங்கும் பூனை உடலின் நிற அழகுகள்
தனது நிழலே தன்னை
தின்னத் துவங்கியதும்
சரசரவென மரமிறங்கிப் பாய்கிறது
மாடத்துச் சுடருக்கு
மதில் சுவரென விடைத்து நிற்கும்
இரவு முதுகின் மீதமர்ந்து
கூடலின் பேரொளியை சுவீகரிக்கும்
நிலவின் அகன்றவிழியால்
பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……
எஸ்.இராமநாதன்
குழந்தை
நள்ளிரவில் வந்த பூனை கண்டு,
பரண் ஏறி அமர்ந்து கொண்டது அது-
அதை விரட்டச் சொல்லி நச்சரிக்கும் இவள்முன்
என் எல்லாச் சாமர்த்தியங்களும் தோற்றுப்போக,
அநேகப் பூனைக்கதைகளைச் சொல்லத் இவள்
பயம் உடைபட்டு குழந்தை தூங்கவென்று.
நேரம் செல்லச் செல்ல
தன் குட்டிக்குப் பால் கொடுத்துத் தூங்குகிற
வளர்ந்த பெரிய பூனையாய் இவள் மாறக்கண்டு
ஒடுங்கிப் போனேன் பயத்தில் நான்.
பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……
பாவண்ணன்
பூனை
காவல் பலிக்கவில்லை
தினமும் பால்திருட்
எதேச்சையாய்ப் பார்த்ததும் நின்று முறைக்கிறாய்
முன்வைக்கவோ
பின்வைக்கவோ
உனது தந்திரம் புரியவில்லை
துடிக்கும் மீசையில் கர்வம்
கண்களில் கவியும் குரூரம்
உடம்பில் புரளும் முறுக்கு
உன் கண்களுக்கு எதுவாய்த் தெரிகிறேன் நான்
எலியாகவா
எதிரியாகவா
@@
சாத்திய ஜன்னல்கள் நடுவில்
கசியும் உன்குரல் இரக்கம் மிக்கது
சோறு உனக்குப் பிடிப்பதில்லை
கறி நான் சமைப்பதில்லை
குழந்தையிருக்கும் வீடு
பால் மிஞ்சினாலும் கொடுப்பதற்கில்லை
நேற்றுவரைக்கும் உன் திருட்டின் ஆட்டத்தால்
எச்சரிக்கையானது வீடு
இன்றுமுதல்
இன்னொரு வீட்டுக்குத் திருடப்போ
@@
எச்சில் மீன் தலையைத் துப்ப
என் வாசலா கிடைத்தது
அதட்டலின் அர்த்தம் குழப்பிவிட்டது
உன் நகங்களின் ஆத்திரப்பதிவில்
பாதத்தில் கசியும் ரத்தக்கோடுகள்
என்ன புரிந்து எகிறினாய்
உன் மீன் எனக்கு இரையாகுமா
என் வாசல் தூய்மை தவறாகுமா
பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……
த.அரவிந்தன்
பூனையின் உலக இலக்கியம்—————————————————
எலி சாப்பிடாத
ஒரு பூனையை எனக்குத்தெரியும்
வீட்டிற்கு வரும்
லியோடால்ஸ்டாய், அன்ரன் செக்கோவ், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி
காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், ஜோர்ஜ் லூயி போர்ஹே
மரீயாலூயிஸு பொம்பல், மார்கெரித் யூர்ஸ்னார்,
இஸபெல் அலெண்டே, நவ்வல் அல் ஸுதவி
நதீன் கோர்டிமர், ஆல்பெர் காம்யூ, ஆஸ்கர் ஒயில்ட் – எனச்
சகலரின் எழுத்தையும் படிக்கும்
மழையில் நனையும்
ஒரு பூனைக்குட்டி மீது
பரிதாபம் கொள்ளும் பெண் பற்றி
எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய
‘மழையில் பூனை’* சிறுகதையை
ஒருகுளிர்காலத்தில் சொன்னதிலிருந்து
அந்தப் பூனைக்குக் கட்டுப்படாத
பூனைகளே இல்லையாம்
உச்சிவெயில் ஒழுகிக்கொண்டிருந்த
சன்னலோரம் ஒருநாள்
சினுவா ஆச்சிபி “சிதைவுகள்’ நாவலின்
இருபதாம் அத்தியாயத்தைப்
படித்துக் கொண்டிருந்தபோது
எதேச்சையாய் அதனிடம் கேட்டேன்:
‘திருட்டுத்தனமாய் நீ எலிகளைச் சாப்பிடுகிறாயாமே’
வீட்டிற்கு வருவதையே நிறுத்திவிட்டது.
* தமிழில்: திலகவதி
பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……
எங்கிருந்தோ ஓடி வந்து