இந்திய அரசியல் சாஸனம்

அசோகமித்திரன்




இக்கட்டுரையின் நோக்கம் இந்திய அரசியல் சாஸனத்தை விவாதிப்பது அல்ல. மொழிபெயர்ப்பில் எப்படி நீண்ட கால விபரீதங்கள் நிகழ்ந்து விடுகின்றன என்பதைக் குறிப்பிடும் சிறு கட்டுரை. அறுபத்தைந்து ஆண்டுகளாக நாம் ‘செகுலர்’ என்ற சொல்லுக்கு மதச்சார்பின்மை என்ற எதிர்மறைச் சொல்லைப் பயன்படுத்தி வருகிறோம். சமீப காலத்தில் இது சரியில்லையோ என்று தோன்றும் வகையில் சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் மதம் என்பது நிதரிசனம். அதாவது அது உண்டா இல்லையா என்று கேட்கவே இடமில்லை. மிக எளியலிருந்து மகா செல்வந்தர்கள் வரை ஏதோ ஒரு மதத்தின் சார்பு இருக்கிறது. திருப்பதியில் ஒரு மணி நேரச் சிறப்பு தரிசனம் ஒரு சீட்டுக்கு இலட்சம் எளியவர்கள் 30 அல்லது 35 மணி நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்கிறார்கள். டிசம்பர் மாதம் கிருத்தவர்கள் மாதம். ரம்ஜான், கிருஸ்துமஸ் போன்றவை பண்டிகைகள். மொஹர்ரம், ஈஸ்டெர் தவமிருக்கும் நாட்கள். இந்துக்கள் பண்டிகைகள் இரு கை விரல்களில் எண்ணமுடியாது. இப்படி இருக்கும்போது மதச்சார்பின்மை என்ற சொல் எதைக் குறிக்கிறது? மத சம்பந்தமில்லாத உலகாயத விஷயங்கள் என்று அகராதிகள் விவரிக்கின்றன. ஆனால் நடைமுறையில் மதசார்பின்மையை நாம் ‘செகுலர் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். நானறிந்து 1950களில் எந்த ஜெர்மானியனுக்கும் (பெண்கள் உட்பட)மதம், கடவுள் இவற்றுக்கு எந்த சம்பந்தமும் தேவையும் இல்லை என்றுதான் கூறினார்கள். இரண்டாம் உலகப் போரின் அழிவுகளையும் அவமதிப்பையும் முழுக்கப் பெற்ற அவர்களுக்குக் கடவுள், மதம் ஆகியவை வெறும் சொற்களாகப் போய்விட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கிய படைப்புகளில் ‘மை காட்!’ ’ஓ காட்’ ’காட் பெ தான்க்ட்’ ’காட் பி வித் யூ என்றெல்லாம் சர்வ சகஜமாக வருபவை.. கடந்த அறுபது எழுபது ஆண்டுகளில் இவற்றைக் காண்பது அபூர்வம். 
ஹைதராபாத் நகரில் வருடம் ஒரு முறையாவது ஒரு மதக் கலவரம் வரும். இங்கே சென்னையிலேயே திடீரென்று விநாயக சதுர்த்தி ஒரு பதட்டமான காலமாயிற்று. ஆனால் இங்கொன்று அங்கொன்று நடப்பதாலேயே திடீரென்று இந்தியர்களின் சகிப்புத்தன்மை மறைந்து விட்டது என்று நினைக்கக்கூடாது. நமக்கே ஓரொரு தருணங்களில் தெருவில் வேறு யாருமே இல்லை என்றறியும்போது உள்ளூர ஒரு பயம் தோன்றுகிறது. இன்றும் சென்னையில் பல பறக்கும் இரயில் நிலையங்களில் இப்படித் தோன்றுவதுண்டு. 
ஆனால் இவற்றைக் கொண்டு இந்த நாடு என்றென்றும் இப்படித்தான் என்று எண்ணுவது மிகை. என்னுடைய ஒரு சாமியார் நண்பர் கூறினார்: எவ்வளவு நிதான சுபாவம் கொண்ட மனிதனும் (அல்லது பெண்ணும்) வாழ்க்கையில் ஒரு முறையாவது தற்கொலை பற்றி நினைக்காமல் இருந்ததில்லை. உடனே அவர்கள் தங்களை மாய்த்துக் கொள்வார்கள் என்றாகாது. சாதாரணப் பேச்சிலேயே யாரோ ஒருவரைக் குறிப்பிட்டு ‘இவன் செத்தால்தான் விடிவு வரும்’ என்று சொல்வதைக் கேட்கிறோம். 
வரலாற்றில் இப்படிச் சொல்லி விபரீதம் நிகழ்ந்திருக்கிறது. இந்தத் தலைமுறையினர் இதை அதிகம் தெரிந்திருக்க வழியில்லை. ஆனால் 1964அளவில் இந்தியாவே ஒரு திரைபடத்துக்கு ஆட்பட்டிருந்தது. பெயர் ‘பெக்கட்.’ ஒர் அரசனும் ஒரு சாமானியனும் நண்பர்கள். ஒரு நெருக்கடியான தருணத்தில் அவனை விமரிப்பவர்களைப் பழி வாங்க அரசன் தன் நண்பனை நாட்டு மத குருவாக நியமித்து விடுகிறான். நண்பன் உண்மையாகவே மதகுருவாக உணருகிறான்.இதனால் அரசன் “ஐயோ, அந்தப் புது சாமியாரை யாராவது ஒழித்து விடக்கூடாதா?” என்கிறான்.நான்கு பேர் உடனே அந்த மாதாகோயிலுக்குப் போய் அந்த மத குருவைக் கொன்று விடுகிறார்கள். அதற்காக அந்த அரசன் வாழ்நாளெல்லாம் வருந்துகிறான், தன்னைச் சாட்டையால் அடித்துக் கொண்டு வருத்திக் கொள்கிறான். இது வரலாற்றில் உள்ளது. இந்த நிகழ்ச்சியை இருவர் இலக்கியப் படைப்புகளாக இருபதாம் நூற்றாண்டில் பதிவு செய்திருக்கிறார்கள். இருவரும் நாடகமாக எழுதியிருக்கிறார்கள்.ஜான் அன்வி என்ற ஃபிரென்ச்காரர் ‘பெக்கெட்’ என்று எழுதியிருக்கிறார். இதன் ஆங்கில வடிவத் திரைப்படத்தில் பீடர் ஓ’டூல் மற்றும் ரிசர்ட் பர்டன் நடித்திருக்கிறார்கள். டீ.எஸ். எலியட் எழுதிய நாடகம் ‘மர்டர் இன் தெ காதிட்ரல்’ அரசனின் பெயர் இரண்டாம் ஹென்ரி. மதகுருவாக்கப்பட்டவ நண்பன் பெயர் தாமஸ் பெக்கட். இது 12ஆம் நூற்றாண்டில் நடந்த கதை.                    
பின் குறிப்பு :

நவீன விருட்சம் 99வது இதழில் வெளிவந்த கட்டுரை.  இதழ் பிரதிகள் சிலவே உள்ளன. 

மறக்க முடியாத மார்ச்சு ஒன்றாம் தேதி…

அழகியசிங்கர்
                                                                                                                     
இன்றைய தேதியைப் பற்றி எழுத எனக்கு சங்கடமாக இருக்கிறது.  கிட்டத்தட்ட எட்டாண்டாண்டுகளுக்கு முன்னால், அதாவது மார்ச்சு மாதம் முதல் தேதி 2008ஆம் ஆண்டு ஸ்டெல்லா புரூஸ் தூக்குப் போட்டுக்கொண்டு மரணம் அடைந்த நாள் இன்று.  அன்று சனிக்கிழமை.  நான் ஹஸ்தினாபுரம் என்ற ஊரிலுள்ள வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  காலை நேரத்தில்தான் அந்த சோகமான செய்தியை என் நண்பர்களான, ஆர் ராஜகோபாலன், எஸ் வைத்தியநாதன்.
சுஜாதா இறந்து போன சில நாட்களில் இந்தச் சோகம் நடந்தது.  ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது எனக்கு புரியாத புதிர்?  பார்க்க முரட்டுத்தனமாக காட்சி  அளிப்பார் ஸ்டெல்லாபுரூஸ்.  கருப்பு கண்ணாடி ஒன்றை அணிந்துகொண்டு உயரமாக இருப்பார்.  அவர் சிலசமயம் பேசுவது கூட  அலட்சியமாக இருக்கும். யார் மீதாவது கோபப்பட்டால் பார்க்கக் கூட மாட்டார்.  இது ஒரு முகம்.  
அவருடைய இன்னொரு முகம். வன்முறையைக் கண்டால் பயந்து ஓடுவார்.  யாராவது நம்முடன் பேச மாட்டார்களா என்று ஏங்குபவர். எதற்கும் பயப்படுவார்.  ஆடம்பரமாக எந்தப் பொருளையும் வாங்கி சேர்க்க மாட்டார்.  அவர் விரும்புவது புத்தகங்கள், இசை, நண்பர்களுடன் உரையாடுவது. அவர்கள் வீட்டிற்குப் போனால, அவரும் அவர் மனைவியும் உபசரிப்பது பிரமாதமாக இருக்கும்.  ஏதோ அந்நிய வீட்டிற்குப் போவதுபோல் உணர்வு ஏற்படாது.  புத்தகங்கள் பற்றி, எழுதுவது பற்றி பேசிக்கொண்டிருப்பார்.  எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் அவர் மரியாதை வைத்திருந்தார்.   
அவர் மனைவி நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஸ்டெல்லா புரூஸ் தவித்துப் போய்விட்டார்.  மருத்துவமனை வீடு என்று அவரால் அலைய முடியவில்லை.  அவருக்கு அது பழக்கமுமில்லை.  வீட்டில் எல்லா வேலைகளையும் அவர் மனைவிதான் செய்வார்.  எங்கும் இவரை அலைய விட மாட்டார்.  மனைவியை இழந்து விடுவோம் என்ற பயம் அவரைச் சூழ்ந்து கொண்டது.  டாக்டர் செல்வராஜ் என்ற என் நண்பரை போய்ப் பார்த்து வாய்விட்டு அழ ஆரம்பித்தார்.  
எனக்கு இதெல்லாம் ஆச்சரியம்.  நான் பார்த்த ஸ்டெல்லா புரூஸ் எதற்கும் கலங்க மாட்டார்.  யாராவது பிரச்சினைகளுடன் அவரைச் சந்தித்தால் அதைத் தீர்த்து வைப்பார்.  எப்போதும் உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருப்பார்.  
ஹேமா அவர் எதிர்பார்த்தபடி ஒரு ஜ÷லை மாதம் இறந்து விட்டார். ஸ்டெல்லா புரூஸôல் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் எல்லோரிடமும் கொடுக்க ஆரம்பித்தார்.   இதன் உச்சக்கட்டம் ஹேமாவின் நகைகள் எல்லாவற்றையும் திருப்பதியில் உள்ள கோயிலில் போடச் சொலலி ஒரு நண்பரிடம் கொடுத்தது. இதைப் போல ஒரு பைத்தியக்காரத்தனம் எதாவது உண்டா என்று எனக்கு அப்போது தோன்றியது.  ஸ்டெல்லா புரூஸ÷டம் ஒரு குணம் உண்டு.  அவர் யார் பேச்சையும் கேட்கமாடடார்.  ஹேமா இறந்து போய் ஆறு மாதங்கள் ஆனாலும், ஸ்டெல்ô புரூஸ் துக்கத்தின் உச்சத்தில் இருந்தார்.  அப்போதுதான் அவருக்கு நண்பர்களின் ஆதரவு தேவைப்பட்டது.  ஆனால் யார் அவருடன் இருந்து அவர் துக்கத்தைப் போக்குவது.  எப்போதோ அவருடைய உறவினர் வட்டமும் அவரைக் கை விட்டுவிட்டது.  வாழ்க்கையில் எந்தப் பிடிமானமும் இல்லாமல் இருந்தார். 
நாம் பலருடன் பழகினாலும் அறுபது வயதைத் தாண்டி விட்டால் நமக்கு நண்பர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள்.  நம்முடன் பேசவும் மாட்டார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது என்பது இயலாத காரியம்.   
 67 வயதான ஸ்டெல்லா புரூஸ் இதை ஏன் புரிந்து கொள்ளவில்லை.  ஒரு முறை டிரைவ் இன்னில் பிரமிளைப் பார்த்தேன்.  அப்போது அவர் ஒன்று சொன்னார்.  அமெரிக்காவில் நம்மைப் பார்த்து யாராவது பேச வேண்டுமென்றால் அதற்கு பணம் தர வேண்டுமாம்.  பணம் கொடுத்தால் ஒரு சில மணி நேரங்கள் நம்மிடம் நட்புடன் பேசுவார்களாம். அவரும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் தணித்துதான் இருந்தார்.  
ஸ்டெல்லா புரூஸ் தனியாக  இருப்பது ஆபத்து என்று எச்சரித்தார் ஒரு மனோதத்துவ மருத்துவர்.  அவருடைய சொந்தக்காரர் வீட்டில் போய் இருக்கச் சொல்லுங்கள்.  அல்லது சொந்தக்காரர் யாராவது இருந்தால் அவருடன் இருக்கச் சொல்லுங்கள்,ý என்றார் அவர்.   எல்லாம் அவர்தான் முயற்சி செய்யவேண்டும்.  அவர் விஷயத்தில் யாரும் வந்திருந்து தலையிட முடியாது.  
அவர் உயிரோடு இருந்தபோது நான் சில எழுத்தாள நண்பர்களை அழைத்துக் கொண்டு போயிருக்கிறேன்.  அவர்கள் எல்லாம் அவர் துக்கத்தைக் கேட்டு தாங்க முடியாமல் ஓடியே போய்விட்டார்கள்.  தேவராஜ் என்ற நண்பர்தான் ஒருசில நாட்கள் அவருடன் அங்கு தங்கியிருக்கிறார்.  அவரும் அங்கு தங்கி அவதிப்ட்டு அங்கு போவதையே நிறுத்திக் கொண்டு விட்டார்.
அவர் தங்கியிருந்த இடம் அவர் மனைவியின் ஹேமாவின் சகோதரனின் வீடு.  சகோதரன் அந்த இடத்தை விட்டு அவரைக் காலிப் பண்ணச் சொல்லி நச்சரித்தார்.  உண்மையிலேயே அவர் ஹேமா இல்லை என்றான பிறகு அந்த இடத்தை விட்டுப் போயிருக்க வேண்டும்.  ஸ்டெல்லா புரூஸ் அதைச் செய்யாமல் ஹேமா நினைவாக அங்கயே உருகிக் கொண்டிருந்தார்.  ஒருவர் இல்லாவிட்டால் ஒருவர் தனியாக இருப்பது எப்படி என்பது கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது எனக்கு.
ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதத்தை இங்கு தர விரும்புகிறேன்.
“கடந்த 67 வருட எனது வாழ்க்கை பற்றி வருத்தங்கள் இல்லை.  எளிய, உண்மையான, அடக்கமான மனிதனாக ஆடம்பர சிந்தனை துளியும் இல்லாமல்  வாழ்ந்திருக்கிறேன்.  கண்ணை இமை காப்பதுபோல என்னைப் பார்த்து அலாதியான காதலுடன் நேசித்து பத்திரப்படுத்தி, அபூர்வ, ஆனந்த மனைவியாக என் மனைவி வாழ்ந்தார்.
எத்தனை பிறவியானாலும் இதை மறக்க மாட்டேன்.  நானும், அவளும், வாழ்ந்த வாழ்க்கை அற்புதமான, ஆன்மீகமான இலக்கிய தன்மையான காவியம்.  ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கை சூனியமாக இருக்கிறது.  என்னால் அதைத் தாங்க முடியவில்லை.  தனிமை சிறை கடும் தன்மையாக என்னை நெரிக்கிறது.  எனவே நான் ஹேமாவிடம் செல்கிறேன்.  மரணத்தின் கதவுகளை திறந்து, வாழ்க்கை தண்டனை ஆகிவிடும்போது மரண விடுதலை பெறுகிறேன்..”
இந்த இடத்தில் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.  ஸ்டெல்லா புரூஸ் இறந்து போய் ஹேமா உயிரோடு இருந்தால், ஸ்டெல்லா புருஸ் செய்துகொண்ட மாதிரி அவர் மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்.  ஸ்டெல்லா புரூஸ்தான் இப்படி செய்து கொண்டு விட்டார். 
மனைவியை இழந்துவிட்ட அவதியை வெ. சாமிநாதசர்மா என்ற அறிஞரும் üஅவள் பிரிவுý என்ற தலைப்பில் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார்.  அவருடைய பதிப்பாளருக்கு அவர் எழுதிய கடிதத் தொகுதியே அந்தப் புத்தகம்.
6.3.1956ல் வெ சாமிநாதசர்மா இப்படி எழுதி உள்ளார் :
“எனது வாழ்க்கைக்கு வெளிச்சம் அளித்து வந்த ஒளி விளக்கு அணைந்து விட்டது.  இவ்வளவு சீக்கிரத்தில் அணைந்து விடுமென்று நான் எதிர்பார்க்கவில்லை.  நினைக்கவுமில்லை.  சிறிது காலமாக – ஏன்? இரண்டு வருஷங்களுக்கு மேலாக அது மங்கலாக எரிந்து கொண்டிருந்ததென்னவோ வாஸ்தவம்.  அப்படி எரிந்து கொண்டிருந்தாலும் எரிந்து கொண்டிருக்கிறதேயென்பதில் எனக்கு ஒருவித திருப்தி இருந்து வந்தது.  அந்த மங்கலான வெளிச்சத்தைத் துணையாகக் கொண்டு இன்னும் சிறிது காலம்ட தட்டுத்தடுமாறியாவது வாழ்க்கைப் பாதையில் செல்வோம் என்ற நம்பிக்கையும் தைரியம் இருந்தன.  இப்பொழுதோ? ஒரே இருட்டு.  அந்த இருட்டினால் திகைப்பு, புலம்புவதைத் தவிர வேறொன்றும் எனக்கு இப்பொழுது தெரியவில்லை.” என்கிறார்.
இப்படி பத்து கடிதங்களுக்கு மேல் பிரசுராலரயத்தினருக்கு எழுதி உள்ளார். 
  வெ சர்மா இப்படியெல்லாம் எழுதினாலும், மனைவியின் மறைவுக்காக தற்கொலை செய்து கொள்ளவில்லை.
விருட்சம் வெளியீடாக ஸ்டெல்லா புரூஸின் 3 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்.  25 வருடக் கதை என்ற அவருடைய சிறுகதைத் தொகுதி, இரண்டாவது புத்தகம், என் நண்பர் ஆத்மாநாம் என்ற அவருடைய கட்டுரைத் தொகுதி, மூன்றாவது புத்தகம் நானும் நானும் என்ற அவருடைய கவிதைத் தொகுதி.  கவிதைத் தொகுதியை காளி-தாஸ் என்ற பெயரில் எழுதி உள்ளார்.   அவர் ஞாபகர்த்தமாக இந்த மூன்று புத்தகங்களையும் பாதி விலையில் கொடுப்பதாக உள்ளேன்.
அதாவது 25 வருடக் கதை என்ற சிறுகதைத் தொகுதி விலை ரூ50 அதை ரூ25க்குத் தர உள்ளேன்.  அதேபோல் என் நண்பர் ஆத்மாநாம் என்ற கட்டுரைத் தொகுதி ரூ. 100 விலை.  இதை ரூ.50க்குத் தர உள்ளேன். 134 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  நானும் நானும் என்ற கவிதைத் தொகுதி விலை ரூ.50.  அதை ரூ.25க்குத் தர விரும்புகிறேன்.  
காளி-தாஸ் என்கிற ஸ்டெல்லா புரூஸ் என்கிற ராம்மோஹனின் ஒரு கவிதையுடன் அவரை நினைவுப்படுத்தும் இக் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.
மனிதப் போக்குவரத்து

நான்
போய்க் கொண்டிருக்கிறேன்
அவர்
கொஞ்சம் தள்ளி
போய் கொண்டிருக்கிறார்
இன்னொருவர்
இன்னும் கொஞ்சம் தள்ளி
ஒருவர் 
போய் சேர்ந்து விட்டார்
சற்று பின்னால் ஒருவர்
வருகிறார்
மற்றொருவர்
இப்போதுதான் புறப்படுகிறார்
யாரும்
யாரோடும் போகவில்லை
ஆனால்…

ஏன் கடுமையாக இருந்தது இன்றைய பொழுது?

அழகியசிங்கர்


இன்றைய பொழுது எனக்கு இவ்வளவு கடுமையாக இருக்குமென்று நினைக்கவில்லை.  காலையில் 2 மணிக்கு எழுந்து என் உறவினர் ஒருவரை டில்லி ராஜாதானி வண்டியில் சென்டரல் ரயில்வே ஸ்டேஷனலில் ஆறு மணிக்குள் கொண்டு விட முனைப்புடன் இருந்தேன்.  அதனால் தூக்கம் கெட்டு விட்டது.

பின் சென்டரல் ஸ்டேஷனலிருந்து திரும்பி வந்தவுடன் தம்பியைப் பார்க்கச் சென்று விட்டேன்.  திரும்பவும் வீட்டுக்கு வரும்போது மணி மதியம் இரண்டாகி விட்டது.  அசதி.  தூங்கி விட்டேன்.  எழுந்தபோது மணி 4 ஆகிவிட்டது.  சென்டரல் ரயில்வே நிலையத்தில் நான் இருந்தபோது தினமணி பேப்பர் வாங்கினேன்.  கதிரில் என் நண்பர் நா கிருஷ்ணமூர்த்தியின் சித்ரா செம பிஸி என்ற கதையைப் படித்தேன்.  சா கந்தசாமியின் கலையில் ஒளிரும் காலம் என்ற கட்டுரையைப் படித்தேன்.
தினமணி பேப்பரின் நடுப்பக்கத்தை நான் எப்போதும் பார்க்காமல் இருக்க மாட்டேன்.  தமிழ் மணி என்ற பெயரில் வரும் எல்லாம் உபயோகமாக இருக்கும்.  குறிப்பாக நான் விரும்பிப் படிக்கும் பகுதி கலா ரசிகன் பகுதி.
போனவாரம் அவர் எழுதிய குறிப்புகளைப் படித்தபோது ய மணிகண்டன் எழுதிய ந. பிச்சமூர்த்தி கட்டுரைகள் புத்தகம் பற்றி எழுதியிருந்தார். நான் உடனே அந்தப் புத்தகத்தை வாங்கிவிட்டேன்.

இன்றைய தினமணி இதழில் கலா ரசிகன் நேர் பக்கம் என்ற என் புத்தகம் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதி இருந்தார்.  அசந்து விட்டேன்.  என்னால் நம்ப கூட முடியவில்லை.  நான் கலா ரசிகனைப் பார்த்திருக்கிறேன்.  அவர் கூட்டத்தில் பேசியதைக் கேட்டிருக்கிறேன்.  ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது.  கூட்டத்தில் அவர் நெருங்க முடியாத தூரத்தில் இருப்பார்.

நேற்று நான் சாருநிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு அசோகமித்திரன், வைதீஸ்வரன் சகிதமாக சென்றிருந்தேன்.  சாருநிவேதிதா அக் கூட்டத்தில் ஒன்று சொன்னார்.  எழுத்தாளர்களை நாம் யாரும் கொண்டாடுவதில்லை என்று.  அவர் சொன்னது உண்மையான வார்த்தை. சாரு இன்னொன்று சொன்னார்.  எழுத்தைத் தவிர நான் வேறு எதுவும் யோசிப்பதில்லை என்று.

உண்மையில் நான் பழகிய பல நண்பர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அசோகமித்திரனை எடுத்துக் கொண்டால், புத்தகம் படிப்பது, கதை எழுதுவது, கட்டுரை எழுதுவது என்று பல ஆண்டுகளாக செய்து கொண்டு வருகிறார்.  ஞானக்கூத்தன் கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது, கவிதைகளைப் பற்றி சிந்திப்பது என்றுதான் இருப்பார்.  இப்படி எனக்குத் தெரிந்து பலர் அப்படித்தான் இருக்கிறார்கள்.  எனக்குத் தெரிந்து சாரு நிவேதிதா இந்த விஷயத்தில் இன்னும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

சினிமாக்காரர்களிடம் உள்ள ஒற்றுமை எழுத்தாளர்களிடம் இல்லை என்று தோன்றும்.  உண்மையில் சினிமாக்காரர்களை விட வலிமையானவர்கள் எழுத்தாளர்கள்தான்.  அவர்களிடம் ஒற்றுமை கிடையாது.  ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள மாட்டார்கள்.  பேச மாட்டார்கள்.   பேசவே மாட்டார்கள் என்கிற போது பாராட்டு மட்டும் செய்து கொண்டு விடுவார்களா.  நிச்சயமாக இருக்காது. பின் எழுதவதால் ஒரு பயனும் கிடையாது.  பத்திரிகையில் பிரசுரம் ஆகும் அல்லது ஆகாமல் போய்விடும்.  பணம் பெரிதாக கிடைக்காது.
புத்தகமாக வந்தாலும் விற்காது.   புதியதாக எழுதுபவர்களுக்கு பெரிய போராட்டமாக எழுத்து இருக்கும்.  இந்தத் தருணத்தில்தான் நான் தினமணியில் எழுதும் கலா ரசிகனை பாராட்டுகிறேன்.

விசாரணை என்ற சினிமா படக் கூட்டத்திற்கு பேச வந்த கௌதம சித்தார்தன் என்ற என் எழுத்தாள நண்பர், அங்கு திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு விட்டார்.  இலக்கியக் கூட்டத்தில் 20 பேர்கள்தான் வருவார்கள் என்று புலம்பவும் செய்தார்.  இலக்கியக் கூட்டங்களுக்கு கூட்டம் வருவதில்லை என்று கௌதம சித்தார்தன் கலங்கத் தேவையில்லை.  அங்கு வருபவர்கள் வேறு.  இலக்கியக் கூட்டத்தில் பேசுபவர் கௌதம சித்தார்தனாக இருந்தால், அவர் முன்னால் இருப்பவர்கள் எல்லோரும் கௌதம சித்தார்தான்களாக இருப்பார்கள்.  வராதவர்கள் கௌதம சித்தார்தன் என்ன பேசுவார் என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். பொருட்படுத்த மாட்டார்கள்.       

மாலை 4 மணிக்கு மனைவியுடன் மடிப்பாக்கத்திற்குச் சென்று விட்டேன். பள்ளிக்கூட ஆண்டு விழாவில் என் பேத்தி நடனமாடுவதைப் பார்க்கச் சென்றோம். ஒரே தாங்க முடியாத கூட்டம். அந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்க்க முடியவில்லை.  ஏமாற்றத்துடன் வீடு திரும்பி விட்டோம்.  இரவு எட்டு மணிமேல் ஆகிசிட்டது. ஆனால் இன்றைய பொழுது ஏன் அவ்வளவு கடுமையாக இருக்கிறது.

கலா ரசிகன் என் புத்தகம் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதியதை உங்கள் பார்வைக்கு அளிக்க விரும்புகிறேன்.  
அவரை நான் சந்தித்ததில்லை. ஆனால், அவருடைய எழுத்துகளைப் படித்திருக்கிறேன். நான் அவரிடம் பேசியதில்லை. ஆனால், அவரது இலக்கியப் பங்களிப்புகள் பற்றி என்னுடைய நண்பர்களிடம் பலமுறை சிலாகித்துப் பேசியிருக்கிறேன். தமிழில் வெளிவரும் இலக்கியச் சிற்றேடுகளில் தரமானதும், தனித்துவம் வாய்ந்ததுமான இதழ் அழகியசிங்கரின் “நவீன விருட்சம்’. அதில் நான் எழுதியதில்லை. ஆனால், அதில் வெளிவரும் கட்டுரைகளை ஆர்வத்துடன் படித்திருக்கிறேன்.
1988-ஆம் ஆண்டிலிருந்து “நவீன விருட்சம்’ இலக்கியச் சிற்றேட்டில் அழகியசிங்கர் எழுதிய சில கட்டுரைகளைத் தொகுத்து “நேர் பக்கம்’ என்கிற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார், ஒரு தேசிய வங்கியில் 36 ஆண்டுகளாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கும் அழகியசிங்கர். ஏற்கெனவே இவரது “அழகியசிங்கர் கவிதைகள்’, “வினோதமான பறவை’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. சில கதைகள், 406 சதுர அடிகள், ராம் காலனி, ரோஜா நிறச் சட்டை என்று இவருடைய சிறுகதை,
குறுநாவல் தொகுதிகளும் வெளிவந்திருக்கின்றன.
“நேர் பக்கம்’ தொகுப்பின் சிறப்பம்சம், பல்வேறு இலக்கிய ஆளுமைகள் குறித்த அழகியசிங்கரின் தனிப்பட்ட அனுபவங்களும் பதிவுகளும். எந்தவொரு மனிதரைக் குறித்தும் ஒவ்வொருவரின் பார்வையும் வெவ்வேறாகத்தான் இருக்கும். ஒவ்வொருவருக்கும், அந்த ஆளுமையைக் குறித்துச் சொல்ல, பதிவு செய்ய புதிதாக ஏதாவது செய்தி இருக்கும். அதனால், நான் மிகவும் ஆர்வத்துடன் இந்தப் புத்தகத்தைப் படித்ததில் வியப்பில்லை.
சி.சு.செல்லப்பா, க.நா.சு., நகுலன், அசோகமித்திரன், நீல பத்மநாபன், வைத்தீஸ்வரன், பிரமிள், வெங்கட் சாமிநாதன், ஸ்டெல்லா புரூஸ் இவர்களுடைய எழுத்தைத்தான் எனக்குத் தெரியுமே தவிர, அவர்களைத் தெரியாது. அவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பும் எனக்கு அமையவில்லை. அவர்களுடனான அழகியசிங்கரின் அனுபவங்களும், பதிவுகளும் எனக்குப் புதிய பல செய்திகளை, அவர்கள் குறித்த முன்பு அறியாத பார்வையை அறிமுகப்படுத்தின.
தொடர்ந்து “நவீன விருட்சம்’ இதழையும், இப்போது “நேர் பக்கம்’ புத்தகத்தையும் படிப்பதனால், அழகியசிங்கர் குறித்த எனது கருத்தையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இவர் வங்கி வேலையில் தொடராமல், பத்திரிகை உலகில் நுழைந்திருந்தால் எட்டியிருக்கக்கூடிய உயரம் மிகமிக அதிகமாக இருக்கும். ஆழமான கருத்துகளும், இயல்பான எளிய நடையும் கவிஞர் அழகியசிங்கரை இனம் பிரித்துக் காட்டுகின்றன.
“நேர் பக்கம்’ புத்தகத்தை இன்னொரு முறை படிப்பதற்காகத் தனியாக எடுத்து வைத்திருக்கிறேன்.
இன்றைய தினமணி நடுப்பக்கத்தில் கலாரசிகன் என்ற புனைபெயரில் ஆசிரியர் கே வைத்தியநாதன் வாராவாரம் எழுதும் பத்தியில் வந்திருப்பது தான் மேலே நீங்கள் வாசித்தது… அதன் இணைப்பைக் கீழே தந்துள்ளேன்…அதை க்ளிக் செய்தால் முழு பத்தியையும் வாசிக்க முடியும்.

அங்கும் இங்கும்……..2

அழகியசிங்கர்

சமீபத்தில் நான் இரண்டு கூட்டங்களுக்குச் சென்றேன்.  ஒரு கூட்டம் ரவி சுப்பிரமணியனின் திருலோகம் என்றொரு கவி ஆளுமை. இன்னொரு கூட்டம் விசாரணை படத்தைப் பற்றிய பாராட்டு கூட்டம்.  இந்த இரண்டு கூட்டங்களிலும் உட்கார இடம் கிடைக்கவில்லை. ரொம்ப நேரம் நின்றுகொண்டு ஒரு கூட்டத்தை ரசிக்க முடியவில்லை.  ரவி சுப்பிரமணியன் கூட்டத்தில் உள்ளே இருப்பதை விட வெளியே பேசக் கிடைத்த நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.  பல நண்பர்களைச் சந்தித்தேன்.  ரொம்ப நாட்கள் கழித்து தமிழ் மணவாளனைச் சந்திந்தேன்.  தமிழ் மணவாளனைப் பார்த்தால் கட்டாயம் சில நண்பர்களைப் பற்றி விஜாரிப்பேன். குறிப்பாக ப்ரியம் என்ற நண்பரைப் பற்றி விஜாரிப்பேன்.  பிறகு அமிர்தம் சூர்யாவைப் பற்றி விஜாரிப்பேன்.  தமிழ் மணவாளன் பிஎச்டி முடித்ததை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.  மாதவரம் என்ற இடத்திலிருந்து அவர் ரவி சுப்பிரமணியன் கூட்டத்திற்கு வந்திருக்கிறார்.  அதுவும் டூ வீலரில் வந்திருக்கிறார்.  நான் அதுமாதிரி டூ வீலரில் வந்தால் என் ரத்த அழுத்தம் அதிகமாகக் காட்டும். ஒரு மாதிரி ஆகியிருப்பேன்.  மேற்கு மாம்பலத்திலிருந்து வருவதே எனக்குக் கஷ்டமாக உள்ளது.  அதாவது டூ வீலரில்.

திருலோகம் என்றொரு கவி ஆளுமை என்ற டிவிடியைப் பாதி வரை பார்த்தேன்.  அவருடைய ஜெயகாந்தனைப் பற்றிய ஆவணப் படம் சிறப்பானது.  இதில் திருலோக சீதாராம் என்ற அறிஞர் இப்போது நம்மிடம் இல்லை.  இல்லாத ஒருவரைப் பற்றியதுதான் இந்த ஆவணப்படம்.  இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும்போது (அதாவது பாதிவரை பார்த்ததில்) பல இல்லாதவர்களைப் பற்றிய படமாக தோன்றியது இது.  பாரதியார், பாரதிதாசன், திருலோக சீதாராம் என்று யாரும் இல்லாதவர்கள்தான்.  முழுதாகப் பார்த்துவிட்டு இதைப் பற்றி எழுத வேண்டும்.

இரண்டாவது கூட்டம் விசாரணை படம் பற்றியது.  ஒரே கூட்டம்.  தாங்க முடியவில்லை.  ஐந்து மணிக்கு கூட்டம் ஆரம்பிக்க வில்லை.  கூட்டம் ஆரம்பிப்பதே 6 மணி மேல்  ஆகிவிட்டது.  கூட்டத்தைப் பார்த்து பயந்து வீட்டுக்குப் போய்விடலாமா என்று யோசித்தேன்.  கதவை திறந்து விடும்போது கூட்டம் முண்டி அடித்துக்கொண்டு ஓடியது.  இடம் இருக்குமென்று நானும் உள்ளே நுழைந்தேன்.  ஒரு இடம் கூட இல்லை.  நம்மால் பொறுமையாக எத்தனை நேரம் நின்று கூட்டத்தை ரசிக்க முடிகிறது என்பதை சோதிக்க நினைத்தேன்.  பாரதிராஜா வந்தவுடன், கூட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது.  எல்லோரும் பரபரப்பாக பேசினார்கள்.  கௌதம சித்தார்த்தன் பேசும்போது தொண்டை அடைத்துப் போய் பேசுவதுபோல் தோன்றியது.  அவரும் விசாரணை படத்தைப் பாராட்டிப் பேசினார்.  லீனா மணிமேகலை பேசும்போது சில கேள்விகளை வெற்றி மாறனைக் குறித்து கேட்டார். பாமரன் என்பவர் பேசியது எனக்குப் பிடித்திருந்தது.  அடுத்தது சாரு நிவேதிதா.  நானும் சாரு நிவேதிதாவும் ஒரே மாதிரியான கருத்தைதான் விசாரணை குறித்து வைத்திருக்கிறோம்.  ஆனால் சாரு நிவேதிதா இன்னும் சில கருத்துகளை விசாரணை குறித்து குறிப்பிட்டார்.  இசை சரியில்லை என்று குறிப்பிட்டார். ஆனால் இசை சிறப்பாக உள்ளது என்கிறார் ராமகிருஷ்ணன்.  அஜயன்பாலா சப்தத்தை சிறப்பாகப்  படத்தில் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

ராமகிருஷ்ணன் பேச வரும்போது இரவு 9 ஆகிவிட்டது.  என்னால் இரண்டு மணி நேரமாக ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்க முடியவில்லை. அதனால் வீட்டுக்கு வந்து விட்டேன்.   சுருதி டீவியில் எல்லாவற்றையும் அழகாகப் படம் பிடித்து வைத்திருக்கிறார்கள்.  எப்போதும் வேண்டுமானாலும் யாரும் பார்க்கலாம்.    எல்லோர் பேசுவதையும் நன்றாகவே யாரும் கேட்க முடியும். கூட்டத்திற்கு முண்டி அடித்துக் கொண்டு போயிருக்க வேண்டாமென்று தோன்றியது.  
20ந்தேதி விருட்சம் சார்பில் நடைபெற்ற  ராம் நாடகங்களைப் பற்றிய கூட்டத்தில் ராம் சிறப்பாக நாடகம் பற்றிய அனுபவத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார்.  அன்று அவர் பேசியது மனதிலிருந்து பேசியது போலிருந்தது.   நான் ஆடியோவில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.  அதை யூ ட்யூப்பில் ஏற்ற வெளிநாடு சென்றுள்ள கிருபானந்தன் திரும்பி வருவதற்காகக் காத்திருக்கிறேன்.   அவர் வந்தவுடன் ஏற்றி விடலாம்.

இந்த சுருதி டீவிக்காரர்கள் யார் என்று தெரியவில்லை.  அவர்கள் ராம் கூட்டத்தையும் பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  கூட்டங்களை நேரில் பார்ப்பதுபோல் உள்ள உணர்வை சுருதி டிவிக்காரர்கள் உருவாக்குகிறார்கள்.  அவர்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்.     

சமீபத்தில் பார்த்த இரண்டு படங்கள்

அழகியசிங்கர்

சமீபத்தில் நான் இரண்டு தமிழ்ப் படங்களைப் பார்த்தேன்.  ஒன்று இறுதிச் சுற்று.  இன்னொன்று விசாரணை.  என்னால் விசாரணையை விட இறுதிச் சுற்று என்ற படத்தை ரொம்பவும் ரசிக்க முடிந்தது. விசாரணை என்ற படம் பார்ப்பவர்களை தலை கீழாக கவிழ்க்கும் தன்மை கொண்டது.  
பொதுவாக சினிமாப் படங்களை யாரும் பொழுது போக்கும் அம்சமாகக் கருதிதான் பார்க்கிறார்கள்.  நான் இந்த இரு படங்களையும் பார்த்துவிட்டு வரும்போது, இறுதிச் சுற்று பார்த்த திருப்தியை விசாரணை பார்க்கும்போது எனக்கு ஏற்படவில்லை. 
வெற்றிமாறன் துணிச்சலாக இந்தப் படத்தை எடுததிருப்பதாக சொல்கிறார்கள்.  ஆனால் படம் பார்க்க வருபவர்களுக்கு இந்தப் படம் என்ன சொல்கிறது?  இதன் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்ள முடிகிறது.  போலீஸ்காரர்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்றா?   
இறுதிச் சுற்று ஒரு மெல்லிய காதல் கதை.  எப்போதும் போல உள்ள காதல் கதை.  மீனவக் குப்பத்தில் உள்ள சுட்டிப்பெண்ணான ரித்திகாசிங்கை பாக்ஸராக்கி வெற்றி பெற செய்கிறார் மாதவன்.  எல்லா பொழுது போக்கு அம்சங்களையும் கொண்ட ஒரு கிளுகிளுப்பான படம்தான் இறுதிச்சுற்று.  
ஆனால் விசாரணையோ ஆரம்ப காட்சியிலிருந்து அடி அடியென்று அடிக்கிறார்கள்.  ஆந்திராவில் மளிகைக் கடையில் வேலை செய்யும் திணேஷ் உள்ளிட்ட நான்கு நண்பர்களையும் செய்யாத திருட்டை ஒப்புக் கொள்ள செய்ய அடிக்கிறார்கள்.  மிரள வைக்கும் காட்சிகளாக இது காட்டப் படுகிறது.  இப்படி ஒரு சாதராண திருட்டு வழக்கிற்காகவா இது மாதிரியான தண்டனையை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்று தோன்றுகிறது.
ஒவ்வொரு மனிதனின் ஆழ் மனதிலும் ஒரு பயம் இருக்கிறது.  அது அறிந்தோ அறியாமலோ இருக்கிறது.  விசாரணை போன்ற படத்தைப் பார்க்கும்போது ஆழ் மனதின் பயத்தைக் கிளற செய்கிறது. மேலும் படத்தின் கடைசி காட்சி வேறுவிதமாக இருக்குமென்று நம்பினேன்.  அதாவது தினேஷ் மட்டும் தப்பித்துப் போய் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உண்மையைச் சொல்வதுபோல் வரும் என்று நினைத்தேன்.  ஆனால் அந்தக் காட்சி இன்னும் வன்முறையில் முடிந்து விடுகிறது.  விசாரணை என்ற பெயரில் அப்பாவியான இளைஞர்கள் படும் கொடுமையை மட்டும் காட்டவில்லை இந்தப் படம்.  போலீஸ்காரர்கள் ஒருவருக்கு ஒருவர் கொலைகாரர்களாக மாறுவதுபோலவும் காட்டப் படுகிறது.  இது ஒருபடம் என்ற முறையில் பார்த்தாலும், 
சமுத்திரகனி கண்காணிப்பில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் விஜாரணை கைதியாக வரும் கிஷோர் விஜாரணை என்ற பெயரில் கொலை செய்யப்படுகிறார்.  இப்படியா போலீஸ் அவர்களுக்குள்ளேயே வன்மத்தைக் காட்டிக் கொள்வார்கள்.  சினிமாப் படம் என்றாலும், நம்ப முடியவில்லை.  
நாம் பார்க்கும் ஒவ்வொரு படத்திலும் நாம் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.  எப்படி நம்மால் ஒரு படத்தை ரசிக்க முடிகிறது.  அபத்தமாக ஒரு படம் இருக்கிறது. லாஜிக் இல்லாமல் ஒரு படம் இருக்கிறது என்பதாக எதையும் நான் அர்த்தம் பண்ணிக் கொள்ளவில்லை.  நிஜ வாழ்க்கை என்பது வேறு, சினிமா என்பது வேறு.  அது நிழல் உருவ வாழ்க்கை.
ஆரம்பத்தில் ஒரு படம் துன்பத்தைச் சொல்வது போல் ஆரம்பித்தால், முடிவில் துன்பம் மாறிவிடும்.  அல்லது ஆரம்பத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு படம் இறுதியில் துன்பத்தில் முடிவதாக இருக்கும். இப்படி மாறி மாறி காட்டி மக்களை பரவசப்படுத்துவார்கள்.  எத்தனையோ எத்தனையோ விதங்களில் இப்படியெல்லாம் காட்சிப் படுத்தப்படுகின்றன.  
இறுதிச் சுற்றில் மாதவனால் சமாளிக்க முடியாத ஒரு பிரச்சினையை மீனவக் குடும்பத்தில் உள்ள சுட்டிப்பெண் நிறைவேற்றுகிறாள்.  அந்தக் கடைசிக் காட்சியில் அந்தப் பெண் ஓடிவந்து எங்கோ ஒரு மூலையில் இருக்கும் மாதவனை கட்டித் தழுவுவாள்.  
ஆனால் விசாரணை அப்படி அல்ல.  ஆரம்பத்திலேயே அடி அடியென்று அடிக்கிறார்கள்.  போலீஸ்காரர்கள் இவ்வளவு கொடுமைகாரர்களா என்று எல்லோரையும் பயமுறுத்துகிறார்கள். சரி படம் முடிவிலாவது துன்பத்திலிருந்து மகிழ்ச்சிக்கு மாறும் தருணம் இருக்கிறதா என்று பார்த்தால் எதவுமில்லை.  ஆட்களே இல்லாமல் எல்லோரையும் சாகடித்து விடுகிறார்கள்.
வெற்றி மாறனை எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.  அந்தக் கொண்டாடத்திற்கு நான் குறுக்கே நிற்கப் போவதில்லை.  என் கருத்துகளை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். 

என் நாடக முயற்சி

அழகியசிங்கர்


இந்த மாதம இருபதாம் தேதி  அதாவது நேற்று விருட்சம் இலக்கியச் சந்திப்பில் üநானும் என் நாடகங்களும்ý என்ற தலைப்பில் எஸ் எம் ஏ ராம் சிறப்பாகப் பேசினார்.  அன்று முழுவதும் எனக்கு நேரமே சரியாகக் கிடைக்கவில்லை.  என் வீட்டில் உள்ளவர்கள் மகாமகத்திற்குக் கிளம்ப ஆயுத்தமாக இருந்தார்கள்.  அவர்களுக்கு உதவி செய்யும் சூழலில் நான் மாட்டிக்கொண்டிருந்தேன்.  ராம் நாடகங்கள் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தேன்.  இன்னும் முழுதாகப் படித்து முடிக்கவில்லை.  முதல் மூன்று நாடகங்கள் படித்து விட்டேன்.  எப்போ வருவாரோ நாடகம் படிக்க ஆரம்பிக்கும்போது படிக்க நேரம் கிடைக்காமல் அவதிப்பட்டேன்.   
விருட்சம் கூட்டத்தில் ராம் எப்படி ஒவ்வொரு நாடகத்தையும் எழுத நேர்ந்தது என்பதைப் பற்றி பேசினார்.  நானும் ஒரு காலத்தில் நாடகப் பித்து, சினிமாப் பித்து.  அந்தக் காலத்தில் சோ நாடகங்களை ரசித்துப் பார்ப்பேன். ராணி சீதையம்மாள் அரங்கில் பல வங்கிகள் சேர்ந்து பல நாடகங்களை போட்டிக்காக அரங்கேற்றம் செய்யும்.  பார்த்து ரசித்திருக்கிறேன். அது மாதிரி நாடகங்கள் ஏன் சபாவில் வரவில்லை என்ற வருத்தம்  அப்போதே உண்டு.  ஏன்எனில் சபா நாடகங்கள் பெரும்பாலும் அசட்டுத்தனமான ஜோக்குகளை உள்ளடக்கி இருக்கும்.  டிவியில் சீரியல் கூட அப்படி இல்லை. வீதி நாடகங்கள் பார்த்திருக்கிறேன்.  அவற்றில் பிரச்சார நெடி தலை தூக்கும்.  அப்படியும் இப்படியுமாய் குதிப்பார்கள்.  முகத்தை ஒருவிதமாக வைத்துக்கொள்வார்கள். சுவரொட்டிகள் என்ற முத்துசாமி நாடகத்தைப் பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் ஆனால் பெரிதாக புரிந்துகொண்ட பாவனையில் அங்கு உள்ளவர்களைப் பார்த்தபடி வந்திருக்கிறேன்.  சமீபத்தில் நான் ரசித்த ஒரு நாடகம் அம்ஷன்குமார் வங்காள மொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்த  வேலி என்ற நாடகம்.  
பரீக்ஷா நாடகத்தில் பங்கு கொண்டு நடித்திருக்கிறேன். அதுவும் ஒரே ஒரு பாத்திரத்தில். அப்பாவி இளைஞனாக நான் நடித்திருப்பேன்.  அறந்தை நாராயணனின் மூர் மார்க்கேட் என்ற நாடகம் அது.  அந்த நாடகம் நடித்துவிட்டு வீடு திரும்பியபோது, ராத்திரி முழுவதும் தூக்கம் வராமல் அவதிப்பட்டதுண்டு.  மேடையில் ஒரே ஒரு முறைதான் அப்பாவி இளைஞன் மேடையில் வருவான்.  அதுவும் பாதி மேடை வரை.  அன்று தூக்கத்தில் அந்த அப்பாவி இளைஞன் மேடையில் நடந்து போவதுபோல் நடந்து நடந்து போய்க் கொண்டிருந்தேன்.  அப்புறம் யோசித்தேன்.  நடிப்புக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று. பின்னாட்களில் நிஜந்தன் நாடகங்களில் நடித்தபோது இந்த உண்மை பட்டவர்த்தமாக தெரிந்தது. இப்போது நடிக்கக் கூப்பிட்டால் போய் நடிப்பேன்.  ஆனால் வசனம் பேசாத நாடகமாக இருக்க வேண்டும்.  வசனம் பேசும்போதுதான் பிரச்சினை வந்து விடுகிறது.  கேட்பவர்க்கும் வந்து விடுகிறது.  எனக்கும் வந்து விடுகிறது.  
நாடகம் நடத்திக் காட்டப்படும் நிகழ்வு கலை.  ஆனால் அதில் நடிப்பது என்பதும், ஒரு நாடகத்தை அரங்கேற்றம் செய்வதும் அவ்வளவு சுலபமான விஷயமல்ல.   எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.  நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு முறை நாடகம் ஒன்றை எழுதி அதை அரங்கேற்றம் செய்தோம்.  நான் குடியிருந்த வீட்டு உரிமையாளர்தான் என் நாடக அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தார்.  அவர்தான் அந்த நாடகத்தை டைரக்ட் செய்தார். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் நாடகத்தில் பெண்களே கிடையாது.  எல்லோரும் ஆண்கள்.  இரண்டு வில்லன்கள்.  நான் ஒரு வில்லனாக நடித்தேன்.  என் நண்பன் பெருமாள் இன்னொரு வில்லன்.  உண்மையாகவே அவன் வில்லனாக அந்த நாடகத்தில் மாறிவிட்டான் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிவில்லை.  நாடகப்படி நான் வசனம் பேசி அவன் கையிலிருந்து கத்தியைப் பிடுங்க வேண்டும்.  பெருமாள் என்னிடம் கத்தியைக் கொடுக்கவில்லை.  லேசில் அவன் கையிலிருந்து கத்தியை வாங்க முடியவில்லை. அதனால் என் பலத்தைப் பிரயோகம் செய்து அவனிடமிருந்து கத்தியைப் பிடுங்கும்படி ஆகிவிட்டது.  அடுத்தக் காட்சியில் என் தம்பி போலீஸ்காரன்.  அவன் நடந்து வரும்போது மைக்கைத் தட்ட மைக் உயிர் விட சத்தம் போய்விட்டது.  நாடகமும் அவுட். போதும் நாடகம் போட்டது  என்று சொல்லி முழுதாக முடிக்கப்படாமலே நாடகத்தை நிறுத்திவிட்டார்கள்.   நின்று விட்டதே என்ற வருத்தம் எனக்கு.  ஆனால் பெருமாளைப் பார்த்துக் கேட்டேன்,’ஏன் கத்தியைப் பிடுங்க வந்தபோது, கத்தியைக் கொடுக்கவில்லை,’ என்று. ‘நீ இன்னும் கொஞ்சம் வசனம் பேச வேண்டும், ஏன் பேசவில்லை,’ என்றான்.  படுபாவி. நான்தான் அந்த நாடகத்தையே எழுதியவன்.  என்னிடம் இன்னும் கொஞ்சம் வசனம் எதிர்பார்த்திருக்கிறான். 
வணிக ரீதியாக ஒரு நாடகத்தை அரங்கேற்ற ஒரு குழு முயற்சி செய்தது. அதில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.  ஒரு பெண்ணைப் பார்த்து நான் காதல் வசனம் பேச வேண்டும்.  ஒரு முறை பேசும்போது வசனம் தடுமாறியது.  வசனத்தை ஞாபகப்படுத்திக்கொண்டு பேசும்போது, டைரக்டர் என்னைக் கூப்பிட்டுக் கேட்டார்.  ‘ஆமாம்.  நீங்கள் அந்தப் பெண்ணைப் பார்த்து வசனம் பேசும்போது, உங்கள் மார்பில் ஏன் கையை வைத்துக்கொண்டு வசனம் பேசுகிறீர்கள்.’ என்று கேட்டார். என்னை அறியாமல் வசனம் பேசும்போது கை போய்விடுகிறது என்று தோன்றியது. என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.  
நாடகம் அரங்கேற்றம் செய்வது அவ்வளவு சுலபமான விஷயமில்லை.  ஆனாலும் எங்கள் வீட்டு உறவினரின் திருமண வைபவத்தில் நானும் என் ஒன்றுவிட்ட சகோரரும்  நாடகம் நிகழ்த்தியிருக்கிறேன்.  எல்லாம் தத்துப்பித்துன்னு இருக்கும்.  நான் சிறுகதை, கவிதை, கட்டுரை என்று எழுதினாலும், உள்ளுக்குள் நாடகம் எழுத வேண்டுமென்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும்.  நானும் சில நாடகங்களை எழுதிப் பார்த்தேன். எனக்கு என் மீதே நம்பிக்கை இல்லை. நடிப்பதிலும் நம்பிக்கை இல்லை, நாடகம் எழுதுவதிலும் நம்பிக்கை இல்லை.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் நான் ரங்கராஜனை சந்தித்தேன்.  அவர் நாடகவெளி என்ற பத்திரிகை நடத்திக்கொண்டு வந்தார்.  ஒவ்வொரு மாதமும் நாடக வெளி இதழைப் பார்க்கும்போது எனக்கும் ஒரு நாடகம் நாடகவெளியில் எழுதி வெளிவர வேண்டும் என்ற  ஆசை இருந்துகொண்டே இருக்கும்.  அதே சமயத்தில் சந்தேகமும் இருக்கும.  வெளி ரங்கராஜன் என் நாடகத்தைப் பிரசுரம் செய்வாரா என்று.   அப்போது ராம் எழுதிய எப்ப வருவாரோ நாடகம் பிரபலமானது.  எல்லோரும் அதைப் பற்றி பேசுவார்கள்.  நாடக வெளியில் வந்திருந்த அந்த நாடகத்தை அரங்கேற்றமும் செய்திருந்தார்கள்.  எனக்கோ ஒரு நாடகமாவது நாடகவெளியில் பிரசுரமாக வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.
நானும் ஒரு நாடகம் எழுதி விட்டேன்.  நான் அடிக்கடி சந்திக்கும் நண்பர்களில் ரங்கராஜனும் ஒருவர்.  தயங்கி தயங்கி நாடக வெளிக்கு நாடகத்தைக் கொடுத்தேன்.  உண்மையில் நாடக வெளி அந்த நாடகத்தைப் பிரசுரம் செய்யாவிட்டால் நவீன விருட்சத்தில் பிரசுரம் செய்து விடலாமென்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  உண்மையில் விருட்சம் கவிதை கதைக்கான பத்திரிகை.  அதில் நாடகம் வருவது சரியாக இருக்காது.
ஆனால் வெளி ரங்கராஜன் என் நாடகத்தை பிரசுரம் செய்து விட்டார்.  என் நாடகத்தின் பெயர் அகாலத்தில் வந்தவர்கள்.  ஒவ்வொரு முறையும் அந்த நாடகத்தை யாரையாவது நடிக்க வைத்து அரங்கேற்றம் செய்ய வேண்டுமென்று நினைப்பேன்.  அதில் ஒரு பாத்திரத்தில் நானும் நடிக்கலாமென்று யோசிப்பேன்.  நாடகமாகப் போட முடியவில்லை என்றால் குறும்படமாக எடுத்தால் என்ன என்றெல்லாம் இப்போதும் எனக்குத் தோன்றிகொண்டிருக்கிறது.  
இன்று ராம் நாடகம் பற்றி பேசும்போது எனக்கு சில ஆச்சரியங்கள். ஒவ்வொரு நாடகத்தையும் எந்த முறையைப் பயன்படுத்தி எழுதிக்கொண்டு போயிருக்கிறார் என்று அவர் விவரித்துச் சொன்னார்.  அவருடைய நாடகங்களை பலர் பாராட்டி உள்ளார்கள். நாடகமாக பலர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  இந்திரா பார்ததசாரதி அவர் நாடகத்தை சிலாகித்து எழுதியிருக்கிறார்.    
ஆனால் நான் எழுதிய நாடகம் பிரபலமாகவில்லை. எனக்கு நாடகம் பற்றி எந்தக் குறிக்கோளும் இல்லை.  ந முத்துசாமி மாதிரி நாடகம் எழுத முடியாது என்று தோன்றும்.   ஆனால் இந்திரா பார்த்தசாரதி மாதிரி நாடக முயற்சி செய்யலாம் என்று நினைபபேன்.   நேற்று விருட்சம் கூட்டம் முடிந்து வீடு வரும்போது, ராஜாமணி என்ற நண்பரிடம் பேசிக்கொண்டு வந்தேன்.  அகாலத்தில் வந்தவர்கள் என்ற என் நாடகத்தை மேடை ஏற்றினால் எவ்வளவு செலவாகும் என்று கேட்டேன்.  குறைந்தது பத்தாயிரம் ஆகும் என்றார். அதுவும் ரிஹர்சலுக்காக டீ காப்பி டிபன் செலவுக்காக ஆகும் தொகையாம். இன்னும் நாடக அரங்கத்தைப் பிடிக்க அதிகம் செலவாகும் என்றார். சபாக்காரர்களைப் பிடிக்க முடியாதாம்.  நாடகம் நடத்தி விடலாம்.  ஆனால் பார்க்க எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்பதில் எந்தவித உத்திரவாதமும் இல்லை என்றார்.
மனிதன் நாடகம் போட வேண்டுமென்ற ஆசையைக் கொன்று விட்டார். இப்போது தோன்றுகிறது நாடகம் அரங்கேற்றம் செய்வதை விட, இன்னும் நாடகம் எழுதலாமாவென்று.  
அகாலத்தில் வந்தவர்கள் என்ற என் நாடகத்தை தனிமையில் வாய்விட்டு படித்துக் கொண்டிருக்கிறேன்.

நானோ காரும், நானும், நவீன விருட்சம் 99வது இதழும்….

அழகியசிங்கர்
இது மாதிரி தலைப்பில் எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது.  நவீன விருட்சம் 99வது இதழ் வந்து விட்டது.  கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு மேல் நவீன விருட்சம் இதழுடன் பயணம்.  
திங்கட்கிழமை காலையில் அச்சகத்தாருடன் போனில் பேசினேன். “இதழ் ரெடியாய் இருக்கு.  வந்து எடுத்துக்கொள்ளுங்கள்,” என்றார் அச்சகத்தார்.
“எப்படி வருது?  ஆட்டோவில் போட்டு எடுத்துக்கொண்டு வந்துடலாமா?” என்று கேட்டேன்.
“ஏன் சார், உங்க கிட்டேதான் நானோ கார் இருக்கே..அதில கொண்டு போங்களேன்,”என்றார்.
நானோ காரை எடுத்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள பிரஸ்ஸிலிருந்து விருட்சம் இதழ் பிரதிகளை அள்ளிக்கொண்டு வருவதை நினைத்து யோசனையாக இருந்தது. ஏனென்றால் நான் நானோ கார் ஓட்டும் ஜாம்பவானாக இருந்தாலும், திருவல்லிக்கேணி சந்துகளில் ஓட்டும திறமைசாலியா என்பது தெரியவில்லை.
என்னை தைரியப் படுத்தவே என் மனைவி பக்கத்தில் இருந்து கொண்டிருப்பாள்.
“ஏன் நானோவில் போகிறீர்கள்?  ஆட்டோவை எடுத்துக்கொண்டு போங்கள்…பீக் ஹவர்ஸில் உங்களுக்கு கார் ஓட்ட வராது,” என்று பிரேக் போட்டாள்.
எனக்கோ கோபமான கோபம்.  தினமும் நான் நானோ காரை அசோக்நகரில் உள்ள பெண்கள் படிக்கும் கார்ப்பரேஷன் பள்ளியில் நிறுத்திவிட்டு பின் ஒரு வாக் பண்ணிவிட்டு நானோ காரை ஓட்டி  வீட்டுக்கு வந்து விடுவேன்.  இப்படி இருக்கும் நான் ஒரு நல்ல சந்தர்பபம் விருட்சம் எடுத்துவர கிடைத்தால் சும்மாவா விடுவது.
ஆனாலும் மனைவி பிரேக் போட்டதில் கொஞ்சம் உதறல்.  பின் மனைவியைத் திட்ட ஆரம்பித்தேன்.  “எப்போதும் காரில் எங்காவது போகிறேன் என்றால், போய் வாருங்கள், என்று சொல்ல பழகிக்கொள்,”என்றேன்.
திரும்பவும் அச்சகத்தாரிடம் போன் செய்தேன்.  “ஏம்பா அந்தப் பெரிய தெருவில் நுழைய முடியாது காரை வைத்துக்கொணடு, இல்லையா?” என்றேன்.
“சார், நீங்கள் பெல்ஸ் ரோடு வழியாக என் கடைக்கு வந்து விடுங்கள். எதாவது பிரச்சினையாக இருந்தால் எனக்குப் போன் செய்யுங்கள், என் டிரைவரை அனுப்புகிறேன்,”என்றார்.
சாமியைக் கும்பிட்டு விட்டு காரை எடுத்து ஓட்ட ஆரம்பித்தேன்.  உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் என் மனைவி என்னிடம் காட்டிக்கொள்ள வில்லை.
வண்டியை மெதுவாக ஓட்டிக்கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையை எட்டினேன்.  பின் மெதுவாக பீச் பக்கமாக திருப்பினேன்.  பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த அரசாங்க பஸ்ஸின் உருமல் காதில் விழுந்தது. நான் நிதானமாக ஓட்டிக்கொண்டு கண்ணகி சிலைக்கு எதிரில் உள்ள தெருவில் திரும்பி, பெல்ஸ் தெருவில் காரைத் திருப்பினேன்.  என்னைத் தாண்டிக்கொண்டு பல டூ வீலர்கள் பறந்து கொண்டிருந்தன.  பெரிய மனது பண்ணி அவற்றையெல்லாம் போக விட்டேன்.  ஆட்டோக்களை நினைத்தால் கொஞ்சம் பயமாகவே இருந்தன.  வேறொரு கிரகத்திலிருந்து வந்த  மனிதர்கள் மாதிரி அவர்கள் ஆட்டோக்களை ஓட்டிக்கொண்டு வந்தார்கள்.   
தெரியாமல் பெரிய தெருவில் போவதற்கு இந்து பள்ளிக்கூடம் பக்கம் திரும்பி விட்டேன்.  பெரிய ஆபத்தை சந்தித்தேன்.  நானோ கார் எதிரில் குப்பை வாரும் வண்டியைப் போல பெரிய வண்டி.  ஒரு பக்கம் டூ வீலர்களை சார்த்தி வைத்திருந்தார்கள்.  எப்படியும் இடிக்காமல் போக முடியாது.  வண்டியை நகர்த்தத் தெரியாமல் வண்டியை நிறுத்தி விட்டேன்.  மனைவி கிளம்பும்போது தடுத்தது சரியாகிப் போய்விடும் என்று தோன்றியது.  
யாரோ ஒருவர் ஒரு டூ வீலரை நகர்த்தி என்னைப் போக அனுமதித்தார்.  எப்படியோ தப்பித்துக்கொண்டு அச்சகத்திற்கு வந்து விட்டேன்.  உலக பெரிய சாதனை மாதிரி நான் வண்டி ஓட்டிய மகாத்மத்தை அச்சகத்தாரிடம் சொன்னேன்.  அவர் சிரித்தபடியே, ‘உங்களை விட பெரிய காரை வைத்திருக்கிறேன்,’ என்றார்.  ஒரு வழியாக நவீன விருட்சம் 99வது இதழ் என் வீட்டிற்கு இப்படித்தான் வந்து சேர்ந்தது.
இதழ் திருப்தியாக வெளிவந்திருந்தது.  வழக்கம்போல் பலருடைய படைப்புகள் கொண்ட இதழ்தான் இது.
இதழுக்கு பங்களிப்பு அளித்தவர்களின் படைப்புகள் பற்றிய குறிப்பை இங்கு அறிவிக்கிறேன் :
இதழின் அட்டை ஓவியம் : கவிஞர் வைதீஸ்வரன்.
1. கோயிலுக்குள் ஒரு யானை – ஞானக்கூத்தன்        4
2. என் பூனைகள் – சாரலஸ் புக்கோவ்ஸ்கி – 15
தமிழில் : ராமலக்ஷ்மி 
3. தனித்துவங்கள் – கவிதை – ராமலக்ஷ்மி            17
4. தப்பித்தல் – கவிதை – ராமலக்ஷ்மி          18
        5. சின்ன சின்ன லயங்கள் – வைதீஸ்வரன்          18
9. பிரேதத்துடன் ஒரு பயணம் – சிறுகதை – 
ராஜகோபாலன்                          19
10. கோப்பைகள் – கவிதை – பானுமதி ந.          23
11. தீப்பெட்டி – கவிதை – உமாபாலு            24
12. சார்வாகன் (1929-2015) – அசோகமித்திரன் 25
13. வெள்ளம் பற்றிய கவிதை – அழகியசிங்கர் 27
14. பிரிவுபசாரம் – சிறுகதை -அசோகமித்திரன்    28
15. ஒரு திரைப்படம் ஒரு நினைவு – பிரபு         32
16. சங்கதிகள் – கவிதை – ஜெ பாஸ்கரன்         36
17. யாழ்பாணம் தெட்சணாமூர்த்தி – அழகியசிங்கர் 37
18. புத்தக விமர்சனம் – அழகியசிங்கர்         40
19. புரியவில்லை – சிறுகதை – ஸிந்துஜா         43
20. நடப்பியல் – கவிதை – நீல பத்மநாபன்         50
21. கழுதைகளின் உலகம் – சா இளையராஜா 50
22. இந்திய அரசியல் சாஸனம் – அசோகமித்திரன் 51
23. காத்தவராயன் – கவிதை – வளவ துரையன்         53
24. கவிஞர் சிறகா கவிதைகள் இரண்டு 54
25. டீ – சிறுகதை – அழகியசிங்கர்                 56
26. நினைவுகளின் நிழல்கள்-சிறுகதை-
ஜெ பாஸ்கரன்                                 65
27. 13வது சென்னை சர்வேத திரைப்படவிழா 70
28. ஞானக்கூத்தன் கவிதை                         74
29. மரணத்தின் கண்ணாடி – காவேல்கர்         75
30. விஷ்ணுபுர விருதும் தேவதச்சனும் 79
இந்த இதழ் சென்னையில் மூன்று இடஙகளில் இப்போதைக்குக் கிடைக்கும்.  1. நியூ புக்லேண்ட்ஸ், தி நகர், சென்னை 17 2. டிஸ்கவரி புத்தக பேலஸ், கே கே நகர், சென்னை 3. காந்தி புத்தக நிலையம், கிரோம்பேட்டை ரயில்வே நிலையம். 
யாருக்காவது பத்திரிகை வேண்டுமென்றால் என்னை இ மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும். navina.virutcham@gmail.com
தனி இதழ் நவீன விருட்சம் விலை ரூ.15.  ஆண்டுச் சந்தா ரூ.60.  தப்பித்தவறி சந்தா அனுப்பவேண்டுமென்று உங்கள் மனசில் பட்டால்
Name of the Account : NAVINA VIRUTCHAM, 
BANK :   INDIAN BANK, ASHOKNAGAR BRANCH.
IFSC CODE : IDIB 000A031 என்ற கணக்கில் அனுப்பவும்.  
நவீன விருட்சம் அடுத்த இதழ் 100வது இதழ்.  இன்னும் அதிகப் பக்கங்களுடன் கொண்டு வர உள்ளேன்.  தயவுசெய்து படைப்புகளை யுனிகோட்டில் அடித்து    navina.virutcham@gmail.com அனுப்பவும்.  

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 20


நானும் என் நாடகங்களும்



பேசுவோர் : எஸ் எம் ஏ ராம்


இடம் : அலமேலு கல்யாண மண்டபம
அகஸ்தியர் கோயில் பின்புறம்
19 ராதாகிருஷ்ணன் தெரு
தி நகர், சென்னை 600 017

தேதி 20.02.2016 (சனிக்கிழமை)
நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : எஸ் எம் ஏ ராம் என்கிற பெயரில் எழுபதுகளின் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய இவரது முழுப் பெயர் எஸ் மோகன் அனந்தராமன்.1979 ஆம் ஆண்டு வெளி வட்டங்கள் என்ற பெயரில் நாவல் எழுதி உள்ளார்.70 களின் இறுதியில் நவீன நாடகங்கள் என்ற அடையாளத்தோடு, வடிவம், உள்ளடக்கம், இவை இரண்டிலும் மரபு நாடகங்களிலிருந்து மாறுபட்டனவாய்த் தமிழில் புதிதாய்க் கிளர்ந்தெழுந்த நாடக மறுமலர்ச்சி இயக்கத்தில் இவர் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எஸ் எம் ஏ ராம் நாடகங்கள் என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளார். விற்பனைக்கு அப் புத்தகம் கூட்டத்தில் கிடைக்கும்.

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர் – ஆடிட்டர் கோவிந்தராஜன்

கூட்டம் பற்றிய அறிவிப்பை எல்லோரும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.


புத்தக விமர்சனம் 17

புத்தக விமர்சனம் 17
அழகியசிங்கர்
சோ சுப்புராஜ் எழுதிய துரத்தும் நிழல்கள் என்ற சிறுகதைத் தொகுதியை எடுத்து வைத்துக்கொண்டேன்.  20 சிறுகதைகள் கொண்ட 196 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  சுப்புராஜின் இந்தத் தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளும் பல பத்திரிகைகளில் பிரசுரமான கதைகள்.  இதிலிருந்து ஒன்று தெரிகிறது.  சுப்புராஜ் அவர்களுக்கு அவருடைய கதைகள் எல்லாம் பத்திரிகைகளில் பிரசுரமாகும் சூட்சுமம் தெரிந்திருக்கிறது.  அவர் எது எழுதினாலும் எதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பினால் போதும் பிரசுரமாகி விடுகிறது.  அவரும் விடாமல் பல கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். உன்னதம் பத்திரிகையில் ஒரு கதையும், நவீன விருட்சம் பத்திரிகையில் ஒரு கதையும் பிரசுரமாகி உள்ளன.  அக் கதைகளை வேறு எங்காவது அனுப்பி இருந்தாலும் பிரசுரமாகி இருக்கும்.
சரி, அப்படியென்றால் தரம் இல்லாத கதைகளையா அவர் எழுதுகிறார் என்றால் அப்படி சொல்லவில்லை.  பலவிதமான கதைகளை அவர் எழுதிக்கொண்டு போகிறார்.  பலவிதமாக கற்பனை செய்கிறார்.  அவர் எழுத்து சமுதாயத்தின் மீது அவருக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை வெளிப்படுத்துகிறது.  பெண்களுக்கு ஏற்படும் தீங்கு, ஜாதி கண்ணோட்டத்தில் ஒரு ஜாதியை கீழ்த்தரமாகப் பார்ப்பது என்று வலுவான தீம்களை எடுத்து எழுதுகிறார்.  
ஒரு பெண் தனியாக வெளிநாடு போய்ப் படுகிற அவதிகளை ஒரு கதையில் சொல்கிறார்.  அப்படிப் போகிற பெண்  படிப்பறிவு இல்லாதவளாக இருக்கிறாள்.  இழிந்த ஜாதியில் பிறந்ததால், அதிகமாகப் படித்திருந்தாலும் பரம்பரையாகப் பார்த்து வந்த கக்கூஸ் கழுவற வேலையைப் பார்க்க நேருகிற கொடுமையை விவரிக்கிறார். இது மாதிரி தலித் கதைகள் அதிகமாக இந்தத் தொகுதியில் உள்ளன.  இன்னொரு கதையில் ஒரு பள்ளி மாணவி போலீஸ் ஸ்டேஷனலில் கற்பழிக்கப் படுவதைக் குறிப்பிடுகிறார்.  ஊர் அந்தக் கொடுமையான சம்பவத்தைக் கேள்விப்பட்டு போலீஸ் ஸ்டேஷனையே கொளுத்தி விடுகிறார்கள்.  ஆனால் அதன் பின் கொடுக்கும் ட்விஸ்ட்தான் கதையை நம்ப முடியாமல் செய்கிறது. கற்பழிக்கப்பட்ட பெண் என்றால், மன ரீதியில், உடல் ரீதியில் அந்தப் பெண்ணுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்பதை அரசாங்கம் உறுதி படுத்திவிடும்.  அவள் கர்ப்பமாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு.  ரொம்ப வருடங்களுக்கு முன் எஸ் எஸ் ஆர் விஜயகுமாரி நடித்தப் படம் பூமாலை என்ற படம்.  அதில் எஸ்எஸ்ஆர் குடி வெறியில் விஜயகுமாரியைக் கற்பழித்து விடுவார்.  அதனால் கல்யாணம் ஆகாத விஜயகுமாரி கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொள்வதாக கதை.  இது மாதிரியான பேத்தல் படத்தை இப்போது நம்மால ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. 
தாமரை என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கதை.  கற்பு என்னும் குறும்படத்தின் கதைச் சுருக்கம் (பக்கம் 155).  எடுக்கப்படும் படத்திற்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை என்பதை இக் கதை எடுத்துக் காட்டுகிறது.  நாடக பாணியில் வேடிக்கையாக எழுதப்பட்ட கதை இது.  
ஒரு தற்கொலை; சில குறிப்புகள் (பக்கம் 1) என்ற கதையில் வெறும் மிரட்டலுக்குப் பயந்து ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொள்கிறது. மனது உருகும்படி இந்தக் கதையை எழுதி உள்ளார். ஆனால்  நம்ப முடியவில்லை. 
கண்கள் இரண்டினில் ஒன்று (பக்கம் 16) என்ற கதை தினமணி கதிரில் வெளிவந்த இலக்கியச் சிந்தனை பரிசுப் பெற்ற கதை.  ஒரு பெண்பிளளையைத் தொடர்ந்து படிக்க அனுப்பாத ஒரு குடும்பத்தின் கதை.  பாண்டியம்மாள் என்ற அந்தப் பெண் படிப்பில் கெட்டிக்காரியாக இருக்கிறாள்.  ஆனால் என்ன பிரயோஜனம்.  அவள் பெரியவள் ஆனவுடன் அவள் படிப்பை குடும்பத்தினர்கள் நிறுத்தி விடுகிறார்கள்.  பெண் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ள குடும்பம்.  மேலே படிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் கதை இது.  வழக்கம்போல் சரளமாக எழுதப்பட்ட கதை.  
விஷம் (பக்கம் 20) என்ற கதையைப் படிக்கும்போது எனக்கு தி ஜானகிராமன் எழுதிய கதையும் ஞாபகத்திற்கு வருகிறது.  சாதத்தில் பல்லி விழுந்து செத்துக் கிடக்கிறது.  அந்தச் சாதத்தைப் பிசைந்து தயிர்சாதமாக தன் கணவன் சுந்தரம் எடுத்துக்கொண்டு போய் விடுகிறான்.  பல்லியின் விஷம் தன் கணவனைப் பாதிக்கும் என்ற பதைப்பை கடைசிவரை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார் கதையில்.  எப்படியோ அவன் ஆபிஸில் சுந்தரத்தைப் பார்த்து விடுகிறாள்.  கோலாலம்பூரை பின்புலமாகக் கொண்டு இக் கதை எழுதப்பட்டுள்ளது.  மொழி தெரியாத ஒரு இடத்தில் கணவன் பணிபுரியும் இடத்தை அடைவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது.  இத்தனை பரபரப்பையும் காடடிவிட்டு இறுதியில் யாரோ அந்த டிபன் பாக்ஸ் சாதத்தை சாப்பிட்டு விடுகிறார்கள் என்று முடிக்கிறார். கடைசி வரை பரபரப்பை கூட்டிக்கொண்டு போகிறார்.  இது கணையாழியில் வெளிவந்த கதை. 
கடைசிவரை பெயரை ஞாபகப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு அலுவலக நண்பரைப் பற்றிய கதைதான் ஒரு பெயர் சில ஞாபகங்கள்  (பக்கம் 29) என்ற கதை.  எதிர்பாராதவிதமாய் பஸ்ஸில் சந்திக்கும்போது அவனைப் பற்றிய எல்லா சம்பவங்களும் ஞாபகத்திற்கு வருகிறது.  அவன் பெயர் மட்டும் பிடிபட மாட்டேங்கறது.  விபத்தில்தான் அந்த நண்பனின் பெயர் ஞாபகததிற்கு வருகிறது.  தினமணிகதிரில் வெளிவந்த கதை.  
கொஞ்ச நீளமான கதைதான் துரத்தும் நிழல்கள் (பக்கம் 39) என்ற கதை.  2007ஆம் ஆண்டு கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசுபெற்ற கதை.  கழிவறையைச் சுத்தம் செய்யும் நரசய்யா என்பவனைப் பற்றிய கதை. இழிந்த சாதியில் பிறந்தால் காலமெல்லாம்  மலம் அள்ளிக்கொண்டுதான் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை கதை மூலம் சுப்புராஜ் எழுப்புகிறார்.  ஒரு தலித் பார்வையில் எழுதப்படட கதை.
நிலமென்னும் நல்லாள் (பக்கம் 51) என்ற கதையில் கதையின் முடிவு எப்படி இருக்குமோ என்ற பயம் வந்து கவ்விக்கொண்டது.  ஆனால் காளியப்பனுக்கு சாதகமாக முடிந்தது.  
பொதுவாக சுப்புராஜ் கதைகளில் வெளிநாடுகளில் தங்கி பணிபுரியும் தமிழர்களின் நிலையைப் பற்றி அக்கறையுடன் எழுதப்படுகிற கதைகள் அதிகம்.  வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் உலகம் பற்றி நமக்கு பெரிதாக தெரிவதில்லை.  அந்தப் பதிவை ஓரளவு சுப்புராஜ் நிறைவேற்றி வைப்பதாக தோன்றுகிறது.  
ஜாதி கொடுமை இவர் கதைகளில் சற்று தூக்குதலாக தெரிகிறது.  பல கதைகளில் இந்த ஜாதி பிரச்சினையை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். பல கதைகளில் இந்தப் பாட்டைப் பாடும்போது மொத்தமாக இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது சற்று நெருடலாகத் தெரிகிறது.
இவர் கதைகளில் உருக்கத்தை நெகிழும்படி செய்து விடுகிறார். தினமணி கதிரில் வெளிவந்த கருணையின் நிழல்கள் (பக்கம் 140) என்ற கதை ஓர் உதாரணம். 
துரத்தும் நிழல்கள் – சிறுகதைகள் – சோ.சுப்புராஜ் – வெளியீடு : காவ்யா – 16 இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 600 024 – தொலைபேசி : 044 – 23726992,9840480232 – புத்தக விலை :  ரூ.150 – வெளியான ஆண்டு : 2012

மறந்து போன பக்கங்கள்….

அழகியசிங்கர்

தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள ஆறாவது கவிதை பழம்பெருமை.  நெளிந்தது புழு என்று ஏன சொல்கிறார்? குலப்பெருமை பேசி என்ன பயன் என்கிறாரா?  ஒரு புதுக்கவிதையைப் படிக்க படிக்க பலவிதமாக யோசனை செய்துகொண்டே இருக்கலாம்.  ஆனால் இப்படி நினைப்பதுதான் இறுதி என்று சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை. 
 
     பழம்பெருமை
குழம்பு மாங்கொட்டை
குலப் பெருமை பேசிற்று;
நட்டுவைத்துக்
காத்திருந்தேன்;
நெடுமரமும் மரக்கனியும்
நிழலாச்சு !
நெளிந்தது
புழு!