ரோஜா நிறச் சட்டை

என்னுடைய சிறுகதைத் தொகுதியான ரோஜா நிறச் சட்டை மின்னூலாக வந்துள்ளது. ஒரு விதத்தில் பா ராகவன் தூண்டுதல் இப் புத்தகம் வர உதவியது. மேலும் என் நண்பர் கிருபானந்தன் இப் புத்தகத்தை மின்னூலாக மாற்ற உதவி செய்தார். ஏற்கனவே நேர் பக்கம் என்ற கட்டுரைத் தொகுதி மின்னூலாக உள்ளது. AMAZONKINDLE ல் KDPAMAZON. COM போய்ப் பார்க்கவும்.

இரண்டு புத்தகங்கள்

இந்த முறை புத்தகக் காட்சியை முன்னிட்டு என்னுடைய இரண்டு புத்தகங்கள் வர உள்ளன. இதைத் தவிர இன்னும் சில எழுத்தாளர்களின் புத்தகங்களும். ஒவ்வொன்றாக முகநூலில் அறிமுகப்படுத்த உள்ளேன். ஒரு புத்தகம். üதிறந்த புத்தகம்ý என்ற பெயரில் உள்ள என் கட்டுரைத் தொகுப்பு. 207 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது. விலை : ரூ.170. இரண்டாவது என் முழுக் கதைத் தொகுப்பு. 664 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.600. ஆனால் புத்தகக் காட்சி அன்று வர உள்ளதால் சலுகை விலையாக ரூ.300க்கு இப் புத்தகம் தர உள்ளேன். இப் புத்தகத்தை வரும் 13.01.2018 க்குள் முன் பதிவு செய்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதுவரை பதிவு செய்தவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொலைபேசி மூலமாகவும், இ மெயில் மூலமாகவும் பதிவு செய்துகொண்டவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Name of the Account : NAVINA VIRUTCHAM,
BANK : INDIAN BANK, ASHOKNAGAR BRANCH.
ACCOUNT NUMBER No. 462584636
`IFSC CODE : IDIB 000A031
Tel No. 9444113205 e mail: navina.virutcham@gmail.com

அழகியசிங்கர் கதைகள்

விருட்சம் வெளியீடாக ‘அழகியசிங்கர் கதைகள்’ என்ற பெயரில் என் முழுத் தொகுப்பைக் கொண்டு வர உள்ளேன். வருகிற 12ஆம் தேதி புத்தகம் தயாராகிவிடும். 650 பக்கங்களுக்குக் குறையாதப் புத்தகமாக வருகிறது. 64 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், 1 நாடகம், ஐந்தாறு சின்னஞ்சிறு கதைகள். நான் முதன்முதலாக எழுதிய கதையிலிருந்து இப்போது எழுதி இருக்கும் கதை வரை கொண்டு வந்திருக்கிறேன். எப்படி கதை எழுத வந்தேன், எப்படி கதையை எழுதுகிறேன் என்று ஒரு கட்டுரை தயார் பண்ணி எழுதி முடித்திருக்கிறேன். இதுவரை விருட்சம் வெளியீடாக கெட்டி அட்டைப்போட்ட புத்தகமாக எதையும் நான் கொண்டு வந்ததில்லை. மேலும் இவ்வளவு பக்கங்களுக்கு எந்தப் புத்தகமும் கொண்டு வந்ததில்லை. என்னுடைய முழு கதைத் தொகுதியை இவ்வாறு கொண்டு வருகிறேன். இன்னும் சில தினங்களில் புத்தகமும் தயாராகிவிடும். இது சம்பந்தமாக எளிமையான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளேன்.

6 குறுநாவல்கள் கணையாழியில் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. ‘அங்கிள்’ என்ற என் சிறுகதைக்கு கதா விருது கிடைத்திருக்கிறது.

650 பக்கங்களுக்கு மேல் உள்ள இப் புத்தகத்தின் விலை ரூ.600. ஆனால் 12ஆம் தேதிக்குள் வாங்குபவர்களுக்கு ரூ.300 க்குத் தர உத்தேசித்துள்ளேன். தபால் செலவு அதிகமாகும் என்பதால், சென்னையில் உள்ளவர்கள் புத்தகக் காட்சியின்போது விருட்சம் ஸ்டாலில் வந்து வாங்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கீழ்க்கண்ட கணக்கில் பணத்தைச் செலுத்தி எனக்குத் தகவல் அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முன்பே என் அறிவிப்பைப் பார்த்து பணம் செலுத்தியவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Name of the Account : NAVINA VIRUTCHAM,
BANK : INDIAN BANK, ASHOKNAGAR BRANCH.
ACCOUNT NUMBER No. 462584636
`IFSC CODE : IDIB 000A031
Telephone Nos. 9444113205 and 9176613205

சனிக்கிழமை நடந்த கூட்டம்

ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் (16.12.2017) நான் கூட்டம் நடத்துவது வழக்கம். நான் என்று சொல்வதை விட என் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நடத்தும் கூட்டம் என்பதால் நாங்கள் என்று சொல்வது சரியாக இருக்குமென்று தோன்றுகிறது. மூகாம்பிகை காம்பௌக்ஸில் ஏழுôவது கூட்டமாக 16ஆம் தேதி ஒரு கூட்டம் நடத்தினேன். தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ரகாஷ் பற்றி பேசினார். வழக்கத்தைவிட கூட்டத்திற்கு வருபவரைவிட இந்த முறை அதிகமாகவே கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.

தஞ்சாவூர் கவிராயரைப் பார்க்கும்போது எனக்கு ஜெயகாந்தான் ஞாபகம் வருவதுண்டு. அதேபோல் தஞ்சை ப்ரகாஷ் ஸ்டெல்லா புரூûஸ ஞாபகப்படுத்துவார்.

இக் கூட்;டத்தை முழுவதும் நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். தஞ்சாவூர் கவிராயர் கூட்டத்தில் பேசும்போதும் ஜெயகாந்தனை ஞாபகப்படுத்தினார். நெகிழ்ச்சியான கூட்டம் இது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தஞ்சை ப்ரகாஷ் குறித்துப் பேசினார். ப்ரகாஷ் தஞ்சாவூரில் ஆற்றிய இலக்கியப் பணியைப் பற்றி கோர்வையாகப் பேசினார். ப்ரகாஷ் குறித்து சில புதிய தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது.

விருட்சம் சார்பாக இதுவரை நடந்த 7 கூட்டங்களும் சிறப்பாக நடந்ததற்குக் காரணம். திருப்பூர் கிருஷ்ணன் முதன் முதலா தி ஜானகிராமன் குறித்துப் பேசியதுதான் காரணம் என்று தோன்றுகிறது. இன்னும் பல எழுத்தாளர்களைப் பற்றி இக் கூட்டங்களில் தொடர்ந்து பேச வேண்டுமென்று நினைக்கிறேன். ஊரப்பாக்கத்திலிருந்து வந்திருந்து கலந்துகொண்ட தஞ்சாவூர் கவிராயருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றி.

தஞ்சை ப்ரகாஷ÷ம் தஞ்சாவூர் கவிராயர்ரும்

நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் விருட்சம் இலக்கியச் சந்திப்புக் கூட்டத்தில் தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ரகாஷ் குறித்துப் பேசப் போகிறார்.
எல்லாவிதங்களிலும் தஞ்சாவூர் கவிராயர் பேசுவது சிறப்பாக இருக்கும். ஏனென்றால் ப்ராகஷை பக்கத்ரில் இருந்து பார்த்துப் பழகியவர்.
நான் ப்ராகாஷை இரண்டு மூன்று முறைகள் சந்தித்திருக்கிறேன். அவர் உடல்நிலை சரியில்லாதபோது டாக்டர் ரெட்டியிடம்தான் சிகிச்சை எடுத்துக்கொண்டார். டாக்டர் ரெட்டி ஒரு இயற்கை மருத்துவர். அவரிடம் போய் சிகிச்சைப் பெறுகிறாரே என்ற எண்ணம் அப்போது எனக்கிருந்தது.
கடைசிவரை இலகத்தியத்தைப் பற்றி சிந்தித்திருப்பவர் ப்ராகாஷ். சும்மா இலக்கியக் கும்பல் என்ற பெயரில் தஞ்சாவூரில் கூட்டம் நடத்தினார். இக் கூட்டதில் கலந்துகொண்டவர்கள் கதைகளைப் படிப்பார்கள். பேசுவார்கள். எனக்குத் தெரிந்து அவர் ஒரு பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிகையின் பெயர் வெ சா எ. வெங்கட்சாமிநாதன் ஒருவரே அந்தப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார். இப்படி ஒரு பத்திரிகை நடத்தத் துணிச்சல் வேண்டும். ப்ரகாஷ÷டம் இந்தத் துணிச்சல் இருந்தது.
தஞ்சாவூர் கவிராயரைப் பற்றி சிலவற்றை சொல்லவேண்டும். எனக்கு அவரை அதிகமாக ஐராவதம் என்ற எழுத்தாளர் மூலம்தான் தெரியும். அவர் ஐராவதத்தைப் பார்க்க வரும்போதெல்லாம் அவர் வந்துபோனதுபற்றி செய்தி எனக்குக் கிடைத்துவிடும். இன்று அவருடைய சிறுகதைத் தொகுப்பும், கட்டுரைத் தொகுப்புகளும் புத்தகங்களாக வந்துவிட்டன. தமிழ் இந்துவில் வாரம் ஒரு முறை எழுதும் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எழுத்திலும் பேச்சிலும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

நீங்கள் தவறாமல் இக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 32வது கூட்டம் பற்றிய அறிவிப்பு.

தஞ்சை ப்ரகாஷ் குறித்து அவருடைய நெருங்கிய நண்பரான தஞ்சாவூர் கவிராயர் அவர்கள் உரை ஆற்றுகிறார். வரும் சனிக்கிழமை -16.12.2017. எல்லோரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதோ அதற்கான அழைப்பிதழ்.

மாம்பலம் டாக் பார்த்தீர்களா?

இன்று வந்துள்ள மாம்பலம் டாக் என்ற பத்திரிகையில் போஸ்டல் காலனியில் துவங்கியுள்ள நூல் நிலையத்தைப் பற்றி எழுதியிருந்தது. இன்னும் சில தகவல்களை சரியாகப் பத்திரிகையில் தரவில்லை.

புத்தகம் படிக்க விரும்புவோர் பதிவு செய்துகொண்டு வரவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒருவர் இருக்கக் கூடாது. புத்தகம் படிக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 செலுத்த வேண்டும். புத்தகம் படித்துவிட்டு அங்கயே வைத்துவிடவேண்டும். இரவல் கொடுக்கப்பட மாட்டாது. யாராவது இலவசமாக தங்களுடைய புத்தகங்களை நூல்நிலையத்திற்குக் கொடுக்கலாம்.
விருட்சம் புத்தகங்கள் விற்கப்படும். கூடவே மற்றப் பதிப்பாளர்களின் புத்தகங்களும் விற்கப்படும். ஆனால் முன்னதாகவே சொல்ல வேண்டும்.

10பேர்கள் கொண்ட கூட்டம் நடக்க அனுமதி உண்டு. ஒரு மணி நேரக் கூட்டத்திற்கு ரூ.100 தரவேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 9444113205 மற்றும் 9176613205.

விருட்சம் 31வது கூட்டம்

நேற்று (18.11.2017) விருட்சம் 31வது கூட்டம் வழக்கம்போல ஸ்ரீராம் காம்பளெக்ஸில் நடந்தது. கூட்டத்தில் சிறப்புரை ஆற்றியவர் ராஜேஷ் சுப்பிரமணியன். சில மாதங்களுக்கு முன் தற்செயலாக ராஜேஷ் அவர்களைச் சந்தித்தேன். அவர் பேசும் விதம் பிடித்திருந்தது. பல விஷயங்களைப் பற்றி பேசினார். நான் கூட்டங்களுக்கு வருவதற்கு முன்னாலே வந்திருந்து எந்தவித நோக்கமும் இல்லாமல் உதவி செய்யக் கூடியவர். அவரிடம் நீங்கள் பேச முடியுமா என்று கேட்டேன். அவர் ஒப்புக்கொண்டு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைப் பற்றி பேச ஒப்புக்கொண்டார்.
நான் இதுவரை 6 கூட்டங்களை நடத்தி உள்ளேன். முதல் கூட்டம் ஜøன் மாதம் நடந்தது. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தி ஜானகிராமனைப் பற்றி பேசினார். அடுத்து ஜøலை மாதம் நடந்த கூட்டத்தில் புதுமைப்பித்தன் படைப்புகளைப் பற்றி பெருந்தேவி அவர்கள் பேசினார்கள். மூன்றாவது கூட்டமான ஆகஸ்டில் கடற்கரை அவர்கள் ஏ கே செட்டியாரைப் பற்றி பேசினார். நான்காவது கூட்டமான செப்டம்பரில் செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் ஓஷோவைப் பற்றிப் பேசினார். ஐந்தாவது கூட்டமான அக்டோபரில் சந்தியா நடராஜன் திருவசாகத்தைப் பற்றி பேசினார். இப்போது ராஜேஷ÷ன் லத்தின் அமெரிக்க எழுத்தாளர்களைப் பற்றிய கூட்டம். எல்லாவற்றையும் நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். இதெல்லாம் ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் செம்ம கஷ்டமாக இருக்கும்.
ஒரு கூட்டத்தை நாம் எப்படி ரசிக்க முடியும்? பேசுபவரை நாம் மதிக்க வேண்டும். அவர் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது என்பதை கேட்பவர் உணர வேண்டும். நம்மில் சிலர் தீர்ப்பு கொடுத்துவிடுகிறோம். அந்தத் தீர்ப்பு ரொம்ப மோசமானது. ராஜேஷ் பேசியபோது அவர் மூலம் எனக்கு என்னன்ன தெரிய வருகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்தேன். எனக்குப் பல விஷயங்கள் தெரிய வந்தன. அவருக்கு என் நன்றி. அவர் பேசிய கூட்டத்தின் வீடியோவை நாளையிலிருந்து துவங்குகிறேன்.
இது மாதிரியான கூட்டங்களை நடத்த எனக்கு ஆரம்ப காலத்திலிருந்து ஒரு நண்பர் உதவி செய்கிறார். அவர் வேறு யாருமில்லை கிருபானந்தன் என்ற நண்பர்தான். அவர்தான் இக் கூட்டத்தைப் பற்றிய அறிவிப்பை எஸ்எம்எஸ் மூலம் அனுப்புகிறார். நீங்களும்தான் இக் கூட்டத்தை நடத்துகிறீர்கள் என்று அவரிடம் நான் சொல்வது வழக்கம். அவருக்கும் என் நன்றி. வந்திருந்தவர்களுக்கும் என் நன்றி.

200 கூட்டங்கள் நடத்தி முடித்திருப்பேன்..

நான் இதுவரை 200 கூட்டங்கள் நடத்தியிருப்பேன்.  1988ஆம் ஆண்டிலிருந்து விருட்சம் தொடங்கியதிலிருந்து கூட்டங்கள் நடத்தி வருகிறேன்.  ஆனால் நான் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தவில்லை.  நான் பதவி உயர்வுப் பெற்று பந்தநல்லூர் என்ற ஊருக்குப் போனபின் கூட்டங்கள் நடத்தவில்லை.  ஏன் நான் திரும்பவும் சென்னை மாற்றல் ஆகி வந்தபிறகு திரும்பவும் கூட்டங்களை நடத்திக்கொண்டு வருகிறேன்.  கூட்டம் என்பது ஒரு இனிமையான பொழுதைக் கழிக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.  அதற்கான முயற்சியைத்தான் செய்துகொண்டு வருகிறேன்.

கூட்டத்தில் பேசுபவரும், கூட்டத்திற்கு வருகை தருபவர்களையும் நான் முக்கியமாகக் கருதுகிறேன்.  நாளை நடைபெறும் கூட்டத்திற்கு எல்லோரும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியம முக்கியப் பங்கு வகிக்கிறது.

 

நானும் நட்ராஜனனும் தினமும் காலையில் நடை பயிற்சி செய்து கொண்டிருப்போம். ஒரு நாள் அவர் திருவாசகத்தைப் பற்றிப் பேச அது குறித்து ஆழ்ந்தத் தேடல் அவரிடம் உருவாகியது. உடனே நானும் என் புத்தக நூல் நிலையத்திலிருந்து திருவாசகப் புத்தகங்களைத் தேடினேன். சுவாமி சித்பவானந்தர் திருவசாகம் எனக்குக் கிடைத்தது.

திருவாசகத்தை போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்துள்ளார். நடராஜன் போப் எழுதிய ஆங்கில பிரதியைப் படிக்க ஆரம்பித்தார். போப்பின் சிறப்பான மொழி ஆற்றலை அறிந்து நட்ராஜனுக்கு ஆச்சரியம். உண்மையில் பரவசம் அடைந்து விட்டார்.

பக்தி இலக்கியம் நம் வாழ்க்கைக்குத் தேவையா என்ற கேள்வியைக் கேட்டு அவரை மடக்குவேன். அவர் அதற்கெல்லாம் பதில் சொல்லி என்னை அடக்கி விடுவார்.
சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் உரையாடலில் பலரும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.