Category: Uncategorized
நதியில் என் ஓடம்
நானும்
உறக்கத்தால்
பறக்கிறேன்
எதையாவது சொல்லட்டுமா……….95
அழகியசிங்கர்
ஒவ்வொருக்கும் அந்தக் கடைசி மாதம் கசப்பாகத்தான் இருக்கும். எப்போது இதிலிருந்து விடுதலை ஆகி ஓடிவிட முடியும் என்றுதான் தோன்றும். என்னுடைய கடைசி மாதத்தில் நான் அப்படி நினைத்ததில் எந்தத் தவறும் இல்லை. கடந்த 35 ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தின் நிழலில் அசையாமல் என் பொழுதை ஓட்டிவிட்டேன். ஆனால் இப்போது திரும்பவும் நினைத்துப் பார்த்தால் திகைப்பாகத்தான் இருக்கிறது.
ஒவ்வொருமுறை என் அலுவலக நண்பர் என்னிடம் போனில் பேசும்போது, அவருக்கு என் மீது பொறாமையாகக் கூட இருக்கும். ”சார் நீங்க தப்பிச்சிட்டீங்க…” என்று. ஆமாம். உண்மைதான். தொடர்ந்து இனி இருக்க முடியாது.
மார்ச்சு மாதம் முதல் தேதி. மொட்டை மாடிக்குச் சென்று சூரியனைப் பார்த்து கைகூப்பினேன். 35 வருட அலுவலக வாழ்க்கை முடிந்தது. இனி அவசரம் அவசரமாக காலை 8.30 மணிக்கே போய் வங்கிக் கதவைத் திறக்க வேண்டாம். யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம். நிம்மதி.
ஒரு மாதமாக பதவி ஓய்வுப் பெற்ற பலரிடம் பேட்டி கண்டேன். என் முதல் கேள்வி. “எப்படி பொழுது போகிறது?” என் அலுவலகத்திலேயே பணிபுரிந்து பதவி மூப்பு பெற்றவர் சொன்னார் : “பொழுதே போக மாட்டேங்கறது…காலையில் எழுந்தவுடன் பூங்கா சென்று விடுவேன். அங்கே போய் உட்கார்ந்துவிட்டு வருவேன்..” என்ன இப்படி சொல்கிறாரே என்று தோன்றியது. ஏமாற்றமாக இருந்தது. இன்னொருவர் சொன்னார் : “காலையில் பூஜை செய்ய ஆரம்பித்தால், மதியம் வரை ஓடும். அதன்பின்தான் சாப்பாடு,”என்று.
“ஐயோ போர்.. நான் வேலைக்குப் போறேன். சம்பளம் குறைச்சல்தான்…ஆனா பொழுது போகிறது..”
நான் கேட்ட யாரும் பதவியை விட்டு வந்தபின் இன்னும் அதில் ஒட்டிக்கொள்ள வேண்டுமென்று துடியாக துடிப்பவர்கள். யாருக்கும் தான் பார்த்த பதவியை விட முடியவில்லை.
சில மாதங்களுக்கு முன் பதவி மூப்பு அடைந்த என் நண்பனிடமிருந்து போன் வந்தது. “இன்சூரன்ஸில இருக்கேன்… நீ இன்சூரன்ஸ் போடு,” என்றான். நான் அவனுக்கு பதிலே சொல்லவில்லை. திரும்பவும் சில நாட்கள் கழித்து போன் செய்தான். பதில் சொல்லவில்லை. அவனும் விடவில்லை. ஒருமுறை அவனிடம் சொல்லிவிட்டேன். “ஏன் இப்படி இன்சூரன்ஸிலே வேலைப் பாக்கறே.. சும்மா இருக்க முடியாது…நமக்கு கிடைக்கிற பென்சன் பணம் போதுமே.. வீட்டில இருக்கலாமே..” என்றேன்.
“வீடு போரடிக்கிறது…யார் இருக்கிறது. முடிஞ்ச வரை வேலை பாக்கறது..” என்றான். யாரையும் திருத்த முடியாது என்று தோன்றியது.
காலையில் எழுந்தவுடன் நடைபயிற்சி போவதற்கு முன், உவேசாவின் என் சரித்திரம் புத்தகத்தில் ஒரு அத்தியாயம் படிப்பேன். பின் ஒரு சிறுகதையைப் படிக்க வேண்டுமென்று கு அழகரிசாமியின் கதை ஒன்றை எடுத்துப் படிப்பேன். பின் டைரி எழுதுவேன். சரியாக 7 மணிக்கு நடைபயிற்சிக்குக் கிளம்புவேன். நானோ காரை எடுத்துக்கொண்டு போவேன். நடைபயிற்சி ஒன்று. காரை ஓட்டறது இன்னொரு பயிற்சி. திரும்பி வரும்போது மணி ஒன்பது ஆகிவிடும்.
அன்றைய செய்தித்தாள்களைப் படிப்பேன். பின் நிதானமாக எழுந்து குளித்துவிட்டு சாப்பிட உட்காருவேன். நிதானமாக குளிப்பதை எடுத்துக்கொள்ளுங்கள். வளசரவாக்கத்தில் இருக்கும்போது இது நடந்ததா? அவசரம் அவசரமாக ஓடி எட்டரை மணிக்கு வங்கிக் கதவைத் திறக்க வேண்டும். ஒரு முறை தாமதமாக வந்தபோது, முதன்மை மேலாளர், “நீங்க சீக்கிரமாக வந்து கதவைத் திறக்க வேண்டும்,” என்றார். “சிலசமயம் அது முடியாது சார்…நான் மாம்பலத்திலிருந்து வருகிறேன்,” ”அப்படியெல்லாம் சொல்ல முடியாது. வரத்தான் வரணும்.. நீங்க வரவில்லையென்றால் மத்த ஊழியர்களை ஒன்றும் கேட்க முடியாது,” என்றார். வேற வழி. எட்டரை மணிக்கு வந்து கதவைத் திறக்க வேண்டும். அவசரம் அவசரமாகக் குளித்து, அவசரம் அவசரமாக சாப்பிட்டு, அவசரம் அவசரமாக டூ வீலரில் வளசரவாக்கம் கிறைக்கு ஓட வேண்டும்.
“என் அப்பாவிற்கு 92 வயதாகிறது….வீடு மாம்பலத்தில் இருக்கிறது. மாம்பலத்தில் உள்ள கிளையில் என்னை மாற்றினால் நன்றாக இருக்கும்,ýý என்று மேலிடத்தில் கேட்டுப் பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை. இத்தனைக்கும் நான் பதவி மூப்பு அடைய ஒரு வருடம் கூட இல்லை. “
நான் அலுவலகத்தில் இருக்கும்போது, வீட்டுக் கதவை தாளிட்டு விட்டு வந்து விடுவேன். அப்பா தானாகவே குளித்துவிட்டு, தானாகவே சாப்பிட்டுவிட்டு, பேப்பர் படித்துவிட்டு, தூங்குவார் தூங்குவார் அப்படி தூங்குவார். யாராவது பெல் அடித்தாலும் போய் திறக்க மாட்டார். போன் எதாவது வந்தால் காது கேட்காது.
எனக்கு ஞானக்கூத்தன் கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. ‘விடுமுறை தரும் பூதம்’ என்பதுதான் கவிதை.
ஞாயிறு தோறும் தலைமறை வாகும்
வேலை என்னும் ஒரு பூதம்
திங்கள் விடிந்தால் காதைத் திருகி
இழுத்துக் கொண்டு போகிறது
ஒருநாள் நீங்கள் போகலை என்றால்
ஆளை அனுப்பிக் கொல்கிறது
மறுநாள் போனால் தீக்கனலாகக்
கண்ணை உருட்டிப் பார்க்கிறது
வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல்
வீட்டில் ஒருவல் நலமில்லை
என்னும் பற்பல காரணம் சொன்னால்
ஏற்றுக் கொள்ள மறுக்கிறது
வாரம் முழுதும் பூதத்துடனே
பழகிப் போன சிலபேர்கள்
தாமும் குட்டிப் பூதங்களாகிப்
பயங்கள் காட்டி மகிழ்கின்றார்
தட்டுப் பொறியின் மந்திரகீதம்
கேட்டுக் கேட்டு வெறியேறி
மனிதர் பேச்சை ஒருபொருட் டாக
மதியாதிந்தப் பெரும்பூதம்
உறைந்து போன இரத்தம் போன்ற
அரக்கை ஒட்டி உரை அனுப்பும்
‘வயிற்றில் உன்னை அடிப்பேனெ’ ன்னும்
இந்தப் பேச்சை அது கேட்டால்
ஜனவரி மாதம் 25ஆம் தேதி கண்பொறையால் அவதிப்பட்டதால் கண் சரியாகத் தெரியவில்லை. முழுவதும் அலுவலகம் போகாமல் இருந்து விடலாமாவென்று நினைத்தேன். ஏன்என்றால் நான் பிப்பரவரி மாதம் பதவி மூப்பு அடைகிறேன்.
“கணனியைப் பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. அலுவலகத்திற்கு வாருங்கள்,” என்று தொந்தரவு செய்தார்கள் அலுவலகத்தில். டூ வீலரை ஓட்ட முடியவில்லை. அலுவலகம் போவதற்கு பஸ்ஸில்தான் போக முடிந்தது. கண் தெரியவில்லை.
கணினி முன் சும்மா போய் உட்கார்ந்து கொள்வேன். ஆனால் வேற விதமான பணியை செய்யும்படி நேரிட்டது. ஒவ்வொரு பத்திரம் பதிவு செய்யும் அலுவலகத்திற்கெல்லாம் சென்று கண் சரியாக தெரியாவிட்டாலும் கையெழுத்துப் போடும்படி நேரிட்டது. அலுவலக தொந்தரவு.
பலருக்கு பதவி மூப்பு அடைவது வருத்தமான விஷயமாக இருக்கும்போது, நானோ எப்போது வெளியே வரப் போகிறேனென்று பரபரப்பில் இருந்தேன். ஒரு வழியாக பிப்ரவரி முடிந்து வெளியே நல்லபடியாக வந்துவிட்டேன்.
ஆரியகவுடர் ரோடில் உள்ள வங்கிக் கிளையில்தான் பென்சன். வீட்டிலிருந்து நிதானமாகப் போய் வங்கிக் கிளையில் திரண்டிருக்கும் கூட்டத்தில் நின்று பாஸ்புக்கில் பதிவு செய்கிறேன். பரபரப்பான அந்த ரோடில் எந்தப் பத்தட்டமும் இல்லாமல் நடப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. அவசரம் அவசரமாக பலர் அலுவலகம் செல்ல பயணிக்கிறார்கள். பள்ளிக்கூடம், கல்லூரி செல்ல மாணவ மாணவிகள் திரண்டு ஓடுகிறார்கள். நான் அங்குலம் அங்குலமாக நடந்து செல்கிறேன். நானும் அலுவலகத்தில் இருந்தால் இதெல்லாம் நடக்கக் கூடிய விஷயமாக எனக்குத் தோன்றாது.
பதவி மூப்பு அடையும் விஷயத்தை ஞானக்கூத்தனிடம் கூறினேன். “இனிமேல்தான் சுதந்திரமான உலகத்திற்குள் வருகிறீர்கள்..” என்றார்.
அவர் சொல்வதில் எல்லா உண்மையும் இருக்கிறது. ஆனால் தூங்கும்போது, கனவில் அலுவலகத்தில் போய் நிற்பதுபோல் தோன்றுகிறது. அலுவலகத்தில் உள்ளவர்களுடன் பேசுவதுபோல் தோன்றுகிறது.
நான் படிக்க வேண்டிய புத்தகங்கள் அடுக்கடுக்காய் என் முன்னால் வீற்றிருக்கின்றன.
பா எழுத…
முபீன் சாதிகா
சிரத்தில் புகும் கால்
கண்ணில் ஆழ ஏறி
மறுபுறம் வந்த தாள்
முடங்கும் சினை முயன்று
அட்சரம் வரியாய்
பதித்து நுடங்க மேலாய்
மூக்கின் நுனியில் எழுத்தின்
முகமதை வடிக்க இங்கு
இவண் நுதல் பெயர்ந்து
பறக்கும் காற்றில் கரைய
கூந்தல் தாழ்ந்து இலக்கமிட
என்பும் துருத்தி முதுகின்
கூன் போல் மடிந்து
வலியன்ன காணும்
வளைவில் கதறியும் புறப்பட்டே
கோவென் ஒலி
தவறுகளையும்
பார்க்க மறுத்து.
விளைவும்
Kind’ & ‘Cause And Effect’
ஓர் நடைபயணத்தில்
லக்ஷ்மி சிவகுமார்
.
சமரசம் கொண்டு
.
பீ சோல்டு -ஐ
முதலாளியின்
முகம்
.
.
சமூகத்தில்
.
கைகளில் பிசுபிசுக்கும் இனிப்பின் நிறம்
எதையாவது சொல்லட்டுமா…..94
அழகியசிங்கர்
கோவிந்தன் ரோடில் நானும் மனைவியும் வண்டியில் வந்து கொண்டிருந்தோம். ஒரு கடையின் முன் கூட்டம் முண்டி அடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது அருவெறுப்பாக இருந்தது. அது ஒரு டாஸ்மாக் கடை எல்லோரும் குடிக்க காத்துக்கொண்டிருந்தார்கள். இந்தப் பழக்கத்தை எல்லோராலும் ஏன் விடமுடியவில்லை. ஒரு விருந்து என்றால் ஒரு கூட்டம் என்றால் நான்கைந்து பேர்கள் சேர்கிறார்கள் என்றால் புகையும் மதுவும் இல்லாமல் ஒன்றும் நடப்பதில்லை.
நான் கல்லூரி படித்தக் காலத்தில் ஒரு முறை ஐஐடியில் படிக்கும் சில மாணவர்களைச் சந்திக்கச் சென்றேன். எல்லோரும் பாட்டில்களோடு இருந்தார்கள். எல்லோரும் புகைத்தார்கள், குடித்தார்கள். நானும் குடித்தேன். எனக்கு அது முதல் அனுபவம். எல்லோரும் ஏன் இப்படி குடிக்கிறார்கள் என்றுதான் குடித்தேன். நான் வீடு திரும்பும்போது இரவு பதினொரு மணி மேல் ஆகிவிட்டது. வீட்டு மொட்டை மாடியில் உள்ள அறையில் படுத்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் வயிற்றைப் புரட்டியது. நான் குடித்ததை எல்லாம் வாந்தி எடுத்தேன். அன்றிலிருந்து நான் குடிப்பதையே நிறுத்தி விட்டேன்.
என் அலுவலக நண்பர்கள் பலரும் குடிப்பார்கள். புகை பிடிப்பார்கள். அவர்கள் முன் நான் அமர்ந்திருக்கிறேன். ஒருமுறை ஒரு அலுவலக நண்பனுடன் குற்றாலம் போகும்போது, அவன் அதிகப் போதையில் இருந்தான். அலுவலகத்தில் உள்ள ஒரு பெண்ணை அதிகமாக நேசிப்பதாகவும், அவளையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சொன்னான். குடியில் அவன் கண்கலங்கிப் பேசினான். அந்தப் பெண்ணுடன் அவனுக்குத் திருமணம் நடந்தபோது அவன் சொன்ன வார்த்தை இன்னும் ஞாபகத்திலிருந்து நீங்கவில்லை. ‘என் தலையில் கட்டிட்டுப் போயிட்டாங்கப்பா,’ என்றான். அவன் குடியில் உளறியது திரும்பவும் ஞாபகத்தில் வந்தது.
என் மனைவியுடன் நான் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தேன். மனைவியிடம் சொன்னேன். “நான் சிகரெட் பிடிப்பேன்.” என்று. அவள் நம்ப மறுத்தாள். நான் வேண்டுமென்றே ஒரு கடைக்குச் சென்று ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக்கொண்டேன். நான் சிகரெட் பிடித்து காட்டியபிறகும் அவள் நம்பவில்லை. நான் சிகரெட் பிடிப்பவன் என்று.
பிரமிள் அடிக்கடி என்னைச் சந்திப்பார். நானும் அவரும் பல இடங்களுக்குச் சுற்றிக் கொண்டிருப்போம். ஒருமுறை கூட அவர் சிகரெட் பிடித்து, மது அருந்தி நான் பார்த்ததில்லை. ஆனால் அவருடன் ஆரம்ப காலத்தில் பழகிய இலக்கிய நண்பர் ஒருவர், ‘அவர் கஞ்சா அடிப்பார்,’ என்று என்னிடம் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை.லாகிரி வஸ்துகளுக்கு மயங்காதவர்கள் இல்லை. பிரமிள் விதிவிலக்காக தென்பட்டார்.
ஆத்மாநாமின் ஒரு கவிதை வெளியேற்றம். அக் கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.
சிகரெட்டிலிருந்து
வெளியே தப்பிச் செல்லும்
புகையைப் போல்
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே
ஆத்மாநாமின் இரங்கல் கூட்டத்தில் இக் கவிதையைப் படித்து
பிரமிள் எல்லோர் முன் விம்ம ஆரம்பித்தார். பிரமிளின் இந்தச் செய்கை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் அவ்வளவு எளிதாக உணர்ச்சி வசப்படக்கூடியவர் அல்லர். எதிராளியை பார்த்தவுடன் மிரட்டும் தன்மையைக் கொண்டவர். நான் அறிமுகப் படுத்தும் பல நண்பர்களை அவர் கிண்டல் செய்யாமல் இருக்க மாட்டார்.
ஆத்மாநாம் பல பழக்கங்களுக்கு அடிமை ஆனதால்தான் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குப் போய்விட்டார். ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்திற்கு வந்த ஆத்மாநாம் கையை ஒரு முறை குலுக்கினேன். அவர் கை இயல்பாய் இல்லை. நடுங்கிக் கொண்டிருந்தது. பிரமிளிடம் கேட்டேன், üஏன் ஆத்மாநாம் கைகள் நடுங்குகின்றன,ýஎன்று. üஅவர் டிரக் அடிக்கிறார்,ý என்றார் பிரமிள்.
திருவண்ணாமலையில் உள்ள யோகி ராம்சுரத் குமாரைப் பார்க்க நானும் பிரமிளும் ஒருமுறை போயிருந்தோம். யோகி ராம் சுரத் குமார் பாஸிங்ஷோ என்ற சிகரெட்டை பிடித்துக்கொண்டே இருந்தார். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு யோகியார் சிகரெட் பிடிக்கலாமா என்பதுதான் என் சிந்தனை. சிகரெட் தீர்ந்தவுடன், யோகி ராம்சுரத் குமார் அவருக்கு உதவியாய் இருந்த பையனிடம் ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கிக்கொண்டு வரச் சொன்னார். பிரமிள் உடனே என்னைப் பார்த்து, ‘நீங்கள் சிகரெட் வாங்க பணம் கொடுங்கள்,’ என்று கட்டளை இட்டார். நானும் பணம் எடுத்து யோகியாரிடம் நீட்டினேன். யோகி ராம்சுரத்குமார் பணத்தை என்னிடமிருந்து வாங்கிக்கொள்ள வில்லை. பிரமிள் கையில் கொடுக்கச் சொல்லி அவர் மூலம் வாங்கிக்கொண்டார். அந்தச் சந்திப்பில் இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் யோகியார் நான் கொடுத்த பணத்தை வாங்க மறுத்தார்? என்ற கேள்வி இன்று வரை என்னைக் குடைந்துகொண்டே இருக்கிறது. இதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை.
நகுலன் ஒருமுறை அவருடைய சகோதரர் வீட்டிற்கு வந்திருந்தார். அவரை என் வீட்டிற்கு அவர் சகோதரர் கொண்டு விட்டு சென்று விட்டார். எங்கள் வீட்டில் கொஞ்ச நேரம் இருந்தபிறகு அவரை அவர் சகோதரர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்றேன். போகும் வழியில் ஒரு மதுபானம் விற்கும் கடையில் நின்று பிராந்தி ஒரு பாட்டில் வாங்கிக்கொண்டார். அந்தக் கடையில் முன் நிற்கும் வாடிக்காளர்களைப் பார்க்கும்போது நகுலன் வித்தியாசமாகத் தெரிந்தார். நகுலனால் குடிக்காமல் இருக்க முடியாது. இரவு முழுவதும் குடித்துவிட்டு தூங்காமல் விழித்துக்கொண்டிருப்பார். நகுலனால் கடைசிவரை இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. உண்மையில் அவர் குடிப்பதை நிறுத்தியிருந்தால்தான் ஆபத்து ஏற்பட்டிருக்கும். அவரைப் பார்க்கச் செல்லும் நண்பர்கள் ஒரு பாட்டில் வாங்கிக்கொண்டு போகாமல் இருக்க மாட்டார்கள்.
மது அருந்துவதும், சிகரெட் பிடிப்பதும் தவறா? அப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை. ஆனால் நான் பார்க்கும் பலர் இந்தப் பழக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியாமல் அவதிப் படுகிறார்கள் என்று தோன்றும். உண்மையில் ஒவ்வொருவருக்கும் எதாவது பழக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். என் நண்பர் ஒருவர் ஜர்தா பீடா போடாமல் இருக்க முடியாது. அந்தப் பாக்கெட்டுகளை அவரால் வாங்கிக் கொள்ளாமல் போய்விட்டால் அவரால் இருக்கவே முடியாது.
தீவிர இலக்கியத்தில் ஈடுபடும் பெண்கள் கூட புகை பிடிக்க விருப்பப்படுகிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் அண்ணாசாலையில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொண்டு, வெளியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கி ஊதியதைப் பார்த்திருக்கிறேன்.
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் என் தந்தை தெருவில் யாராவது சிகரெட் பிடித்துக்கொண்டு போனால், கூப்பிட்டு நிறுத்தி, சிகரெட் பிடிப்பது கெடுதல் என்று கூறுவது வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசிலர் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வார்கள். சிலர் முறைப்பார்கள். ஒருவர் என் அப்பாவைப் பார்த்து, ‘மைன்ட் யுவர் பிஸினஸ்’ என்று ஒருமுறை சத்தம் போட்டார். ‘ஐ மைன்ட் மை பிஸினஸ். யு மைன்ட் யுவர் ஹெல்த்’ என்றார் பதிலுக்கு அப்பா. அவர் வெற்றிலைப் பாக்குக்கூட மெல்ல மாட்டார்.
தினமும் காலையில் நடைபயிற்சி செய்யும்போது என்னுடன் இன்னொரு நண்பரும் வருவார். இருவரும் பேசிக்கொண்டே நடை பயிற்சி செய்வோம். நடைபயிற்சி ஆரம்பிக்கும் முன் ஒரு கடை முன் நண்பர் நிற்பார். ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்துக்கொள்வார். பின் நடைபயிற்சி முடிந்தவுடன் இன்னொரு கடைக்குச் செல்வார். திரும்பவும் ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக்கொள்வார்.
‘இனிமேல் பிடி;க்கப் போவதில்லை. நாளையிலிருந்து நிறுத்தி விடப் போகிறேன்,’ என்றார் ஒருநாள்.
‘உங்களால் முடியாது. இது மாதிரி சவால் விடாதீர்கள். இந்தப் பழக்கம் இருந்து விட்டுப் போகட்டும்,’ என்றேன். ஆனால் சவால் விடுவதில் அவர் உறுதியாக இருந்தார்.
அடுத்தநாள் காலையில் நாங்கள் நடைபயிற்சி இடத்தில் சந்தித்துக்கொண்டோம். நடை ஆரம்பிக்குமுன் முதல் வேளையாக அவர் கடைக்குச் சென்று ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டார்.
நான் அவரைப் பார்த்து சிரித்தேன்.
(அமிர்தா ஜøன் மாத இதழில் வெளிவந்த கட்டுரை)
விருட்சம் கூட்டத்திற்கு வந்திருந்த எல்லா நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக விருட்சம் கூட்டத்தில் மைக் ஏற்பாடு செய்வது வழக்கமில்லை. மொத்தம் 50 பேர்களுக்குமேல் கூட்டத்திற்கு வர மாட்டார்கள். அன்றைய அசோகமித்திரன் கூட்டத்தில் அசோகமித்திரனால் சத்தமாகப் பேக முடியவில்லை. ஆனால் பேசியவற்றை ஆடியோவில் பிரமாதமான முறையில் பதிவு செய்திருக்கிறேன். வந்திருந்த நண்பர்களுக்கு அனுப்ப விரும்புகிறேன். எப்படி என்பதை யாராவது என் அறிவுக்குப் புரியும்படி சொல்ல முடியுமா?
நடைபெறும் நாள் :: 14.06.2014 (சனிக்கிழமை)
நேரம் :: மாலை 5.30 மணிக்கு
இடம் :: ஸ்ரீ அலர்மேலுமங்கா கல்யாண மண்டபம்
நடேசன் பூங்கா அருகில்
19 ராதாகிருஷ்ணன் சாலை,
தி. நகர், சென்னை 600 017
பொருள் :: “நானும் என் கவிதைகளும்”
உரை நிகழ்த்துபவர் : பயணி