அஞ்சலட்டைக் கதைகள் 23

அழகியசிங்கர்

    இது என் 23வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது இரண்டு நிமிடங்களுக்கு குறைவாக முடிந்து விட்டது.

கிட்ட நெருங்கிப் பேசாதே…

    இன்று வீட்டைவிட்டு கடைக்குப் போவதென்று முடிவு செய்தேன்.  ஒரு சவர பிளேடு குச்சி வேண்டும்.  நான் கடைக்குப் போய் இரண்டு பால் பாக்கெட்டுகளையும், இஞ்சி, பச்சை மிளகாவும் வாங்கச் சென்றேன்.

    இந்தச் செருப்பை  மாட்டிக்கொண்டு போவது எனக்கு அவ்வளவு சுலபமாகத் தெரியவில்லை.  சிலசமயம் கடுப்பாகக் கூட இருக்கிறது.  தெரு முனைக்குத்தான் போயிருந்தேன்.  ஒரு பெரியவர் எதிர்ப்பட்டார்.  என்னையே பார்த்தபடியே நின்றுவிட்டார்.  யாரையோ தேடுகிறாரோ என்று நினைத்தேன்.  ஆனால் அது மாதிரியும் தெரியவில்லை. 

    ஏன் நின்று என்னையே முறைத்துப் பார்க்கிறாரென்று எனக்குத் தோன்றியது.  அவருக்கு எதாவது பணம் தேவையா? உண்மையில் அவருக்குப் பணம் தேவையாக இருந்தாலும் என்னிடம் கொடுக்க முடியாது.  எல்லாம் நூறு ரூபாய் நோட்டுகளாகவும் இருநூறு ரூபாய் நோட்டாகவும் வைத்துக் கொண்டிருந்தேன்.   

  “என்னிடம் சில்லறை இல்லை,” என்றேன் அவரைப் பார்த்து.  வந்தது வினை.  அவர் என்னிடம் நேராக வந்தார். 

   “உங்களிடம் பைசா கேட்டேனா,” என்றார். 

   “இல்லை,” என்றேன்.

    “பின் ஏன் நீங்கள் பிச்சைக்காரன் போல் என்னை நினைத்துக் கொண்டிருந்தீர்கள்.”

    “மன்னிக்கவும். தவறாக நினைத்து விட்டேன்.”

    “நான் தள்ளாமையால் நிற்கிறேன்.”

    “நினைத்தது தப்பு.  நீங்கள் முகக் கவசம் போடாமலிருக்கிறீர்கள்.”

    “என் பையில் இருக்கிறது அது.”

    “மன்னித்து விடுங்கள்.  நான் போகிறேன்,” என்று கூறியபடியே நடக்க ஆரம்பித்தேன்.

    கொஞ்ச தூரம் நடந்தவுடன், ஒரு கடையின் வாசலில் நிற்பவர் என்னை உற்றுப் பார்த்தார்.  ஏன் அப்படிப் பார்க்கிறார் என்று யோசித்தேன்.

    “தலை முடி வெட்டிக்கொள்ள வேண்டாமா?” என்றார்.

    “வேண்டாம்,” என்று கூறியபடியே நடந்தேன்.  அந்த வியாபாரிக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும்.  அவன் வைத்திருக்கும் கடை.  ஒரு சிறிய பெட்டிக் கடை மாதிரி இருந்தது.   உண்மையில் தலை முடியை வெட்டிக் கொள்ளும்படி தான் வளர்ந்திருந்தது.  மார்ச்சு மாதத்திலிருந்து நான் தலை முடி வெட்டவில்லை.  இரண்டு நாட்கள் முன்னால் என்தலை முடியை என் மனைவிதான் வெட்டிவிட்டாள்.

    நான் திரும்பவும் கடையில் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தேன்.

    முடிவெட்டிக்கொள்ளும் கடை முன் வேற யாரோ நின்று கொண்டிருந்தான். 

    நான் பேசாமல் போயிருக்கலாம்.  ஆனால் அவனைப் பார்த்து, “ஏன் இப்போதெல்லாம் முடி வெட்டிக்கொள்ள யாரும் வருவதில்லையா?” என்று கேட்டேன்.

    ஆனால் அவன் பதிலே சொல்லவில்லை.


அஞ்சலட்டைக் கதைகள் 18

அழகியசிங்கர்

இது என் 18வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்

கதை 18


குரு பூர்ணிமா நாள் 

இன்று குரு பூர்ணிமா நாள்.  புத்தரின் சீடர்களில் ஒருவர் சுபூதி கொரானா காலத்தில் மாட்டிக்கொண்டு விட்டார்.  குரு பூர்ணிமா நாளில் ஆழ்ந்த தியானத்தில் இருக்க வேண்டுமென்று நினைத்தார்.


கொரானா அதிகம் பரவியுள்ள மேற்கு மாம்பலத்தில்தான்  சுபூதி தங்கி உள்ளார்.  ஒரு நண்பரின் வீட்டில். 

நண்பர் தில்லிக்குச் சென்றவர் அங்கயே தங்கியிருக்கிறார்.  சுபூதி தனியாக நண்பரின்  வீட்டில் தங்கியிருக்கிறார்.


அந்தத் தெருவில் இரண்டு வீடுகளில் கொரானா தொற்று வந்துவிட்டதால்  சுபூதி வீட்டில் உள்ள வாசல் கதவுகளையும் பூட்டி விட்டார். ஜன்னல்களையும் சார்த்தி விட்டார். 


ஆழ்ந்த தியானத்திற்கு எந்த இடம் சரியாக இருக்குமென்று யோசிக்கும்போது மொட்டை மாடிக்குப் போகலாமென்று தோன்றியது அவருக்கு.


“  வீட்டின் மொட்டைமாடி சரியாக இருக்குமென்று பட்டது.  காலையில் குளித்து விட்டு மொட்டை மாடியில் நுழைந்தார். நிழலாக இருக்குமிடம் எங்கே என்று பார்த்தார்.  ஒரு நல்ல இடமாகப் பார்த்து உட்கார்ந்தார்.  குரு பூர்ணிமா நாளான இன்று புத்தர் பெருமானை நினைத்து தியானம் செய்ய ஆரம்பித்தார்.


உடனே மௌனமானார். தன்னை மறந்தார்.  சூனியத்தில் மூழ்கிவிட்டார். அதனுடன் ஒன்றுபட்டு விட்டார்.


சிறிது நேரத்திற்குப் பின் அவரைச் சுற்றிலும் பூக்கள் சொரிய ஆரம்பித்தன. பூக்களான பூக்கள்.  வாசனை நிரம்பிய பூக்கள்.  பூக்களாலே அவர் மூடப்பட்டு விட்டார்.


அவருக்கு உணர்வு திரும்பியது.  இந்த மொட்டை மாடியில் எப்படி இவ்வளவு பூக்கள்.   சுற்றிலும் பார்க்கப் பார்க்க ஆச்சரியமும் வியப்பும் அடைந்தார். 


அப்போது அசிரியின் குரல் கேட்டது :
“தங்களின் சூனியத்தின் சொற்பொழிவிற்காகப் பூக்களைப் பொழிந்து எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”



சுபூதி  மேலும் வியப்படைந்து கூறுகிறார் 
“ஆனால் நான் சூனியத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே!”


அசிரி சிரித்தவாறு சொன்னது :


“நிச்சயமாக நீங்கள் சூனியத்தைப் பற்றிப் பேசவில்லை.  நாங்களும் சூனியத்தைப் பற்றிக் கேட்கவில்லை.  ஆனால்  இதுதான் உண்மையான சூனிய மாகும்.”


சுபூதியின் மீது மேலும் மலர்கள் மழையைப் போல் சொரிந்து கொண்டிருந்தன.

அஞ்சலட்டைக் கதைகள் 17


அழகியசிங்கர்

இது என் 17வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திஙூருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். 


அறை


நீங்கள் போன் செய்து என்னைப் பார்க்க வருவதைப் பற்றி அறிவித்துள்ளீர்கள்.  நீங்கள் ஏன் வர வேண்டும்?  உண்மையாக நீங்கள் வருவது எனக்குப் பிடிக்கவில்லை.  ஆனால் உங்கள் முகத்துக்கு நேரே அப்படிச் சொல்வதில் எனக்குத் தயக்கமிருக்கிறது.


அவசரம் அவசரமாக என் கண்ணில் தட்டுப்படும் புத்தகங்களை என் புத்தக அறையில் கொண்டு போட்டேன்.  பின் அறைக் கதவை நன்றாகப் பூட்டினேன்.”


எந்தப் புத்தகமும் உங்கள் கண்ணில் படாது என்று உறுதியாக நம்பினேன். உங்களிடம் ஒரு கெட்டப் பழக்கம் இருக்கிறது.  எந்தப் புத்தகத்தைப் பார்த்தாலும் நீங்கள் எடுத்து வைத்துக் கொண்டு விடுவீர். 


உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் புத்தக அலமாரியைப் பார்க்க வேண்டும்.  எத்தனைப் புத்தகங்களை எல்லாரிடமிருந்து தள்ளிக்கொண்டு வந்தீர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு விடலாம்.
சரியாகச் சொன்னபடி வீட்டிற்கு வந்து விட்டீர்கள்.  உங்களை வரவேற்று என் இன்னொரு அறைக்கு அழைத்துக்கொண்டு போனேன்.  கண்ணில் எதாவது புத்தகம் தென் படுகிறதா என்று பார்த்தேன்.  நிம்மதியாக இருந்தது எந்தப் புத்தகமும் தென்படவில்லை. ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

உங்களைக் கூர்ந்து கவனித்தேன்.  சற்று ஏமாற்றமாக உங்கள் தென்பட்டது.


“என்னய்யா எப்படி இருக்கே?”
“நல்லாயிருக்கேன்.”
“இலக்கியக் கூட்டத்திற்கு எங்காவது போனீயா?”
“போனேன்.”
“நீ கூட்டம் நடத்துவது என்ன ஆச்சு?”
“மாசம் மூன்றாவது சனிக்கிழமை நடத்துகிறேன்.”
“எத்தனைப் பேர் வர்றாங்க”
“பத்து பேர். அதற்கு மேல் வந்தால் அது வெற்றிகரமான கூட்டம்.”

இதைச் சொன்னவுடன் நீங்கள் வாய்விட்டுச் சிரிக்கிறீர்கள்.


“என்னய்யா உன் புத்தங்கள் எதுவும் கண்ணில் படவில்லையே?”
“பக்கத்து அறையில் வைத்திருக்கிறேன்.”
“அந்த அறைக் கதவைத் திற.  அங்குப் போகலாம்.”
“அந்த அறைக்குப் போக முடியாது.” 
“சாவி எடுத்துக்கொண்டு வா. திறப்போம்.”
“காலையிருந்து சாவியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.  சாவியைத் தொலைத்து விட்டேன்.”
உங்கள் முகத்தில் ஏமாற்றம் தெரிகிறது.  உங்களிடமிருந்து தப்பிக்க இந்தப் பொய்யைத் தவிர வேற வழியில்லை. நீங்கள் கூர்ந்து உட்கார்ந்து இருந்த அறையைப் பார்க்கிறீர்.  அப்போதுதான் ஒன்று தோன்றியது.  ஆடியோ காசெட்டுகள்.  ஜே.கிருஷ்ணமூர்த்தியின்  ஆடியோ காசெட்டுகள்.  உங்கள் கண்ணில் படக்கூடாது என்று நினைத்தேன்.  பட்டு விட்டது.  

“இது என்னய்யா?”
“ஜே.கே கேசட்டுகள்.””அதைக் கொடுய்யா…கேட்டுட்டு கொண்டு தர்றேன்.,”. என்று நீங்கள் என்னைக் கேட்காமலேயே எடுத்து வைத்துக்கொண்டீர்கள். நான் செய்வதறியாது திகைத்தேன்.

மாலதி சுவாமிநாதனின் காக்கைகள் என்ற கதை

அழகியசிங்கர் 

மாலதி சுவாமிநாதன் எழுதிய  காக்கைகள் என்ற சிறு கதை நவீன விருட்சம் 113வது இதழில் வெளிவருகிறது.   இதழை முதலில் மின் இதழாகக் கொண்டு வர எண்ணம்.   அதில் வெளிவர உள்ள கதையை நீங்களும் வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  சிறிய கதை.  மாலதி சுவாமிநாதன் ஒரு மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்.
சிறு கதை

காக்கைகள்


மாலதி சுவாமிநாதன்(மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்)

தினமும் அதே நேரத்தில் அந்த காக்கைக் கூட்டம் வருவதுண்டு. அதே இடத்தில். உட்கார்ந்ததுமே கா…கா..கா எனக் குரலை எழுப்பிப் பாடும். என்ன பிரயோஜனம்? நிராசைதான்!.
இந்த கூச்சலுக்குக் காரணம் உண்டு. காக்கைகளுக்கு ஞாபக சக்தி யானைகள் மாதிரி, புத்திக் கூர்மை அதிகம் என்று படித்திருக்கிறேன். நமக்குத் தான் எல்லாக் காக்கைகளும் ஒன்று போலத் எனத் தோன்றும். அவற்றுக்கு நம்மை அடையாளம்  தெரியுமாம் .
காக்கைகளுக்கு இங்கே நிலவுவது லாக்டவுன், கோவிட்-19 என்று தெரியவில்லை.  தங்களுக்கு உணவு தருபவரைக் காண விரும்பின.
அவள் கண்ணில் பட்டாள். ஆனால்   ஆடாமல், அசையாமல் இருக்கிறாளே?  ஒன்றும் புரியவில்லை. காக்கை கூட்டம் நெடுநேரம் சத்தமிட்டு விட்டு, பறந்து போய் விட்டது.
மறு நாளும்.
அதே நேரத்தில் வந்தது காக்கை கூட்டம். கா…கா..என்று குரல் எழுப்பியது . சற்று நேரம் காத்திருந்து, பிறகு எல்லாக் காக்கைகளும்  பறந்து விட்டன.
அடுத்த நாளும், காலை ஐந்தரை மணிக்கு வரும் காக்கை கூட்டம், வழக்கம் போல் அவளுடைய பால்கனி அருகில்   வந்தது. சமையலறைக்குப் பக்கத்திலிருந்தது இந்த பால்கனி. அங்கு அமர்ந்து, கா…கா..கா…வென கரைந்து இறக்கையை வேகமாக அடித்துக்  கொள்ளும் சத்தம்….  ஒரே சத்தம்.
அடக் கடவுளே! என்றே அவள் விரைந்து வந்தாள். ஆனால், வெடுக்கென்று திரும்பி விட்டாள்.
கால்களைத் தேய்த்துக் கொண்டு நடந்தாள், தலை கலைந்து இருந்தது, முகத்தில் சோகம் மட்டுமே. எதிலுமே எந்த பிடிப்பும், ஈடுபாடும் இல்லாதது வெளிப்பட்டது. காக்கை ஆரவாரம் செய்யும் போது, முன்பெல்லாம் இவளும்  உணவு  வைத்து, காக்கைகளுடன் கடகடவென உயர்ந்த குரலில் குதுகலமாகப் பேசுபவள்.  இன்று பேசாமல் போய்விட்டாளே? அவளது மௌனம்  காக்கைகளுக்குப் புரியவில்லை. ஏன் உணவு வைக்கவில்லை    ஏன் தங்களுக்கு ஈடுகொடுத்து சத்தம் போடவில்லை? என்ற கேள்விகள்.
குழப்பம் நிலவியது. காக்கை கூட்டம் வந்தாலும் அன்று ஒரு கா சத்தம் செய்யாமலேயே இருந்து விட்டுப் பறந்துசென்றது..
அடுத்த நாள், கொஞ்சம் தாமதமாக, ஆறு மணி அளவில் வழக்கம் போல் அந்த பால்கனியில் காக்கைக் கூட்டம் வந்து அமர்ந்தது. அவள் ஏதோ செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தது. அங்கேயே உட்கார்ந்து, சிறிது நேரத்திற்குப் பிறகு பறந்து விட்டது.
காப்பி கோப்பையைக் கையில் ஏந்தி, தற்செயலாக பால்கனிக்குச் சென்ற அவள் கால் வைத்த இடத்தில், ஒரு செம்பருத்திப் பூ. அவ்வளவு ‘ஃப்ரெஷ்’! வியக்கவில்லை. அப்படியே விட்டு விட்டாள்.
பிற்பகல், இவள் உணவு உண்ணும் நேரத்தில் ஒரு பிடி சாதத்தைக் காக்கைகளுக்கு வைப்பது வழக்கம்.  ஐந்து காக்கைகள்  பழக்கத் தோஷத்தில் வந்தன. அன்று உணவு வைக்கப்படவில்லை. அவை ஏன் வந்தன?  பசியைப் போக்கிக்கொள்ளவா அல்லது  அவளுக்கு ஞாபகப் படுத்தவா? தெரியவில்லை. காக்கைகளின் பாட்டு பலமாக இருந்தது. பல நிமிடங்கள் பாட, அவள் அங்கே வந்ததும் வெடுக்கென்று பறந்து விட்டன. பால்கனியில் பல சுள்ளிகளைப் பார்த்தாள். ம்ச் எனப் பெருமூச்சுடன் உள்ளே வந்துவிட்டாள். செம்பருத்தி இவளைப் போல வாட ஆரம்பித்து இருந்தது.
மாலை, நாலரை மணி. அவள் தேநீர் அருந்தும் நேரம். அந்நேரத்தில், பிஸ்கட் போடுவாள். போடவில்லை. ஆனாலும்  காக்கைகள், அந்த  நேரத்தில் வந்தன,  இலைகளைக்  கொத்து கொத்தாக விட்டுச் சென்றன.
அவளுடைய எதிர்வீட்டுனர் கோவிட் தொற்று பறவைகளுக்கு வரக்கூடாது என்ற அச்சத்தினால்தான் அவள் உணவு வைக்கவில்லை என எடுத்துக் கொண்டன. . காக்கைகளோ இதை எல்லாவற்றிற்கும் அப்பால், “நாங்கள் அவளைப் பார்க்கவே தினமும் வருவோம்-பாடுவோம்”. (காக்கைகளின் மைன்ட் வாயிஸ்) .  ஒரு ஒப்பந்தம்  – ஏதோ ஒன்றைப் போட்டுப் போவதாக. 
ஒரு காக்கை, அவளுடைய ஒரு ஜன்னலை மூக்கால் தட்டத் தட்ட, அவள் அங்கே பக்கத்தில் வருவது போல் இருந்தது, அவள் ஜன்னலைத் திறந்ததும் பறந்து விட்டது. மிதமான மாலை வெயில், சில்லென்று காற்று அவள் முகத்தில் மல்லிகையின் சுகந்தத்துடன் பட்டதும் திடீரென விழித்ததுப் பார்த்தாள். அந்நிலப்பரப்பில் மல்லி விழுந்த கிடந்த தரையைப் பார்த்து நின்றாள். காக்கை தானும் அங்கே இருப்பதை ஞாபகப் படுத்த, இப்படி அப்படிப் பறந்து சென்று கொண்டிருந்தது. ஒரு விளையாட்டானது.
இந்த ஜன்னல் வழியே வெளியே பார்ப்பது ஆரம்பமானது. உலகைப் பார்த்தாள். இன்னொரு அறையின் ஜன்னலை ஒட்டினார்போல இன்னொரு பால்கனி. அந்தப் பக்கம் காக்கை அழைப்பது கேட்டது. பல நாட்களுக்குப் பின் அங்குச் சென்றாள். விதவிதமான பூக்கள், சுள்ளி, காகிதம் என்னென்னவோ. அதையும் பார்த்து, காக்கை பறப்பதையும் பார்த்தாள், வெளியே பார்த்தாள். அவளுக்கு அன்று தான் புதியதாகப் பார்ப்பது போலத் தோன்றியது. இந்த ஜன்னலின் வெளியே உள்ள உலகம் வேறாக இருந்தது. ஒவ்வொரு ஜன்னல் வெவ்வேறு காட்சிகள்.
காக்கைகள், அவளை ஜன்னல் அருகே, பால்கனியில் சந்தித்தன. தாங்கள் உச்சத் ஸ்தாயியில் பாடும் பாட்டைக் கேட்டும் , அவளை மெதுவாகச் சுற்றி உள்ள உலகைப் பார்த்தும், ரசிக்கச் செய்தன .
காக்கை கூட்டம் தங்களது தோழியைத் திரும்பப் பெற்றதில் மிகக் குதுகலமாகப் பாடிக் கொண்டாடியது.

தினமும் அதே நேரத்தில் அந்த காக்கைக் கூட்டம் வருவதுண்டு. அதே இடத்தில். உட்கார்ந்ததுமே கா…கா..கா எனக் குரலை எழுப்பிப் பாடும். என்ன பிரயோஜனம்? நிராசைதான்!. 
இந்த கூச்சலுக்குக் காரணம் உண்டு. காக்கைகளுக்கு ஞாபக சக்தி யானைகள் மாதிரி, புத்திக் கூர்மை அதிகம் என்று படித்திருக்கிறேன். நமக்குத் தான் எல்லா காக்கையும் ஒரே மாதிரியே எனத் தோன்றும். அவர்கள் நம்மை அறிவார்கள்.
காக்கைகளுக்கு இங்கே நிலவுவது லாக்டவுன், கோவிட்-19 என்று தெரியவில்லை. அவர்களைப் பொருத்தவரை தங்களுக்கு உணவு தருபவரைக் காண ஆவல். 
கண்பட்டாள். ஆடாமல், அசையாமல் இருப்பதைப் பார்த்தார்கள். ஒன்றும் புரியவில்லை. காக்கை கூட்டம் நெடுநேரம் சத்தமிட்டு விட்டு, பறந்து போய் விட்டது. 
மறு நாளும். 
அதே நேரத்தில் வந்தன காக்கையர் கூட்டம். கா…கா..என்று குரல் எழுப்பின. சற்று நேரம் காத்திருந்து,  பிறகு பறந்து விட்டன. 
அடுத்த நாளும், காலை ஐந்தரை மணிக்கு வரும் காக்கை கூட்டம், வழக்கம் போல் அவளுடைய பால்கனியில் வந்தது. சமையலறைக்குப் பக்கத்திலிருந்தது இந்த பால்கனி. அங்கு அமர்ந்து, கா…கா..கா…வென, இறக்கையை வேகமாக அடுத்துக் கொள்ளும் சத்தம் வந்தது. அவ்வளவு சத்தம்.
அடக் கடவுளே! என்றே அவள் விரைந்து வந்தாள். வெடுக்கென்று திரும்பி விட்டாள்.
கால்களைத் தேய்த்துக் கொண்டு நடந்தாள், தலை கலைந்து இருந்தது, முகத்தில் சோகம் மட்டுமே. எதிலுமே எந்த பிடிப்பும், ஈடுபாடும் இல்லாதது வெளிப்பட்டது. காக்கை ஆரவாரம் செய்யும் போது,  முன்பெல்லாம் இவளும் காக்கையுடன் டகடகவென உயர்த்த குரலில் பேசி, நெல் வைத்து, அவர்களுடன் குதுகலமாகப் பேசுபவள். 
அதனால் தான் இந்த மொளனமாக இருப்பது காக்கைக்குப் புரியவில்லை. ஏன் நெல் இல்லை? ஏன் தங்களுக்கு ஈடுகொடுத்து சத்தம் வருவதில்லை? என்ற கேள்விகள். 
குழப்பம் நிலவியது. காக்கை கூட்டம் வந்தாலும் அன்று ஒரு கா சத்தம் செய்யாமலேயே இருந்து விட்டுப் பறந்து சென்றார்கள். 
அடுத்த நாள், கொஞ்சம் தாமதமாக, ஆறு மணி அளவில் வழக்கம் போல் அந்த பால்கனியில் காக்கைக் கூட்டம் வந்து அமர்ந்தது. அவள் ஏதோ செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தது. அங்கேயே உட்கார்ந்து, சிறிது நேரத்திற்குப் பிறகு பறந்து விட்டது.
காப்பி கோப்பையைக் கையில் ஏந்தி, அகஸ்மாத்தாக பால்கனிக்குச் சென்ற அவள் கால் வைத்த இடத்தில், ஒரு செம்பருத்திப் பூ. அவ்வளவு ஃப்ரெஷ்! வியக்கவில்லை. அப்படியே விட்டு விட்டாள். 
பிற்பகல், இவள் உணவு உண்ணும் நேரத்தில் ஒரு பிடி சாதத்தைக் காக்கைகளுக்கு வைப்பது வழக்கம். அந்த ஐந்து காக்கை பழக்கத் தோஷத்தில் வந்தார்கள். அன்று உணவு இல்லை. பசியைப் போக்கவா இல்லை அவளுக்கு ஞாபகப் படுத்தவா? தெரியவில்லை காக்கைகளின் பாட்டு பலமாக இருந்தது. பல நிமிடங்கள் பாட, அவள் வெடுக்கென்று அங்கே வந்ததும் பறந்து விட்டார்கள். பால்கனியில் பல சுள்ளிகளைப் பார்த்தாள். ம்ச் எனப் பெருமூச்சுடன் உள்ளே வந்துவிட்டாள். செம்பருத்தி இவளைப் போல வாட ஆரம்பித்து இருந்தது.மாலை, நாலரை மணி. அவள் தேநீர் அருந்தும் நேரம். அந்நேரத்தில், பிஸ்கட் போடுவாள். போடவில்லை. ஆனாலும் இவர்கள், அதே நேரத்தில் வந்தார்கள், இலை கொத்து கொத்தாக விட்டுச் சென்றார்கள்.அவளுடைய எதிர்வீட்டுனர் கோவிட் தொற்று பறவைகளுக்கு வரக்கூடாது என்ற அச்சத்தினால்தான் அவள் உணவு வைக்கவில்லை என எடுத்துக் கொண்டார்கள். காக்கைகளோ இதை எல்லாவிற்கும் அப்பால், “நாங்கள் அவளைப் பார்த்துக் கொள்ள நேரம், வருவோம்-பாடுவோம்”. அவர்களுக்குள்ளேயே ஒரு ஒப்பந்தம் (காக்கைகளின் மைன்ட் வாயிஸ்) – ஏதோ ஒன்றைப் போட்டுப் போவதாக. 
ஒரு காக்கை, அவளுடைய ஒரு ஜன்னலை மூக்கால் தட்டத் தட்ட, அவள் அங்கே பக்கத்தில் வருவது போல் செய்ய, அவள் ஜன்னலைத் திறந்ததும் பறந்து விட்டது. மிதமான மாலை வெயில், சில்லென்று காற்று அவள் முகத்தில் அந்த மல்லியின் சுகந்தத்துடன் பட்டதும்  திடீரென விழித்ததுப் பார்த்தாள். அந்நிலப்பரப்பில் மல்லி விழுந்த வெள்ளை தரையைப் பார்த்து நின்றாள். காக்கை தானும் அங்கே இருப்பதை ஞாபகப் படுத்த, இப்படி அப்படிப் பறந்து சென்று கொண்டிருந்தது. ஒரு விளையாட்டானது.
இந்த ஜன்னல் வழியே வெளியே பார்ப்பது ஆரம்பமானது.   உலகைப் பார்த்தாள்.
இன்னொரு அறையின் ஜன்னலை ஒட்டினார் போல இன்னொரு பால்கனி. அந்த பக்கம் காக்கை அழைப்பது கேட்டது. பல நாட்களுக்குப் பின்  அங்குச் சென்றாள். விதவிதமான பூக்கள், சுள்ளி, காகிதம் என்னென்னவோ. அதையும் பார்த்து, காக்கை பறப்பதையும் பார்த்தாள், வெளியே பார்த்தாள். அவளுக்கு அன்று தான் புதியதாகப் பார்ப்பது போலத் தோன்றியது. இந்த ஜன்னலின் வெளியே உள்ள உலகம் வேறாக இருந்தது. ஒவ்வொரு ஜன்னல் வெவ்வேறு காட்சிகள். 
காக்கைகள், அவளை ஜன்னல் அருகே, பால்கனியில் சந்தித்தன. தாங்கள் உச்சத் ஸ்தாயில் பாடும் பாட்டை, அவளை மெதுவாகச் சுற்றி உள்ள உலகைப் பார்க்க, ரசிக்கச் செய்தது. 
காக்கை கூட்டம் தங்களது தோழியைத் திரும்பப் பெற்றதில் மிகக் குதுகலமாகப் பாடி கொண்டாடினார்கள்.

அஞ்ச லட்டைக் கதைகள் 16

அழகியசிங்கர்

இது என் 16வது கதை.  கதையைப் படிக்க  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். 
தூ….

எதிரில் கனகா வந்து கொண்டிருந்தாள்.  காலில் செருப்பில்லாமல்.  எப்போதும் இந்தத் தெருவில் நடக்கும்போது துப்பிக்கொண்டே நடப்பாள்.  
ஒவ்வொரு முறையும் அவளைப் பார்த்து, ‘துப்பாதே.  காலில் செருப்புப் போட்டுக்கொண்டு நட,’, என்பேன்.
அவள் சரி சரி என்று தலை ஆட்டுவாள்.  திரும்பவும் அதே மாதிரிதான்.  அவர்கள் வீட்டில் வளர்க்கும் இரண்டு நாய்களைக் கூட்டிக்கொண்டு வருவாள்.
நாய்களும் எங்கள் வீட்டுக வாசல் முன் மூத்திரம் போகும்.  நான் ‘ஹே ஹே’ என்று கத்துவேன்.  கனகாவைப் பார்த்து, ‘ நாய்களைக் கொண்டு வராதே,’  என்று கத்துவேன். 
உண்மையில் நான் சொல்வதைக் கேட்டு தெருவில் துப்புவதை நிறுத்திவிட்டாள்.  கொஞ்சம் திருந்தி விட்டாளென்று நினைத்துக் கொண்டேன்.  ஆனால் செருப்பு மட்டும் போடுவதில்லை.
அவளிடம் செருப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை இல்லாவிட்டால் வாங்கிக் கொடுத்துவிடலாம்.  
எங்கள் தெரு புழுதி நிறைந்த தெரு.  அத்துடன் அசுத்தமான தெரு.  எல்லாம் தூசி மயமாக இருக்கும்.  கனகா மட்டும் கவலைப்படுவதில்லை.  அவளுக்கு ஒரு பையனும் ஒரு பெண்ணும்.  அவர்களும் கல்லூரிகளுக்குப் போகும்போது மட்டும்  நவ நாகரீக உடைகளை அணிந்து கொள்வார்கள்.  பொதுவாகத் தெருவில் அம்மா மாதிரி செருப்பு மாட்டிக் கொண்டு நடக்க மாட்டார்கள்.  கனகாவின் கணவன் இருக்கிற இடம் தெரியாது.  அவர்கள் இருவரும் சேர்ந்து நடந்து போவதைப் பார்த்ததே இல்லை.  
இப்போதெல்லாம் வாசல் அருகில் நான் நிற்கிறேனா என்று கனகா பார்ப்பாள்.  நான் நிற்பதை அறிந்தால் அவள் வீட்டைவிட்டுத் தாண்டி வரமாட்டாள்.

அஞ்சலட்டைக் கதைகள் 15

அழகியசிங்கர்

இது என் 15வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.   

கீரை
கிளம்புவதற்குமுன் பாரதி செல்லம்மாவைப் பார்த்து, ‘சகுந்தலா எங்கே?’ என்று கேட்டார்.  
‘அவளுக்கு உடம்பு சரியில்லை.  படுத்துத் தூங்கறா,’ என்றாள் செல்லம்மா.  
பாரதி ‘இந்தியா’ பத்திரிகை அலுவலகத்திற்குக் கிளம்பிவிட்டார்.  அவர் போவதற்கு முன், ‘வரும்போது மறக்காமல் கீரை வாங்கிக்கொண்டு வாருங்கள்,’ என்றாள் செல்லம்மா.
ஏதோ ஞாபகமாய், ‘சரி’ என்று தலை ஆட்டிவிட்டுக் கிளம்பினார் பாரதி.
இந்தியா பத்திரிகை அலுவலகம் வந்தவுடன் ஒரு மேசை மீது உட்கார்ந்துகொண்டு, நமஸ்தே வாயோ..த்வ்மேவ ப்ரத்யஷம்,,ப்ரஹமாஸி என்றார் உரத்தக் குரலில்.  
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.  இந்தியா பத்திரிகை அலுவலகத்தில் பாரதியார் சுதந்திரமானவர்.  அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது. 
பக்கத்திலிருந்த குறிஞ்சி அய்யங்கார், என்ன பாரதி எதற்காக திடீரென்று ஸ்லோகம் சொல்ஙூ வணங்கினீர்கள்? என்று கேட்டார்
அங்கே பார், என்றார் பாரதி.  எதையோ சுட்டிக்  காட்டினார்.  யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.   ‘அங்கே என்ன ஒன்றுமில்லையே?’  என்றார் குறிஞ்சி அய்யங்கார்.  
‘அங்கே பந்தலைப் பார்.  பந்தலில் யாரையுமே காணோமே? ஒரு சின்ன கயிறுதானே ஆடிக் கொண்டிருக்கிறது.’
‘ஆமாம்.  அவர்தான் அந்தக் கயிற்றை ஆட்டிவிட்டுப் போனார்.’
‘காற்றிலே கயிறு தானாக ஆடுகிறது.  அவ்வளவுதான்.’
‘அது சரி பாரதி.  காற்று அடித்தால் கயிறு ஆடாமல் இருக்குமா? ‘
அந்தக் கயிற்றை ஆட்டிவிட்ட சக்திதான் இறைவன்.  இறைவன்தான் காற்று.  நமக்கு ஜீவிக்கப் பிராணனைக் கொடுக்கிறது, என்று குறிப்பிட்டார்.
எல்லோரும் அவர் சொல்வதைக் கேட்டுப் பேசாமலிருந்தனர்.
அன்று வீட்டிற்குப் போனவுடன் செல்லம்மா சொன்னதை  மார்க்கெட்டில் வாங்காமல் வந்து விட்டோமே என்று தோன்றியது பாரதிக்கு.

ராஜேஸ் குமார் நேற்றைப் போல் இன்று இல்லை

“இவன்தான் ஸார்….”

குரல் கேட்டு ஃபைல் ஒன்றைப் புரட்டிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் நிமிர்ந்தார். ஹெட்கான்ஸ்டபிளின் பிடியில் அவன் சிக்கியிருந்தான். பரட்டைத்தலையும், கை வைத்த பனியனும், பூப்போட்ட லுங்கியும் மண்ணெண்ணெயில் நாறிக் கொண்டிருந்தது.

கலியபெருமாள் ஃபைலைப் பட்டென்று மூடிவிட்டு அவனைக் கோபமாய்ப் பார்த்தார்.

“ஏண்டா! போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னுக்கு முன்னாடி வந்து தீக்குளிச்சு தற்கொலை பண்ற அளவுக்கு உனக்கு என்னடா பிரச்சினை ?”

“அய்யா…!” பரட்டைத்தலை சேவித்துவிட்டுக் கண்களில் நீரோடு பேச ஆரம்பித்தான்… “என்னை ஏமாத்திட்டாங்கய்யா…” 

“ஏமாத்திட்டாங்களா… யாரு…?”

 “இந்தக் கிராமத்துல சிட் பண்ட்ஸ் வெச்சு நடத்திட்டிருக்கிற கிருஷ்ணப் பிள்ளைத்தாங்கய்யா, அவர்கிட்டே இருபத்தஞ்சாயிரம் ரூபாய் சீட்டு போட்டிருந்தேன். மாசம் ஆயிரம் ரூபா வீதம் இருபத்தஞ்சு மாசம் கட்டணும்னு சொன்னாங்க… நானும் கட்டிக்கிட்டு வந்தேன். இருபது மாசம் கட்டின பிறகு போன வாரம் அஞ்சாயிரம் ரூபாய் தள்ளி சீட்டு எடுத்தேன். அதுப்படி அவங்க எனக்கு இருபதாயிரம் ரூபாய் தரணும். ‘ரெண்டுநாள் கழிச்சு வா… பணம் தர்றோம்’னு சொன்னாங்க… அவங்க சொன்ன மாதிரியே ரெண்டு நாள் பணத்துக்காகப் போனேன்… ‘பணமா… பணத்தைத்தான் அன்னிக்கே வாங்கிட்டுப் போயிட்டியே’ன்னு சொல்றாங்கய்யா…! ‘பணம் எப்பக் கொடுத்தீங்க… ஏன் இப்படி ஏமாத்தறீங்க’ன்னு கேட்டதுக்கு அடியாட்களை விட்டு அடிக்கறாங்கய்யா. எனக்கு நியாயம் கிடைக் கறதுக்காகத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னாடி தீக்குளிக்க வந்தேன்யா . ..”

இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் ஹெட்கான்ஸ்டபிளை ஏறிட்டார்.

 “கிருஷ்ணப்பிள்ளையோட போன் நெம்பர் தெரியுமா?” 

“தெரியும் ஸார்….”

 “சொல்லு…” 

டெலிபோனைப் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொண்டு ஹெட்கான்ஸ்டபிள் சொன்ன எண்களை டயல் செய்தார் கலியபெருமாள். மறுமுனையில் ரிங் போய் ரீஸீவர் எடுக்கப்பட்டது. 

“ஹலோ …” 

“கிருஷ்ணப்பிள்ளை இருக்காரா…?” 

“கிருஷ்ணப்பிள்ளைதான் பேசறேன்…” 

“மிஸ்டர் பிள்ளை… நான் இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் பேசறேன்…” 

“சொல்லுங்க ஸார்… என்ன விஷயம்?” 

“பொன்ராஜ்ன்னு ஒரு ஆளு… உங்ககிட்டே சீட்டுப் போட்டவனாம். சீட்டுப்பணம் கொடுக்காமே ஏமாத்திட்டீங்களாம். நியாயம் வேணும்னு சொல்லி ஸ்டேஷனுக்கு முன்னாடி தீக்குளிக்க வந்துட்டான்.” 

மறுமுனையில் கிருஷ்ணப்பிள்ளை பதற்றப்பட்டார். 

“ஸார்… அந்தப் பொன்ராஜ் சொல்றது பொய். ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து பணம் இருபதாயிரம் வாங்கிட்டுப் போய்ட்டான்…’ 

“என்னது…. வாங்கிட்டுப் போயிட்டானா?” 

“ஆமா … ஸார்…” கலியபெருமாள் எதிரே நின்றிருந்த பொன்ராஜைக் கோபமாய் ஏறிட்டார். 

“ஏண்டா… பணத்தை வாங்கிட்டியாமே?”

 “அய்யா … ஆ…ஆ…ஆ..!” என்று பெரிதாய் அரற்றிவிட்டுத் தலையில் அடித்துக்கொண்டான் பொன்ராஜ். “அவங்க பொய் சொல்றாங்கய்யா… அவங்க பேச்சை நம்பாதீங்கய்யா… பணம் இருக்கிறவங்க பேச்சை நம்பிக்கிட்டு என்னை மோசம் பண்ணிடா தீங்கய்யா …”

கலியபெருமாள் பொன்ராஜைக் கையமர்த்திவிட்டு மறுபடியும் டெலிபோனின் ரீஸிவருக்கு கையைக் கொடுத்தார். .

 “மிஸ்டர் பிள்ளை . . . ! நீங்க பணம் தரலைன்னு அவன் சொல்றானே…?” –

 “பச்சைப் பொய் ஸார்… லாக்-அப்புல வெச்சு கொஞ்சம் லாடம் கட்டுங்க. உண்மையச் சொல்லிடுவான்.”

“அவன் பணம் வாங்கிக்கிட்டதுக்கு அடையாளம் நீங்க ஏதாவது கையெழுத்து வாங்கியிருக்கீங்களா…?”

“கையெழுத்து வாங்கல ஸார்… ரெண்டு நாளைக்கு முன்னாடி அந்தப் பொன்ராஜ் பணம் வாங்க வந்தப்ப என்னோட சம்பந்தி ஒரு கார் ஆக்ஸிடெண்ட்ல மாட்டிக்கிட்டார்ன்னு போன் வந்தது… அப்ப அந்தப் பதற்றமான நேரத்துல அவன்கிட்டயிருந்து கையெழுத்து வாங்க மறந்துட்டேன். அதைக் காரணமா வெச்சிக்கிட்டு மறுபடியும் பணம் கேட்கிறான்னு நினைக்கிறேன் ஸார்…”

“ஸாரி… பிள்ளை …! நீங்க சொல்ற காரணம் எனக்குச் சரியாப் படலை. நீங்க பொன்ராஜுக்குப் பணம் கொடுத்ததுக்கான ஆதாரம் ஏதாவது இருந்தாத்தான் சட்டப்படி அவன் மேல் நடவடிக்கை எடுக்க முடியும். நான் பணம் கொடுத்துட்டேன்னு நீங்க வெறும் வாய்ல சொன்னா போதாது. ஏதாவது ஆதாரம் காட்டணும்… ”

“இன்ஸ்பெக்டர்…! நான் பொய் சொல்வேன்னு நீங்க நினைக்கிறீங்க ளா …?” 

“பண விஷயத்துல யார் எப்படி வேணும்னாலும் மாறலாமே…?” 

“இன்ஸ்பெக்டர்…” பிள்ளை பேச முயல், கலியபெருமாள் குரல் உயர்ந்தது. 

“ஒருத்தன் தற்கொலை பண்ற அளவுக்கு வந்து இருக்கான்னா அவன் பக்கம் நியாயம் இருக்கிற மாதிரிதான் என்னோட மனசுக்குப் படுது. ஸ்டேஷனுக்கு முன்னாடி தீக்குளிச்சு அவன் செத்துப் போயிருந்தா உங்க மேல் வன்கொடுமை வழக்குப் பதிவு பண்ணிக் கைது செய்வதைத் தவிர வேற வழியில்லை… இன்னிக்கு அவன் தீக்குளிக்க இருந்ததை நாங்க தடுத்துட்டோம்… நாளைக்கு நிலைமை எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது…” – 

“இன்ஸ்பெக்டர்… நான் என்ன சொல்ல வர்றேன்னா…?”

“வெரி ஸாரி பிள்ளை… உங்களுக்கு பனிரெண்டு மணி நேரம் டயம். அதுக்குள்ள பொன்ராஜுக்கு நீங்க பணத்தை செட்டில் பண்ணனும். இல்லேன்னா உங்க வீட்டுக்கு முன்னாடி போலீஸ் ஜீப் நிற்கும். அதுக்கப்புறம் உங்க சிட்பண்ட்ஸ் பிஸினஸ் படுத்துடும்…. பரவாயில்லையா?”. 

“வேண்டாம் ஸார்… பணத்தைக் கொடுத்துடறேன்…”

 “இப்ப சொன்னீங்களே… இது வார்த்தை!” – ரிஸீவரை உற்சாகமாய் வைத்தார் கலியபெருமாள்.

ரூபாய் இருபதாயிரத்தைப் பெட்டியில் வைத்துப் பூட்டிய பொன்ராஜின் மனசுக்குள் சந்தோஷம் கும்மியடித்தது.

‘ஐந்து லிட்டர் மண்ணெண்ணெயைத் தலையில் ஊற்றிக்கொண்டு ஒரு சின்ன ‘டிராமா’ பண்ணியதில் இருபதாயிரம் ரூபாய் லாபம். சம்பந்திக்கு கார் ஆக்ஸிடெண்ட் என்று சொன்னதுமே பிள்ளை பதறியடித்துக்கொண்டு என்னிடம் கையெழுத்து வாங்காமல் போனதுக்கு போனஸ் இருபதாயிரம் ரூபாய்…!’

பொன்ராஜுக்கு சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டும் போல் இருந்தது. ‘வெளியே லேசாய் பெய்துகொண்டிருந்த மழைக்கு பெப்பர் சிக்கனும் ஒரு குவார்ட்டரும் கையில் இருந்தால் சூப்பராய் இருக்குமே!’

வீட்டைப் பூட்டிக் கொண்டு தலையில் துண்டைப் போட்டபடி லேசாய்ப் பெய்துகொண்டிருந்த மழையில் ஒயின் ஷாப்பை நோக்கி நடந்தான் பொன்ராஜ்.

மறுநாள் காலை வந்த எல்லா நாளிதழ்களிலும் ஏதாவது ஒரு பக்கத்தில் ஒரு சின்ன பகுதியில் அந்தச் செய்தி இடம் பிடித்து இருந்தது.

மின்னல் தாக்கி உடல் கருகி இளைஞர் மரணம். சமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பொன்ராஜ். வயது 25. நேற்று கிராமத்து வீதியில் மழையில் நனைந்தபடி சென்றுகொண்டிருந்த போது மின்னல் இவரைத் தாக்கியது. அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தார். இவரையும் சேர்த்து, தமிழகத்தில் பெய்துவரும் மழைக்கு நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்ச லட்டைக் கதைகள் 14

அழகியசிங்கர்

இது என் 14வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். 

மஞ்சள் நிறப் பூனைக்குட்டி 

வீட்டு வாசல்படியில் ஒரு மஞ்சள் நிறப்பூனைக்குட்டி பார்க்கக் கவர்ச்சியாக இருந்தது.  அதைப் பிடித்துக் கொஞ்ச வேண்டும்.  கிட்ட நெருங்கிப் போனால் ஓடி விடுகிறது.

ஒருநாள் கதவு அருகில் யோசனையுடன் அமர்ந்து இருந்தது. அந்தத் தோற்றமே அழகு.  திரும்பவும் மெதுவாக அதற்குத் தெரியாமல் பிடித்து விடலாமென்று நினைத்தேன்.  நான் கிட்ட வருவதைப் பார்த்தவுடன் அலறி அடித்துக்கொண்டு ஓடியது. 

இந்தப் பூனையை கைவசப்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு.  எப்போதும் என் காரின் அடியில் கம்பீரமாகச் சயனித்துக் கொண்டிருக்கும்.  யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்களென்று திமிர் அதனுடன் ஒட்டிக்கொண்டிருக்கும்.

பார்த்தவுடன் மிரட்ட நினைத்தேன்.  கார் கிட்டே போய் ‘ ச்சூ…ச்சூ’  என்று விரட்டினேன்.  கவலையே படாமல் அசையாமலிருந்தது.  ஒரு கழியை எடுத்துக்கொண்டு விரட்டினேன்.  கழியைப் பார்த்தவுடன் பயந்து ஓடிவிட்டது.  

கொஞ்ச நாட்களாய் பூனையைக் காணவில்லை.  எங்கே போயிற்றென்று தெரியவில்லை.  முதலில் எங்கிருந்து இது வந்தது? 

எங்காவது விபத்தில் இது செத்துப் போயிருக்குமோ என்று தோன்றியது.  தெருவில் நான் நடந்து போகிற பாதையில்  இது கண்ணில் படவில்லை.  நகுலன் என்ற தமிழ் எழுத்தாளரின் நாவல்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.  அவர் எழுதிய நாவல்களின் ஒன்றின் பெயர்  ‘அந்த மஞ்சள் நிற பூனைக் குட்டி.’.   ஒரு வினாடி யோசித்தேன்.  சரிதான் அந்த நாவலுக்குள்  அது நுழைந்து விட்டது.

அஞ்சலட்டைக் கதைகள் 13





அழகியசிங்கர்

இது என் 13வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். 
கூடவே இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் வாய்விட்டுச் சிரிக்காமஙூருக்க முடியாது. 

எதிர்பாராத தகவல்?

நாங்கள் இருவரும் முடிவு செய்து விட்டோம்.  குறிப்பாக அதைப் பற்றிப் பேசுவதில்லை.  அது குறித்துத் தகவல் எப்படியாவது கிடைத்துவிடுமென்று இன்று மட்டும் தொலைக்காட்சி, தினசரி எல்லாம் பார்ப்பதில்லை, படிப்பதில்லை என்றும் முடிவு செய்தோம். தொலைப்பேசிகளைத் தூர வைத்துவிட்டோம்.  நான் புத்தகங்களுடன் ஐக்கியமானேன். அவள் ஜவ்வரிசி வடாம் இடுவது என்று தீர்மானித்து மும்முரமாக அதில் ஈடுபட்டிருந்தாள். ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு நாற்காலியை நகர்த்திக் கொண்டு வந்தாள்.  வெயில் படுகிற மாதிரி பால்கனிக்கு இழுத்துக்கொண்டு வந்தாள். பின் மடமடவென்று ஜவ்வரிசி வடத்தை இட்டாள்.
“ அலாதியான மகிழ்ச்சி.  ஜவ்வரிசி வடாம் இடுவதற்கு முன் என் நாக்கில் அதன் மாவைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னாள்.  புளிப்பு உரைப்பு சரியாக இருக்கிறதென்று சொன்னேன்.  
     ஒவ்வொரு பையிலும் பத்து பன்னிரண்டு புத்தகங்கள் படிப்பதற்காக வைத்திருப்பேன். இதுமாதிரி 6 பைகள் நிறையப் புத்தகங்கள்.  ஒரு பையை எடுத்து வைத்துக்கொண்டேன். அந்தப் பையிலிருந்து ஒரு புத்தகத்தில் சில பக்கங்களைப் படித்துவிட்டு வைத்துவிடுவேன்.  பிறகு இன்னொரு புத்தகம். இப்படியாக  நான் புத்தகம் படிப்பது போய்க் கொண்டிருக்கும். இன்று சாப்பாடு முடிந்தவுடன் சில மணி நேரம் தூங்கலாமென்று போய்விட்டேன்.  
பொழுது மெதுவாக நகர்ந்து நகர்ந்து நடுப்பகலைத் தாண்டி இரவும் வந்து விட்டது.  நாங்கள் குறிப்பாக அதைப் பற்றிப் பேசவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது.  நான் எழுதற கதையெல்லாம் அதைப் பற்றியே எழுதுகிறேன் என்று பலர் குற்றம் சாட்டி உள்ளார்கள்.  அதனால் ஒரு கதையாவது அதைப் பற்றிக் குறிப்பிடாமல் எழுதலாமென்று நினைத்தேன்.
இரவு தூங்குவதற்குப் போகும்போது ஜவ்வரிசி வடாம் போட்டது பற்றி பெண்ணிடம் சொல்லலாமா என்று மனைவி கேட்டாள். சரி என்றேன்.
“ பெண்ணிற்கு ஆவலுடன் தொலைப்பேசி செய்தாள். பெண் தொலைப்பேசியை எடுத்தாள்.  அம்மா இன்றைக்கு 768.  மரணம் 100 என்றாள் பெண்.  

அஞ்ச லட்டைக் கதைகள் 12

அழகியசிங்கர்


இது என் 12வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். 
கூடவே இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் வாய்விட்டுச் சிரிக்காமலிருக்க முடியாது. 

ஏன் இப்படி?

இந்தக் கொடூரமான கொரோனா காலத்தில் நான் வெளியில் செல்வது ரொம்ப ரொம்ப குறைச்சல்.  வயதானவர்கள் போகக்கூடாதென்று யாரையெல்லாம் வயதானவர்கள் என்று அரசாங்கம் சொன்னதோ அதில் நான் அடங்குவேன் என்பதால் நானும் போகவில்லை. 
ஒரு மாதம்வரை நான் வீட்டைவிட்டு வெளியில் போகவில்லை.  பின் ஒருநாள் மாத்திரைகளை வாங்கச் செல்லலாமென்று கிளம்பினேன்.  என் டூ வீலர்கள் எதுவும் ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்தன.  ஒருவழியாகத் தாஜா பண்ணி கைனடிக் ஹோன்டா வண்டியை ஓட்டத் தயாரானேன்.
அசோக் நகரில் உள்ள மருந்துக் கடைக்கு முகமூடி அணிந்து சென்றேன்.  கடைக்கு முன்னே நிறையா முகமூடிகள்.  நின்று நிதானித்து மாத்திரைகளை வாங்கினேன். 
திரும்பும்போது வழியில் பிள்ளையார் கோயில் மூடி இருந்தது.  அதன் பக்கத்தில் ஒரு மூலையில் ஒரு வெளிநாட்டுக்காரன் அமர்ந்திருந்தான்.  தாடி மீசையுடன்.  உற்றுப் பார்த்தால் அவன் ஒரு யோகியாக இருக்கலாமென்று தோன்றியது. 
கிட்டே போய் ஆங்கிலத்தில்,  “நீ யார்?’  என்று விசாரித்தேன். அவனுக்கு ஆங்கிலம் புரியவில்லை.  அவன் சொன்னான்:  ‘நான் ரஷ்யன்’  என்று.  தடுமாறித் தடுமாறி எனக்குப் புரிய வைத்தான்.  
கை ஜாடைக் காட்டி சாப்பாடு எதாவது வேண்டுமா வென்று கேட்டேன்.  தலை ஆட்டினான்.  பக்கத்தில் உள்ள ஓட்டலுக்குப் போய் டிபன் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தேன். அவசரம் அவசரமாகச் சாப்பிட்டான்.
எனக்கு அவனை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்று தோன்றியது. 
வீட்டிற்குப் தொலைப்பேசி செய்து அவனைப் பற்றி விபரம் சொல்லி  அழைத்துக்கொண்டு வரட்டுமா என்று மனைவியிடம் கேட்டேன்.  
உடனே,  ‘நீங்களும் போங்கள் அவனுடன்,’  என்றாள் அவள்.