அழகியசிங்கர்
எழுத்தாளர் சுஜாதாவும் நானும் என்ற தலைப்பில் ரகுநாதன் 15.12.2018 அன்று (சனிக்கிழமை) சிறப்பாக உரை நிகழ்த்தினார். இரண்டு நாட்களால் நீங்கள் முதல் இரண்டு பகுதிகளை ரசித்திருப்பீர்கள். இதோ மூன்றாவதும் கடைசிப் பகுதியையும் அளிக்கிறேன்.
அழகியசிங்கர்
எழுத்தாளர் சுஜாதாவும் நானும் என்ற தலைப்பில் ரகுநாதன் 15.12.2018 அன்று (சனிக்கிழமை) சிறப்பாக உரை நிகழ்த்தினார். இரண்டு நாட்களால் நீங்கள் முதல் இரண்டு பகுதிகளை ரசித்திருப்பீர்கள். இதோ மூன்றாவதும் கடைசிப் பகுதியையும் அளிக்கிறேன்.
அழகியசிங்கர்
எழுத்தாளர் சுஜாதாவும் நானும் என்ற தலைப்பில் ரகுநாதன் 15.12.2018 அன்று (சனிக்கிழமை) சிறப்பாக உரை நிகழ்த்தினார். அதன் முதல் பகுதியை நீங்கள் ரசித்திருப்பீர்கள். இதோ இரண்டாவது பகுதியையும் ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அழகியசிங்கர்
எழுத்தாளர் சுஜாதாவும் நானும் என்ற தலைப்பில் ரகுநாதன் 15.12.2018 அன்று (சனிக்கிழமை) சிறப்பாக உரை நிகழ்த்தினார். அதன் முதல் ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்.
அழகியசிங்கர்
நாளை (15.12.2018) சனிக்கிழமை நடைபெற இருக்கிற கூட்டத்தைப் பற்றிய அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.
அழகியசிங்கர்
ஓட்டல் சங்கீதாவில் பா ராகவனையும், ராஜாமணியையும் சந்தித்தேன். இன்று பாரதி பிறந்த நாளை முன்னிட்டு üமனதுக்குப் பிடித்த கவிதைகள்ý புத்தகப் பிரதிகளைக் கொடுத்தேன். நூதன முறையில் நான் பாரதி விழாவைக் கொண்டாடுகிறேன். இதோ அவர்களுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.
அழகியசிங்கர்
இன்று பாரதியாரின் பிறந்த தினம். நான் தயாரித்த üமனதுக்குப் பிடித்த கவிதைகள்ý புத்தகத்தின் 4 பிரதிகளை நான்கு கவிதை எழுதுபவர்களுக்கு பாரதி மீது பற்று உள்ளவர்களுக்கு அவர்கள் வீடுகளைத் தேடிக் கண்டுபிடித்து புத்தகப் பிரதியைக் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். பின் அதை முகநூலிலும் வெளிப்படுத்தலாமென்று நினைக்கிறேன். நான் வசிக்கும் மேற்கு மாம்பலத்தில் அவர்களும் வசிக்க வேண்டும். முடியுமா?
இத் தொகுதியில் வெளியான கவிஞர்களுக்கு இப் புத்தகத்தை இப்போது தரப் போவதில்லை. சில மாற்றங்களை ஏற்படுத்திவிட்டு அனுப்ப உள்ளேன்.
இத் தொகுதியில் நான் தேர்ந்தெடுத்த பாரதியாரின் பாடலை இங்கே பதிவு செய்கிறேன்.
கண்ணன் – என் காதலன்
சி சுப்பிரமணிய பாரதி
ஆசை முகமறந்து போச்சே – இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியுதொரு தேற்றம் – அதில்
கண்ண னழகுமுழு தில்லை
நண்ணு முகவடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.
ஓய்வு மொழிதலுமில் லாமல் – அவன்
உறவை நினைத்திருக்க முள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய் – அந்த
மாயன் புகழினையெப் போதும்
கண்கள் புரிந்துவிட்ட பாலம் – உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு.
பெண்க ளினத்தி லிதுபோலே – ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?
தேனை மறந்திருக்க வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வைய முழுதுமில்லை தோழி.
கண்ணன் முகமறந்து போனால் – இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் – இனி
வாழும் வழியென்னடி தோழி?
அழகியசிங்கர்
எனக்கு இரு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவர் சினிமாவில். இன்னொருவர் நாடகத்தில். ஒரு காலத்தில் நாங்கள் மூவரும் வேற வேற வங்கிகளில் பணிபுரிந்தவர்கள். சினிமாவில் ஆர்வமாய் ஈடுபட்டவர், உலகச் சினிமாவே எடுத்துப் புகழ் பெற்றுவிட்டார். இன்னும் தொடர்ந்து சினிமாவைப் பற்றிய சிந்தனைகளுடன் வாழ்ந்து வருபவர்.
இன்னொரு நண்பர் நாடகத்தில் தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். நாடகத்திற்காக ஒரு பத்திரிகையை துணிச்சலாக நடத்தியவர். அந்தப் பத்திரிகையின் மூலம் பல நாடகங்கள் தமிழுக்குத் தெரிய வந்துள்ளன. நாடகத்தில் பங்குகொண்டவர் தன் எண்ணத்தில் தீவிரமானவர்.
8ஆம் தேதி அவர் போன் செய்தார். இரண்டு நாடகங்களை அவர் வீட்டு மொட்டை மாடியில் அரங்கேற்றம் செய்யப் போவதாகக் குறிப்பிட்டார். 9ஆம் தேதி மாலை 7 மணிக்கு.
எப்படியும் அந்த இரு நாடகங்களைப் பார்த்தே தீருவது என்று தீர்மானித்திருந்தேன். கே கே நகரில் உள்ள அவர் வீட்டிற்குச் சென்றேன். மொட்டை மாடியில் ஒரு அகலமான இடத்தில்தான் நாடகங்கள் நடந்தன. எளிமையான முறையில் அரங்கேற்றம்.
சமீபத்தில் பல நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன். ஆனால் திருப்தி ஏற்படுவதில்லை. இரண்டு நாடகங்களைப் பார்த்தவுடன் சொல்ல முடியாத அளவிற்குத் திருப்தி. நம் நேரம் வீணாகப் போகவில்லை என்று தோன்றியது.
ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் இரு நாடகங்களும் நடந்து முடிந்து விட்டன. அந்த முறையும் எனக்குப் பிடித்திருந்தது.
ஒரு நாடகம் இத்தாலிய நாடகமான கொடுங்கோலர்கள்
என்ற நாடகம். இதை இத்தாலியில் எழுதியவர் மேரியோ பிராட்டி. தமிழில் புவியரசு செய்துள்ளார். வெளி பத்திரிகையில் பிரசுரமான நாடகம்.
இன்னொரு நாடகம் ஹங்கேரிய நாடகம். வாருங்கள் மயிரைச் சாப்பிடுவோம் என்ற தலைப்பு. இந்த இரண்டு நாடகங்களில் முதல் நாடகத்தை நான் ரொம்பவும் ரசித்தேன். எளிமையான முறையில் இந் நாடகங்கள் அரங்கேற்றம் ஆயின.
ஒவ்வொரு நடிகரும், நடிகையும் தடுமாற்றம் எதுவுமில்லாமல் சிறப்பாக நடித்தார்கள்.
மிகக் குறுகிய இடத்தில், அவ்வளவு சிறப்பாக நடத்திக் காட்டினார்கள். இரண்டாவது நாடகத்தில் கொஞ்சம் அரட்டையான வசனங்கள் உள்ளன என்றாலும் என்னால் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் கூத்துப்பட்டறையின் சார்பு அந்த நாடகத்தில் இருக்குமோ என்று தோன்றியது.
தன் முயற்சியில் சிறிதும் தளர்வடையாமல் தொடர்ந்து நாடக நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நண்பரை நான் அறிமுகப்படுத்தாமல் இருக்க முடியாது. அவர்தான் வெளி ரங்கராஜன்.
இந்த இரு நாடகங்களும், நாடகவெளியுடன், திணைநில வாசிகள் என்ற அமைப்புடன் சேர்ந்து நடத்தப்பட்டன.
இரண்டு நண்பர்கள் என்று குறிப்பிட்டேன். ஒரு நண்பர் வெளி ரங்கராஜன். சினிமாவில் தன் தீவிரத்தைச் செலுத்துபவரைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவர்தான் அம்ஷன்குமார்.
அழகியசிங்கர்
கடந்த ஓராண்டாக நான் முயற்சி செய்த புத்தகம்தான், ‘மனதுக்குப் பிடித்த கவிதைகள்’ என்ற புத்தகம். போன புத்தகக் காட்சியின்போது ஒரு நிறுவனம் ஒரு கவிதைத் தொகுப்பு நூலைக் கொண்டு வந்திருந்தது. அதில் பல கவிஞர்களின் கவிதைகளை அந்தப் புத்தகத்தில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்தப் புத்தகத்தை உருவாக்கியவர்களும் என் நண்பர்கள்தான். ஆனால் கவிதை என்றால் இதுதான் என்று ஒரு சிலரை புறக்கணித்து ஒரு அதிகாரத்தைச் செலுத்தி உள்ளார்கள்.
அப்போது ஒரு முடிவு செய்தேன். நாமே ஏன் இப்படி ஒரு தொகுப்பைக் கொண்டு வரக்கூடாது என்பதுதான் அது. நான் 400க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளைச் சேகரித்து வைத்திருந்தேன். அதில் தோன்றும் கவிதைப் புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை மட்டும் தேர்ந்தெடுத்து முகநூலில் குறிப்பிட்டு வர ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் விருட்சம் என்ற பத்திரிகையை கவிதைக்காகத்தான் கொண்டு வந்தேன்.
சிலசமயம் உற்சாகமாகவும், சிலசமயம் மறந்து போயும் இந்தப் பதிவை உருவாக்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய முயற்சி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர்ந்து கொண்டிருந்தது. முதலில் ஒரு நூறு கவிதைகளைக் கொண்டு வரலாமென்று கொண்டு வரத் துவங்கினேன். முடித்தும் விட்டேன்.
நூறு கவிஞர்களுடன் இந்தத் தொகுதி முடியாது என்று எனக்குத் தெரியும். அதனால் 100 கவிதைகள் அடங்கிய இத் தொகுப்பை முதல் தொகுதி என்று முடித்துள்ளேன்.
இதோ இரண்டாவது தொகுதி திரும்பவும் துவங்க உள்ளேன். முதல் தொகுதியில் விட்டுப்போன கவிஞர்களின் கவிதைகள் இரண்டாவது தொகுதியிலும் மூன்றாவது தொகுதியிலும் திரட்டப்படும். பெரும்பாலும் புதுக்கவிதைகள்தான் இதில் இடம் பெறும் என்றாலும் மரபுக் கவிதைகளையும் சேர்க்க முடிவு செய்துள்ளேள். முதல் தொகுதியிலேயே பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் கவிதைகளைச் சேர்த்துள்ளேன்.
கவிதைத் தொகுதிகளிலிருந்துதான் இத் தொகுப்பை உருவாக்கி உள்ளேன். பத்திரிகைகளில் பிரசுரமாகும் கவிதைகளைத் தொகுத்தால் இன்னும் அதிகமாகப் போகும்.
நான் ஒவ்வொரு முறையும் கவிதைத் தொகுதிகளில் போய் கவிதைகளைத் தேடும்போது கவிதைகளிலேயே மூழ்கி விடுவேன். படிக்க படிக்க கவிதைகள் அற்புதமான உணர்வை வெளிப்படுத்துவதாகத் தோன்றும். ஏன் பரவசநிலையைக் கூட அது உருவாக்கி விடுகிறது. நிச்சயமாக இந்தத் தொகுப்பை வாசிப்பவர்கள் அந்த நிலையை உணரக்கூடும்.
ஒரு முறை அசோகமித்திரனுடன் அவர் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு கவிதையின் ஒரு வரியைக் கூறி ஆனந்தப்பட்டார். அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். பொதுவாக நாங்கள் கவிதைகள் குறித்துப் பேச மாட்டோம். அவர் சொன்ன பாடலின் வரி பாரதியாருடையது.
கண்ணன் என் காதலன் என்ற தலைப்பில் பாரதியார் எழுதிய ஒரு வரி ‘ஆசை முகமறந்து போச்சே.’ எனக்கும் அந்தப் பாடலில் வரி வித்தியாசமாகப் பட்டது. ஆசை முகமறந்து போவது என்றால் என்ன ஆகும். வாழ்க்கையே முடிவுக்கு வந்து விடும்.
அவருடன் பேசிவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் அந்தக் கவிதையை என் தொகுப்பில் சேர்த்தேன். அதேபோல் என் நண்பர் குவளைக் கண்ணன் எழுதிய கவிதை ஒன்று. அவர் இறந்து போனாலும் அவர் கவிதை மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இத் தொகுப்பில் அவர் எழுதிய கவிதையை ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும்.
நாம் எல்லோரும் கவிதைகளைக் கொண்டாடுவோம். பாரதியாரின் பிறந்த தினமான இந்த மாதத்தில் இத் தொகுப்பு வருவது பொருத்தமாக உள்ளது. பாரதி பிறந்தத் தினம் 11. இன்று இதை டைப் அடிக்கும்போது தேதி 9.
100 கவிதைகள் கொண்ட முதல் தொகுப்பு 150 பக்கங்களைத் தொட்டு விட்டது. இத் தொகுப்பின் விலை ரூ.120 என்று வைத்திருந்தாலும், ரூ.100க்குத் தர விரும்புகிறேன். இத் தொகுப்பு வேண்டும் என்பவர்கள் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம். குறுஞ்செய்தி அனுப்பினாலே போதும். தொலைப்பேசி எண்: 9444113205.
அழகியசிங்கர்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பில் வ வே சுவும் தஞ்சாவூர் கவிராயரும் எழுத்தாளர் படைப்பாளி சுந்தர ராமசாமியைப் பற்றி உரை நிகழ்த்தினார்கள். தி நகரில் கிருஷ்ணகானசபா பின்னால் வீற்றிருக்கும் காமகோடி ஆடிட்டோரியத்தில் கூட்டம் நடைபெற்றது.
இப்படி ஒவ்வொரு மாதமும் கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்களில் முக்கியப் பங்கு வகுப்பவர் சுப்பு அவர்கள். தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை என்ற நாவல் அது வெளி வந்த ஆண்டில் சாகித்திய அக்காதெமி பரிசுபெற எல்லாத் தகுதியும் பெற்றிருந்தும், அதற்கு எந்தப் பரிசும் கிடைக்கவில்லை. அப்போது பரிசு கிடைப்பதற்கான பேச்சை அந்த நாவல் உருவாக்கியிருந்தது.
மௌனி என்ற எழுத்தாளர், சுந்தர ராமசாமியின் இந்தப் படைப்புக்குப் பரிசு கிடைக்கக் கூடாதென்று சாபம் இட்டதாகப் பேச்சாளர்களில் ஒருவர் குறிப்பிட்டார்.
உண்மையில் அதுதான் நடந்தது. கடைசிவரை சுந்தர ராமசாமிக்கு எந்தப் பரிசும் கிட்டவில்லை.
அவர் வாழ்ந்த 8 ஆண்டுகளில் சுந்தர ராமசாமி 40000 கடிதங்களுக்கு மேல் எல்லோருக்கும் கடிதங்கள் எழுதியிருப்பதாகவும் தகவலைப் பகிர்ந்துகொண்டார்கள். இக் கடிதங்களும் புத்தகமாக வரவில்லை.
இதுமாதிரியான கூட்டங்கள் தொடர்ந்து நடப்பதை நான் வரவேற்கிறேன். இன்றைய சூழ்நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் பெயரைக் கூட உச்சரிக்காமல் இருட்டடிப்பு செய்துவிடுவார்களோ என்று தோன்றுகிறது. இந்த நிலை முழுவதும் மாற வேண்டும்.
ஏனோ எல்லோரும் ரசித்த சுந்தர ராமசாமியின் üகொள்கைý என்ற கவிதையைக் குறிப்பிடவில்லை என்பது தெரியவில்லை.
மேற்கே
ரொமான்டிசிஸம்
நாச்சுரலிஸம்
ரியலிஸம்
அப்பால்
இம்பிரஷனிஸம்
என் மனைவிக்குத்
தக்காளி ரஸம்.
அப்பால்
ஸிம்பலிஸம்
கூபிஸம்
ஸர்ரியலிஸம்
மீண்டும்
வெறும்
ரியலிஸம்
அப்பால்
அதற்கும்
அப்பால்?
சொல்லும்
எட்மண்ட் வில்சன்
நீர் சொல்லும் கனிவாய்.
சொல்லும்
மிஸ்டர் பிரிச்செட்
நீர் சொல்லும்
தயைகூர்ந்து
ஸôத்ரேக்கு
எக்ஸிஸ் –
டென்ஷலிஸம்
காமுவுக்கு
இன்னொன்று
பின்னால்
வேறொன்று.
காமுவின் விதவைக்கு
மற்றொன்று.
பிறிதொன்று
அவள் அருமைப்
பாட்டிக்கு.
கரடிக்கு கம்யூனிஸம்
கதர்க் குல்லா சோஷலிஸம்
டாலர் ஹ÷மனிஸம்
பீக்கிங்கு
என்ன?
சொல்லும்
ஏ.ஐ.ஆரே
சொல்லும்
மிக விரைவாய்.
நாம எல்லாம்,
டமில் எழுத்தாளர்
நமக்கோ
பிளேஜியரிஸம்
அழகியசிங்கர்
என்னுடைய நாவலான üஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்ý என்ற புத்தகத்திற்கு இரண்டு அட்டைப் படங்களைத் தயாரிக்கும்படி ஆகிவிட்டது. இதில் எந்தப் படத்தை எடுத்துக்கொள்வது என்ற குழப்பம் இருந்ததால் இரண்டு அட்டைப் படங்களிலும் பிரதிகள் அடித்து வைத்திருக்கிறேன்.
இந்த அடிப்படையான குழப்பத்திற்குக் காரணம் என்னவென்றால் எல்லாமே நானாக இருப்பதால்தான். நானே பதிப்பாளர், நானே எழுத்தாளர், நானே விற்பனையாளர் என்று எல்லாம் நானாக இருப்பதால் இந்தக் குழப்பம் ஏற்படுகிறது.
உங்கள் முன் இந்தப் படங்களை சமர்ப்பிக்கிறேன். நீங்கள் கூற முடியும் என்றால் கூறுங்கள். எந்த அட்டையை எடுத்துக் கொள்வது?
அ. மஞ்சள் நிற அட்டை
ஆ. நீல நிற அட்டை
நீங்கள் அ அல்லது ஆ என்று சொன்னால் போதும்.