அழகியசிங்கர்
அம்ஷன் குமாரின் 'ஆவணப்பட இயக்கம்' புத்தகம் குறித்து இன்று அஜயன் பாலா பேசியதை இங்கு ஒளிபரப்பு செய்கிறேன்.
Author: virutcham
நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …16
அழகியசிங்கர்
புத்தகக் காட்சியை இரண்டு விதமாகப் பயன்படுத்துகிறேன். விருட்சம் வெளியீடாக வந்துள்ள புத்தகங்களையும் விற்பனைக்காகக் கொடுத்துள்ள புத்தகங்களையும் விற்கிறேன். இது முதல் வகை. இதில் வெற்றியோ தோல்வியோ நான் பொருட்படுத்தப் போவதில்லை. மரத்தின் முன் உறுதிமொழி எடுத்துள்ளதால் இது குறித்து எழுதப் போவதில்லை.
நான் புத்தகங்களை வாங்குகிறேன். இது இரண்டாவது வகை. இதனால் வீட்டில் எனக்கு வசவு கிடைக்கிறது. படிக்க வேண்டும் என்கிற புத்தகங்களை வாங்குகிறேன். கிட்டத்தட்ட நான் வாங்கிக் குவிக்கும் புத்தகங்கள், விற்கும் புத்தகங்களை விட அதிகமாகப் போய்விடும். அதனால் இரண்டு விதங்களில் புத்தகக் காட்சி எனக்கு முக்கியமாகப் படுகிறது. ஒன்று நான் விற்க முயற்சி செய்கிறேன். இரண்டு வாங்கிச் சேகரிக்கிறேன்.
இப்போது என் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு எழுத்தாளர் புத்தகங்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். நேற்று அம்ஷன் குமார் புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
இன்று விமலாதித்தன் மாமல்லன். அவருடைய மூன்று புத்தகங்களை விருட்சம் ஸ்டால் விற்கிறது. 1. விமலாதித்த மாமல்லன் கதைகள். 2. புனைவு என்னும் புதிர். 3. ஷோபாசக்தியின் கதைகளை வைத்து புனைவு என்னும் புதிர் இரண்டாம் பாகம்.
முதல் புத்தகமான விமாலாதித்த மாமல்லன் கதைகளை எடுத்துக்கொள்வோம். விமலாதித்த மாமல்லன் கதைகள் என்ற புத்தகத்தை எடுத்துக்கொள்வோம். 344 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் இரண்டு குறுநாவல்கள், நான்கு நெடுங்கதைகள், 24 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.
1980லிருந்து 1994வரை எழுதப்பட்ட சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு. சிறுமி கொண்டு வநத் மலர் என்ற கதையை ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும்.
விமலாதித்த மாமல்லனின் இன்னும் இரண்டு புத்தகங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று புனைவு என்னும் புதிர். இத் தொகுதியில் உள்ள கட்டுரைகள் தமிழ் இந்துவில் தொடராக வந்தது. ஆனால் இப் புத்தகத்தில் சிறுகதையும் அந்தச் சிறுகதையைப் பற்றி அவருடைய அலசலையும் முன் வைக்கிறார். உதாரணமாக வண்ணநிலவனின் கதையான மிருகம் பற்றி சொல்லும்போது மிருகம் என்ற கதையையும் அது குறித்து மாமல்லனின் அலசலும் வெளிவருகிறது. இது முக்கியமான விஷயமாக எனக்குப் படுகிறது. அதேபோல் ஷோபாசகத்தியின் 12 கதைகளும் அவை குறித்த விமலாதித்த மாமல்லனின் பார்வையும் வெளிப்படுகிறது.
இந்த மூன்று புத்தகங்களும் விற்பனைக்கு விருட்சம் ஸ்டால் 403ல் உள்ளது. வாங்க வரவும்.
நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …17
அழகியசிங்கர்
இன்று மாலை 6 மணி சுமாருக்கு அம்ஷன் குமார் க.நா.சு வின் üவாழ்ந்தவர் கெட்டால்ý என்ற புத்தகத்தைப் பற்றி அறிமுக உரையை நிகழ்த்தினார். அவரை தமிழ்மணவாளன் அறிமுகப்படுத்தினார்.
நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …14
அழகியசிங்கர்

கடந்த 20 ஆண்டுகளாகப் புத்தகக் காட்சியில் இடம் பெறுகிறேன். அதன் மூலம் பல அனுபவங்கள். அலுவல் பொருட்டு ன் வெளியூரிலிருந்தாலும் புத்தகக் காட்சியின் நினைப்போடு இருப்பேன்.
இரண்டு விஷயங்களைக் குறித்துப் பேச விரும்பவில்லை. ஏன்னென்றால் நான் தினமும் நடைப்பயிற்சி செய்யும் ஒரு விசாலமான மரத்தின் முன் பேச மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்திருக்கிறேன்.
விருட்சம் ஸ்டாலில் என் புத்தகம் மட்டுமல்லாமல் பலருடைய புத்தகங்களையும் வாங்கி விற்கிறேன். நான் பெருமைப்படக் கூடிய பல புத்தகங்களை என் நண்பர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அவற்றையும் அறிமுகப் படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன். இதோ முதல் புத்தகத்தை அறிமுகப் படுத்துகிறேன்.
என் நண்பர் அம்ஷன் குமார் அவருடைய சொல் ஏர் பதிப்பகம் மூலம் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார். புத்தகத்தின் பெயர் ‘ஆவணப்பட இயக்கம்.’ 206 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.200தான். இப் புத்தகம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவு ஒரு ஆவணப்படத்தை எப்படி இயக்குவது என்பது பற்றி,
இன்னொரு பகுதி ஆவணப்பட வரலாறு. இதுவும் முக்கியமான பகுதியாகக் கருதுகிறேன்.
அம்ஷன்குமார் ஆரம்பத்திலிருந்து பல ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறார். ஒரு ஆவணப்படத்தைத் தயாரிப்பதில் தீவிரத்தன்மையைக் கொண்டவர். என்னால் மறக்க முடியாத அவருடைய ஆவணப்படங்களில் ஒன்று அசோகமித்திரனைப் பற்றியது. இன்னொன்று பாரதியார் பற்றியது. யாழ்பாணம் தட்சிணாமூர்த்தியைப் பற்றி அவர் எடுத்த ஆவணப்படம். தட்சிணாமூர்த்தியின் புகைப்படங்களைத் தவிர வேற எதுவும் இல்லை. ஆனால் அம்ஷன் குமார் தன் ஆவணப்படம் மூலம் தட்சிணாமூர்தியை உயிரோடு கொண்டு வந்ததுபோல் தோன்றியது.
கூடியவிரையில் இப் புத்தகம் ஒரு பாடப் புத்தகமாக திரைப்படக் கல்லூரிக்குப் போய்விடும் என்று தோன்றுகிறது.
இப் புத்தகம் விருட்சம் ஸ்டாலில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ.200தான்.
நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …12 இரண்டாம் பகுதி
இன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் விதம் ஒரு சிறிய புத்தக அறிமுகக் கூட்டம் நடத்த உள்ளேன். முதல் நாளான இன்று ‘எதையாவது சொல்லட்டுமா?’ என்ற கட்டுரைத் தொகுதியைப் பற்றி நண்பர் செந்தூரம் ஜெகதீசன் பேசிய இரண்டாம் பகுதியைக் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …12
நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …12
அழகியசிங்கர்
இன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் விதம் ஒரு சிறிய புத்தக அறிமுகக் கூட்டம் நடத்த உள்ளேன். முதல் நாளான இன்று ‘எதையாவது சொல்லட்டுமா?’ என்ற கட்டுரைததொகுதியைப் பற்றி நண்பர் செந்தூரம் ஜெகதீசன் பேசியதைக் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …11
அழகியசிங்கர்
14வது புத்தகமாக வளவ துரையனின் கவிதைப் புத்தகம். அப்பாவின் நாற்காலி என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 100 கவிதைகளுக்கு மேல். வளவ துரையன் சங்கு என்ற பெயரில் சிறுபத்திரிகை நடத்திக்கொண்டு வருகிறார். கதைகள், கவிதைகள் எழுதுபவர்.
நவீன விருட்சத்தில் அவர் கதைகள், கவிதைகள் பிரசுரித்துள்ளேன்.
பொதுவாக கவிதைப் புத்தகங்களுக்கு உலகமெங்கும் வாங்குபவர்கள் எண்ணிக்கைக் குறைவு. தமிழில் பல பதிப்பகங்கள் மூலம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் பாரதியார் கவிதைகள் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டியிருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது.
வளவ துரையன் கவிதை ஒன்றை இங்குக் கொடுக்க விரும்புகிறேன்.
பொம்மைகள்
அவன்வட்ட வடிவத்
துணிமேல் பொம்மைகள்
வைத்துள்ளான்.
போலிஸ் பொம்மை ஒன்று
திருடன் பொம்மையிடம்
பிச்சைகேட்பதாய் இருக்கிறது.
புலிக்குப் பக்கத்தில் மானும்
முயலும் சிரிக்கின்றன.
இராமாயணசெட்டில்
சீதையைக் காணோம்
இராவணன் கொண்டு
போயிருப்பானோ?
இலட்சுமியை விட்டுச்
சரஸ்வதி விலகி அமர்ந்துள்ளாள்.
தலையாட்டிப் பொம்மைகள்
அதிகம்தான்
இவை இப்படி
ஏன்என்று கேட்டால்
அவன்
பித்துப்பிடித்தவனாய்ச்
சிரிக்கிறான்.
வளவ துரையன் புத்தகம் விலை ரூ.100தான்.
நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..10
அழகியசிங்கர்
இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி 14 புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறேன். அப் புத்தகங்களைப் பற்றி சொல்வது முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். அது தவிர என் புத்தகக் (எண் : 403) விற்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய நூல்களையும் அறிமுகப்படுத்தும் எண்ணம் எனக்கு வந்திருக்கிறது. முதலில் விருட்சம் வெளியீடாக வந்துள்ள புத்தகங்களை முடித்து விடுகிறேன்.
‘எதையாவது சொல்லட்டுமா?’ என்பது என்னுடைய கட்டுரைத் தொகுதி. இத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் எல்லாம் 2012ஆம் ஆண்டு அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரைகள். என்னை உற்சாகப்படுத்தி பத்திரிகையில் எழுதி வைத்தா அம்ருதா ஆசிரியர் திலகவதிக்கும், என்னைத் தூண்டிய நண்பர் தளவாய் சுந்தரத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக் கட்டுரை எழுதி 6 ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் மறந்தே விட்டேன். பின் ஒருநாள் டிசம்பர் மாதத்தில் படுக்கையிலிருந்து தூங்கி எழுந்தபோது தோன்றியது அம்ருதாவில் நான் எழுதிய கட்டுரைகளைப் பற்றி. உடனே கணினியைத் தட்டினேன். அதில் வரிசையாக எழுதும்போதே பதிவு செய்து வைத்திருந்தேன். அத்தனையும் சேகரித்தேன். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் நான் எழுதியிருக்கிறேன். அப்போது கட்டுரை எழுதுவது சாதாரண விஷயமில்லை என்று எனக்குத் தோன்றியது. ஒவ்வொரு மாதமும் என்ன எழுதுவது என்ற யோசனை ஓடிக்கொண்டிருக்கும்.
ஒரு மாதத்திற்கு ஒரு முறை என்றாலும் கட்டுரை எழுதும்போது ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். சொன்னதையே திரும்பிச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.
நம் வாழ்க்கை சாதாரண வாழ்க்கை. காலையில் எழுந்து கொள்கிறோம், ஏதோ புத்தகம் படிக்கிறோம். தூங்கி விடுகிறோம். பெரிய அதிசயம் ஒன்றும் நடப்பதில்லை. ஆனால் கட்டுரை எப்படி எழுதுவது? என் வாழ்க்கையில் நடக்கும் சாதாரண நிகழ்ச்சிகளைத்தான் கட்டுரையாக மாற்றினேன். இக் கட்டுரைகள் பத்திரிகையில் வந்து கொண்டிருக்கும்போது லக்ஷ்மி மணிவண்ணன். பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அவர் வெளிப்படையாக மனதில் தோன்றுவதைச் சொல்லக் கூடியவர். அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. அவருடைய ‘கேட்பவரே’ என்ற கவிதைத் தொகுதியைப் படித்துவிட்டு எழுத வேண்டுமென்ற நினைக்கிறேன். அவர்தான் என் கட்டுரைத் தொகுதிக்கு அணிந்துரை எழுதி உள்ளார். அவருக்கும் என் நன்றி.
இக் கட்டுரைகள் எழுதிய விதம் பற்றி சொல்ல விரும்புகிறேன். உதாரணமாக சரக்கரை நோயிற்காக ஒரு மாத்திரையை பல ஆண்டுகளாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஒரு நாள் பேப்பரில் ஒரு செய்தி. அந்த மாத்திரையைச் சாப்பிடக்கூடாது, கெடுதல் என்ற செய்தி. அந்த மாத்திரியை விற்கக் கூடாதென்று அரசாங்கம் உத்தரவு போட்டிருந்தது. பேப்பரில் தலையங்கமாகவே அதை எழுதியிருந்தார்கள். உடனே அந்த மாத்திரையை நிறுத்திவிட்டேன். ஆனால் அதை எடுத்துக்கொள்ளச் சொன்ன மருத்துவருக்கு இது தெரியவில்லையே என்று தோன்றியது. இதை ஒரு செய்தியை கட்டுரையாக மாற்றி எழுதினேன். ஆனாலும் 22 மாதங்களாக நான் எழுதியது பெரிய விஷயமாக எனக்குப் பட்டது.
அக் கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 108 பக்கங்கள் கொண்ட புத்தகமாக எதையாவது சொல்லட்டுமா என்ற புத்தகம் உருவாகி உள்ளது. இதன் விலை : ரூ.90 தான்.
கீழ்க்கண்ட விருட்சம் வெளியீடின்
கீழ்க்கண்ட விருட்சம் வெளியீடின் புதிய புத்தகங்கள் 20% தண்ளுபடியில் விருட்சம் அரங்கம் எண் 403 ல் சென்னைப் புத்தகக் காட்சியில் கிடைக்கும்.
1. அழகியசிங்கர் கவிதைகள் – ரூ.350 – ச வி: ரூ.280
2. ஞாயிற்றுக்கிழமை தோறும்
தோன்றும் மனிதன் – நாவல் – ரூ.150 – ச வி : ரூ.100
3. பிரமிளும் விசிறி சாமியாரும் – விலை : 110 – ச.வி : ரூ.70
4. எதையாவது சொல்லட்டுமா – விலை : ரூ.190 – ச வி : ரூ.70
5. மனதுக்குப் பிடித்த கவிதைகள் – விலை ரூ.120 – ச.வி : 100
6. அலகில் அலகு – வேணு வேட்ராயன் – விலை ரூ.60 – ச.வி : ரூ.50
7. தெலுங்கு சிறுகதைகள் பகுதி 1, 2 – விலை ரூ.200 – ச வி : ரு150
8. சென்ற நூற்றாண்டின் சிறுகதைள் : விலை: 90 – ச வி : ரூ.70
9. அப்பாவின் நாற்காலி – வளவ.துரையன் – விலை : 120 ச வி : 100
10. க.நா.சு படைப்புகள் – உலக இலக்கியம் – விலை : 80 -சவி:70
11. க.நாசு படைப்புகள் – விமரிசனக்கலை – விலை : 120 – ச.வி100
12. க.நா,சு படைப்புகள் – 5. நல்லவர் 6. இலக்கிய விசாரம்
விலை : 90 – சவி: 70
மேலே குறிப்பிடப்பட்ட 13 நூல்களையும்ரூ.1230க்குப் பெறலாம். மொத்தமாக எல்லாவற்றையும் வாங்குபவர்க்கு எல்லாப் புத்தகமும் ரூ.1000 க்குக் கிடைக்கும்.
நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்…..8
அழகியசிங்கர்
நான் மூன்றாவதாகக் கொண்டு வந்த புத்தகம் üபிரமிளும் விசிறி சாமியாரும்ý என்ற புத்தகம். ஐந்தாண்டுகளுக்கு முன்பே, நான், பிரமிள், விசிறி சாமியார்,ý என்ற தலைப்பில் என்னுடைய வலைத்தளத்தில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் நடுவில் அந்தக் கட்டுரையை எழுதுவதை விட்டுவிட்டேன். பின் அக் கட்டுரைத் தலைப்பில் ஒரு மாற்றம் செய்து பிரமிளும் விசிறி சாமியாரும் என்று எழுத ஆரம்பித்தேன்.
பிரமிள் விசிறி சாமியாரைச் சந்திக்க என்னை அழைத்துக்கொண்ட சம்பவத்தை விவரித்திருப்பேன். அந்தச் சந்திப்பில் பிரமிளுடன்தான் விசிறிசாமியார் பேசிக்கொண்டிருந்தார். எனக்கோ சாமியார்களைப் பார்ப்பதில் அனுபவமில்லை. அவர்கள் எப்படியெல்லாம் பழகுவார்கள் என்பதும் தெரியாது.
ஆனால் பிரமிளுடன் இந்தச் சந்திப்பிற்குப் பிறகு விசிறி சாமியாரைத் திரும்பவும் சந்திக்கப் போகவில்லை. இந்தப் புத்தகத்தில் முதலில் விசிறி சாமியாரை பிரமிள் சந்தித்த விபரத்தையும் பின் பிரமிளைப்பற்றியும் எழுதியிருக்கிறேன்.
ஒரு இடத்தில் இந்தப் புத்தகத்தை என்னால் முடிக்கவே முடியாது என்று தோன்றியது. அந்த இடம் பிரமிளின் மரணத்தைப் பற்றி விவரிக்கிற இடம். ஏனோ அது சங்கடமாக இருந்தது. திரும்பவும் இந்தப் புத்தகத்தைக் கொண்டு வரவேண்டுமென்ற எண்ணம் வந்தவுடன் அதையும் எழுதி விட்டேன்.
இந்தப் புத்தகத்தில் கட்டுரைகள் விட்டு விட்டு எழுதியிருப்பதால் சொன்னதையே சில இடத்தில் சொல்லியிருக்கிறேனோ என்ற எண்ணம் தோன்றிக்கொண்டிருக்கிறது. திரும்பவும் நான் முழுவதும் படித்து சரி செய்துவிட்டேன்.
இப்போது என்ன தோன்றுகிறது என்றால் ஒரு வாசகனாக இந்தப் புத்தகத்தைப் படித்து அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது. 109 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.90தான். ஆனால் புத்தகக் காட்சியை ஒட்டி 20% தள்ளுபடியில் தரத் தயாராக உள்ளேன்.