காலில் செருப்பின்றி
நான்கு மைல் தொலைவு
நடந்து சென்று படித்தது….
மூன்று ஜோடி உடைகளையே
மாற்றி மாற்றிப் போட்டது
ஐந்து பைசா பென்சிலைத் தொலைத்து
அப்பாவிடம் அடி வாங்கியது….
பள்ளியிறுதி வகுப்பு வரை
தமிழ் மொழியில் கற்றது.
ஒரு புத்தகத்தில் அடங்கிய
புனை கதைகளாக விரிகின்றன
இத்தனையும் என் மகனுக்கு
நன்றி : உலா பதிப்கம், 132 வங்கி ஊழியர் குடியிருப்பு, திருவனைக்காவல், திருச்சிராப்பள்ளி 620 005
காற்றில் பறந்து என் மேசைக்கு வந்த இலைச்சருகு கோடை நகர்ந்த கதையைச் சொல்லி சரசரக்கிறது
நன்றி : கோடை நகர்ந்த கதை – கனிமொழி ஜி – உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18- பக்கம் : 72 – விலை : 65 – வெளியான ஆண்டு : மார்ச்சு 2016
ரொம்ப ஆண்டுகளுக்கு முன்னால் தோப்பில் முஹம்மது மீரான் அவர்களை விஜயா பதிப்பகத்தில் சந்தித்தேன். வேலாயுதம் அவர்கள்தான் முஹம்மது மீரானை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
மீரான் வியாபாரம் செய்பவர். அவருடைய புத்தகத்தை அவரே ஜலீலா பப்ளிஷிங் ஹவுஸ் என்ற பெயரில் பதிப்பகம் ஆரம்பித்து புத்தகத்தை விற்றுக்கொண்டிருந்தார். அவர் புத்தகங்களை வெற்றிகரமாக விற்றவர். இது புதிய தொழில். அவர் ஏற்கனவே மேற்கொண்ட வியாபாரம் இல்லை இது.
அன்று அவருடைய புத்தகங்களை வெற்றிகரமாக விற்றதைப் பற்றி சொன்னதை இன்னும் கூட என்னால் மறக்க முடியாது. நான் ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற நாவலைத்தான் படித்திருக்கிறேன். கூனன் தோபபு, துறைமுகம் நூலகள் என்னிடம் உள்ளன. இனிமேல்தான் எடுத்துப் படிக்க வேண்டும்.
ஒரு எழுத்தாளரைப்பற்றிய ஞாபகம் அவர் மறைந்த பிறகுதான் நமக்கு ஏற்படுகிறது. மீரானுக்கு அளிக்கும் அஞ்சலி அவர் புத்தகங்களை எடுத்து வாசிக்கும்போதுதான் நிறைவேறும் என்று தோன்றுகிறது. இதோ வாசிக்கிறேன்..
நேற்று காலை பத்து மணி சுமாருக்கு ஒரு செய்தி வந்தது. அந்தச் செய்தி என்னை திடுக்கிட வைத்தது. என் தூரத்து உறவினரின் மனைவி இறந்த செய்திதான் அது. வயது அதிகமாகவில்லை. ஆனால் அந்த பெண்மணி இறந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது. பத்தாவது நாளுக்கு வரும்படி அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சின்ன வயதில் ஒரு பெண் மரணம் அடைவதா?
இந்தச் செய்தியை அனுப்பியவருக்கு உடனே போன் செய்தேன். அப்போது அவர் சொன்ன தகவல் என்னைத் திடுக்கிட வைத்தது.
அந்தச் செய்தியை அனுப்பியவரின் சகோதரர் ராஜ கீழ்பாக்கத்தில் குடியிருக்கிறவர். அவர் விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
அவர், அவர் மனைவி, அவர்களுடைய பேரன் மூவரும் ஒரு டூ வீலரில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இடத்திற்கு திரும்பும்போது எதிரில் வேகமாக வந்த ஒரு ஸ்போர்ட்ஸ் டூ வீலர் இவர்கள் மீது மோதியது. இதில் அந்த இடத்திலேயே அவர் மனைவி இறந்து விட்டார். இவருக்கு தலையில் பலத்த காயம். அவர்களுடைய பேரனுக்கு காலில் எலும்பு முறிவு. ஸ்போர்ட்ஸ் டூ வீலரில் வந்தவனுக்கு முதுகில் எலும்பு முறிவு. இந்தச் செய்தியைக் கேட்டவுடன் என்னடா இது இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியைத் தருகிறாரே என்ற வருத்தம் அதிகமாக ஏற்பட்டு விட்டது.
அடிக்கடி டூவீலரில் பயணம் செய்பவன் நான். இந்தச் செய்தியைக் கேட்டவுடன், டூ வீலரை ஓட்டுவதைக் குறித்து பல சந்தேகங்கள் வர ஆரம்பித்து விட்டன. ஒரு டூ வீலர் இன்னொரு டூ வீலர் மீது மோதி உயிரையே பறிக்குமா என்பதில் ஏகப்பட்ட சந்தேகங்கள் ஏற்பட ஆரம்பித்து விட்டன.
நான் அடிக்கடி செல்லும் ஆர்யாகவுடர் தெருவில் டூவீலரை ஓட்டிக்கொண்டு போகும்போது இது மாதிரியான விபத்துக்கள் நடப்பதற்கு எல்லாவித நியாயமும் இருக்குமென்று தோன்றும். அவ்வளவு மோசமான தெரு. தினமும் 10 முறையாவது அந்தத் தெருவில் டூ வீலரில் சென்று கொண்டிருப்பேன். பின்னால் மனைவியையும் உட்கார வைத்துக்கொண்டு.
இறந்து போனவருக்கு ஐம்பது வயதுதான் இருக்கும். அவர் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார் இதுமாதிரியான மரணம் ஏற்படக்கூடுமென்று.
நான் பொதுவாக செய்தித் தாள்களை வாங்குவதில்லை. என்ன காரணம் என்றால் செய்தித்தாள்கள் முழுவதும் மரணம் பற்றிய தகவல்கள்தான் அதிகம். சிலர் கொலை செய்யப்பட்டு விடுவார்கள், சிலர் தற்கொலை செய்து கொண்டு விடுவார்கள், சிலர் விபத்தில் சிக்கி இறந்து விடுவார்கள். இதைத்தான் செய்தித்தாள்கள் தெரிவித்துக்கொண்டிருக்கும்.
என்னுடன் நடைபயிலும் நண்பர் ஒருவர் இப்போதெல்லாம் கொலை செய்யப்படுவது அதிகப்படுகிறது என்று தெரிவித்தார். அதைக் கேட்டவுடன் மூட் ஒரு மாதிரியாகப் போய்விட்டது.
இந்தத் தருணத்தில் நகுலன் கவிதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
இருப்பதற்கென்றுதான் வருகிறோம்
இல்லாமல் போய்விடுகிறோம்.
இறந்து போனவரின் ஆத்மா சாந்தியடைய இதயப் பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
100 கவிஞர்களின் 100 கவிதைகள் கொண்ட தொகுப்பு மனதுக்குப் பிடித்தக கவிதைகள் தொகுதி 1. இதே இரண்டாவது தொகுதியையும் ஆரம்பித்தாகிவிட்டது.
முதல் தொகுதியில் திசிசடை கவிதையைத் தேர்ந்தெடுக்கும்போது ஒரு சிறிய தவறு நடந்துவிட்டது. திரிசடை என்ற எழுத்தாளர் நகுலனின் சகோதரி. அவருடைய கவிதைகள் முழுவதையும் கோபால்சாமி என்பவர் வெண்ணிலா என்ற புனைபெயரில் தேர்ந்தெடுத்துள்ளார். அப்படி தேர்ந்தெடுக்கம்போது தவறுதலாக விருட்சம் இதழில் வெளிவ்ந்த பசுவய்யாவின் நேற்றைய கனவு என்ற கவிதையை திரிசடை கவிதைகளுடன் சேர்த்து விட்டார். இந்தத் தொகுதி தொகுக்கும்போது திரிசடை உயிரோடு இருநதிருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காது. திரிசடையின் கணவர் சுவாமிநாதன் மனைவியின் நினைவாக இந்தத் தொகுப்பை கொண்டு வந்துள்ளார்.
மனதுக்கு பிடித்த கவிதைத் தொகுதி 1 என்ற கவிதைத் தொகுதி மிகக் குறைவான பிரதிகளே அச்சிடப்படுகின்றன. அதனால் இந்தத் தவறு நீக்கப்பட்டுள்ளது. இனிவரும் தொகுதியில் திரசடையின் உண்மையான கவிதை மட்டும் நீடிக்கும். இதோ நான் தேர்ந்தெடுத்த திரிசிடை கவிதை.
சிலந்தி
சிலந்தி ஒன்றைக் கண்டேன் மேலே சுவரிலும் இல்லை கிழே தரையிலும் இல்லை சுவாமி அறையில் வெள்ளித் தாம்பாளத்தில் வண்ணமிக்க இழைக் கோலமாம் இருதயக் கமலத்தில் வைத்திருக்கும் எரியும் வெள்ளி குத்துவிளக்கின் அருகில் கருகருவென்று வெள்ளைக் கோலத்தின் மேலே எட்டுக்கால்களோடு சுற்றிச்சுற்றி வரும் சிலந்தி.. காலை மாலை விளக்கு ஏற்றும் நேரமெல்லாம்.. அடியில் பிரதட்சிணம் செய்யும் இச் சிலந்தி உன் மாயையையும் காளஹஸ்திக் கோவிலையும் நினைத்துக்கொள்வேன்
இன்று விளக்கு வைக்கும் நேரம்
என் சிலந்தி
அசைவற்றுக் கிடந்ததைக் கண்டேன்.
உன் காலடிகளை நம்பி ஒரு சில நாட்கள்
வாழ்ந்த சிலந்திக்கு
நீ முக்தி யளித்ததாகவும் நினைத்தேன்
ஆனால் எனது உள்ளம்
அதன் ஓடி ஆடிய கால்களைத் திரும்பத்
திரும்ப நினைப்பதும் ஏனோ?
நான் மார்ச்சு முதல் தேதி அமெரிக்காவில் உள்ள பீனிக்ஸ் என்ற இடத்திற்குச் சென்றேன். அப்போது அங்குக் குளிர் தாங்க முடியவில்லை. உண்மையில் பீனிக்ஸ் உஷ்ணப் பிரதேசம். ஆனால் குளிரில் நடுங்கும்படி குளிரை வெளிப்படுத்தியது. இரவு நேரத்தில் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு தூங்குவேன். நான் இருந்த இரண்டு மாதங்களில் மின்விசிறியைப் போடவில்லை. பல இடங்களுக்கும் சுற்றிப் பார்த்துவிட்டேன். சென்னை கிளம்பும் சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெயில் தலை காட்டியது. எப்படி குளிரோ அதை விட மோசமானது வெயில் பீனிக்ஸில். வேர்த்துக் கொட்டாத வெயில்.
ஒரு இடத்திலிருந்து நாம் திரும்பும்போது அந்த இடத்தின் ஞாபகம் நம்மைத் துரத்தியபடி இருக்கிறது. அதிலிருந்து மீள சில நாட்கள் ஆகும். எப்படி பீனிக்ûஸ விட்டு வரும்போது ஞாபகம் துரத்துகிறதோ அதேபோல் சென்னையை விட்டுப் போனபோதும் ஏற்பட்டது. ஞாபகத்தைச் சமநிலைப் படுத்துவதுதான் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். நாம் எங்கே எப்படி இருக்கிறோமோ அதுதான் வாழ்க்கை. சொர்க்கமும் நரகமும் அதுதான்.
3ஆம் தேதி கிளம்பி இங்கு வந்துவிட்டேன். 24 மணி நேரம் விமானத்தில் பயணம். கொஞ்சங்கூட தூங்கவில்லை. குளோபல் படங்கள் பலவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அமெரிக்காவிலிருந்து 12 மணி நேரம் விமானப் பயணம் 4 சீட் என்பதால் கொஞ்சம் நெருக்கமாகத்தான் இருந்தது. அவர்கள் அளித்த உணவை சிறிதுகூட சாப்பிட முடியவில்லை. ஆனால் வீட்டில்
இட்லியும், சப்பாத்தியும் எடுத்து வந்தோம். குளோபல் படங்களில் ஸôடர் இஸ் பார்ன் என்ற படத்தைப் பார்த்து அசந்து விட்டேன். அதில் பாடகராக நடித்த நடிகருடைய ஜாடை என் நண்பர் ராஜகோபாலை ஞாபகப்படுத்தியது.
விமானத்தில் ரெஸ்ட் ரூமைப் பயன்படுத்துவதுபோல அபத்தத்தை என்ன சொல்வது? வேறு வழியுமில்லை. நான் கதவைச் சார்த்திக்கொண்டு உள்ளே போனேன். பின் திறக்க முடிகிறதா என்று பார்த்தேன். திறக்க முடியவில்லை. அல்லது தெரியவில்லை. பதட்டப் பட ஆரம்பித்து கதவைத் தட்டினேன். ஹெல்ப் ஹெல்ப் என்று கத்தினேன். அமெரிக்கன் விமானத்தில்தான் இது நடந்தது.
விமானம் வானத்தில் வட்டமிட ஆரம்பிக்கும்போது ரெஸ்ட் ரூமை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கூட தெரிவித்திருக்கலாம்.
3ஆம் தேதி கிளம்பிய நான் இன்று காலை (அதாவது 5ஆம்தேதி) தான் வந்து சேர்ந்தேன்.
சென்னையில் காலடி வைத்தவுடன் கடுமையான வெயில். இப்போது தோன்றுகிறது இன்னும் கொஞ்ச நாட்கள் பீனிக்ஸில் இருந்திருக்கலாமோ?
வரும்
போகும்
வரும்
போகும்
என்ற பெயரில் சி மணியின்
கவிதைத் தொகுதி
க்ரியாவில் அந்த நாளில் பார்த்தது
ஆனால்
வந்துகொண்டிருக்கும்
போய்க்கொண்டிருக்கும்
எல்லாம் நடக்கும்
அமெரிக்கன் நூலகத்திலிருந்து வாங்கி வந்த இன்னொரு புத்தகம். புத்தகம் பெயர் முராகாமியின் இன்னொரு நாவல் üகில்லிங் காமென்டேடர்.ý முடிக்க இன்னும் 100 பக்கங்கள் இருக்கிறது. படித்து முடித்தவுடன் இங்கே வைத்துவிட்டுப் போய்விடுவேன். கின்டலில் 15 நாட்களுக்கு ஓரம் பாமுக்கின் ரெட் ஹய்ர்டு உமன் நூலகத்திலிருந்து எடுத்துள்ளேன். படித்துக்கொண்டிருக்கிறேன்.
12. நீங்கள் முடிக்க வேண்டிய விருட்சம் பத்திரிகையை முடித்து விட்டீர்களா?
முடித்துவிட்டேன். 109வது இதழ். இங்கே 100 பக்கங்கள் வரை சரி செய்து வைத்திருக்கிறேன். சென்னையில் அச்சடித்து விடுவேன். இந்த மாதத்திற்குள் இதை எப்படியாவது கொண்டு வர வேண்டும்.
13. உங்களைச் சுற்றிலும் பல அநிதிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதெல்லாம் உங்களைப் பதட்டமடையச் செய்யவில்லையா?
நிச்சயமாக. யாராக இருந்தாலும் பதட்டமடையச் செய்யத்தான் செய்யும். நான் ஒரு சாதாரண மனிதன். ஆனால் இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று ஆராய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. கருத்து சொல்வதைப்போல் அபத்தமும் இதில் இருக்கிறது. இது மாதிரியான நிகழ்வுகள் நடக்காமலிருக்க நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர ஒன்றும் செய்வதற்கில்லை.
14. அமெரிக்காவில் இருப்பதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அமெரிக்காவில் 2 மாதம்தான் தங்கியிருந்தேன். 2 மாதங்களை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற முனைப்பில் முயற்சி செய்து ஓரளவு வெற்றி பெற்றுள்ளேன் என்று நினைக்கிறேன். அமெரிக்கா ஒரு சுதந்திரமான நாடாக நான் நினைக்கிறேன். இங்கே இரவு 12 மணிக்குமேல் கூட பெண்கள் தனியாக கார் ஓட்டிக்கொண்டு வர முடிகிறது. லாஸ் வேகாஸ் மாதிரியான இடத்தைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
15. இனி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஒன்றும் சொல்லவில்லை. எல்லாம் சொல்லியாகிவிட்டது என்று தோன்றுகிறது.
பிரமாதம். நான் அமெரிக்கா வந்து 2 மாதங்கள் முடிந்து விட்டன. இதோ சென்னை கிளம்புகிறேன்
2. எப்படிப் பொழுது போயிற்று?
எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் பொழுது போகப்போகிறது. அமெரிக்காவில் கூடுதலாகப் பொழுது இருந்தது. சென்னையில் அது குறைவு.
3. என்னன்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்?
ஆங்கிலப் புத்தகங்கள்தான் வாங்கினேன். ஆரம்பத்தில் கடையில் வாங்கினேன். ஆனால் மிகக் குறைவான விலையில் அமெரிக்கன் நூலகங்களில் வாங்கினேன்.
4. எந்தப் புத்தகம் படீத்தீர்கள்?
பெரும்பாலும் தமிழ் நூல்கள் படிக்கிற ஆசாமி நான். இங்கு ஆங்கில நூல்களைப் படிக்கும்படி நேரிட்டது. முராகாமியின் 2 நாவல்கள். மொராவியாவின் நாவல் ஒன்றையும் முழுதாகப் படித்தேன். இதைத் தவிர ஐ பி ஸிங்கரின் சிறுகதைகள். ஜே டி சாலிங்கர், பிலிப் ராத், ஜப்பானிய எழுத்தாளரான காஷ÷ இஷøகுரோ நாவல்கள். இவற்றில் சில புத்தகங்களை முழுதாகப் படிக்க முடியவில்லை. இரண்டு கதைகளையும் ஒரு கவிதையும் மொழி பெயர்த்துள்ளேன்.
5. முக்கியமாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நேரம். இங்கே கிடைத்ததுபோல் நேரம் எங்கும் கிடைக்காது. இந்த நேரத்தை ஒருவர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நான் சரியாகத்தான் பயன்படுத்தி உள்ளேன் என்று நினைக்கிறேன்.
6. எழுதினீர்களா?
எழுதினேன். முதலில் பயண நூல் மாதிரி ஒன்றை எழுதலாம் என்று துவங்கினேன். காலையில் 5 மணிக்கு விழிப்பு வந்து விடும். எழுத ஆரம்பித்துவிடுவேன். ஆனால் அது பயணம் பற்றிய நூலாக வரவில்லை. எங்குச் சென்றாலும் என் அப்பா போகாதே என்று தடுத்துவிடுவார். அது பற்றி எழுதுகிற நூலாக மாறும்போல் தோன்றியது. அதனால் எழுதுவதை நிறுத்திவிட்டேன். பிலிப்ரோத் அவர் அப்பாவைப்பற்றி எழுதிய பாட்டிரிமோனி புத்தகம் படித்தேன். அதுமாதிரியான புத்தகமாக எழுத முயற்சி செய்யலாமென்று தோன்றியது. ஆரம்பத்தில் கவிதைகள் சில எழுத முயன்றேன். அதுவே 26 கவிதைகள்.
7. கவிதை எழுதுவது எளிதா? சிறுகதை எழுதுவது எளிதா?
என்னைப் பொறுத்தவரைக் கவிதை எழுதுவதுதான் எளிது. சிறுகதைக்கு முயற்சி அதிகமாகத் தேவைப்படும். கவிதை என்றால் யார் தூண்டுதல் இல்லாமலே எழுதி விடலாம். ஆனால் கதைக்குத் தூண்டுதல் தேவைப்படுகிறது. கட்டுரைக்கும், நாவலுக்கும் இது பொருந்தும்.
8. நீங்கள் எழுதியது கவிதையா என்று எப்படித் தெரியும்?
அதில் கொஞ்சம் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. என்னால் மற்றவர்கள் படைப்புகளைப் படித்து நிறை குறைகளைக் கண்டு பிடித்து விட முடிகிறது. நான் எழுதியதைப் படிக்கும்போது மற்றவர்கள் யாராவது நல்ல மாதிரியாகச் சொன்னால் தேவலை என்று தோன்றும்.
9. தேர்தலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகள் என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். இந்த முறை தேர்தலில் கலந்து கொள்ள முடியவில்லை.
10. அமெரிக்காவில் திரைப்படம் பார்த்தீர்களா?
பார்த்தேன். தடம் என்ற தமிழ் படம் பார்த்தேன். அதன் பிறகு நெட்டில் நிறையா தமிழ்ப்படங்களைப் பார்த்தேன். பார்த்ததால் தமிழ் படங்களைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றியும் எதாவது எழுத முடியுமா என்று யோசிக்கிறேன். சென்னையில் இந்த வசதி உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் திரை அரங்குகளில் போய்ப் படம் பார்க்க உத்தேசித்துள்ளேன்.
பீனிக்ஸ் என்ற இடத்திற்கு வந்தவுடன் இங்கே வசிக்கும் தமிழ் எழுத்தாளர் பேட்டியை வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். 1982ஆம் ஆண்டில் படிப்பதற்கு அமெரிக்கா வந்த மகாதேவன் இங்கேயே இருந்து விட்டார். ஒரு அரிசோனன் என்ற புனை பெயரில் கதைகள், கவிதைகள், சரித்திர நாவல்கள் எழுதி உள்ளார். சிறுகதைத் தொகுப்பும், சரித்திர நாவல்களும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இதோ அவருடைய பேட்டி.