இது வரை……

அழகியசிங்கர்

    இதுவரை 75 கவிஞர்கள் விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு சூம் மூலம் கவிதை வாசித்து விட்டார்கள். இன்று நடைபெற உள்ள 17வது கூட்டத்தில் கலந்து கொள்பவர்களை (நான்கு பேர்கள்) வரவேற்கிறேன்.

    அரசியல், மத, ஆபாச கலப்பில்லாமல் கவியரங்கக் கூட்டங்களை நடத்தியதே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது.

    கவிதைகளில் பல வகை உண்டு.  மரபு, ஹைக்கூ, தன் முனைப்புக் கவிதைகள், புதுக் கவிதைகள் என்றெல்லாம்.  ஆனால் புதுக்கவிதை வாசிப்பவர்கள்தான் முன்னணியில் நிற்கிறார்கள்.

    ஆக மொத்தத்தில் பலவிதமான கவிதைகளைக் காது கொடுத்துக் கேட்க முடிந்தது. கவிதை வாசிக்கும் நண்பர்களைப் பிடித்திழுப்பது சற்று சங்கடமாக இருக்கிறது.  பலருக்கு சூமில் எப்படி கவிதை வாசிப்பது என்று தெரியவில்லை.  சிலருக்குக் கலந்து கொள்வதில் விருப்பமில்லை.  அதையும் வெளிப்படையாகச் சொல்லத்  தயங்குகிறார்கள்.  

    இனிமேல் இந்தக் கவிதை வாசிப்பு கூட்டத்தை வேறு விதமாக மாற்றி அமைக்கலாமென்று நினைக்கிறேன்.  கூட்டம் தொடங்குவதற்கு முன் கவிதை குறித்து உரை நிகழ்த்துபவரை ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறேன்.  பின் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு கவிதை வாசிக்கலாமென்று தோன்றுகிறது.

    இந்தக் கூட்டம் ஆரம்பம் முதல் இதுவரை சிறப்பாக நடைபெற வேண்டுமென்று அக்கறை கொண்டவர்கள் இருவர்.  சுந்தர்ராஜன், கிருபானந்தன். அவர்களுக்கு நன்றி.  அதேபோல் வ.வேசு. அபாரமாக எல்லோருடைய கவிதைகளையும் உள்வாங்கிக்கொண்டு யார் மனதையும் புண்படுத்தாமல் மதிப்பீடு செய்வது. இது லேசான விஷயமாகத் தோன்றவில்லை.  அவருக்கும் நன்றி.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன