அழகியசிங்கர்
விருட்சத்துடன் குவிகம் இணைந்து நடத்தும் சூம் கூட்டம்.

விருட்சம் மூலமாக அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். கடைசியாக நடத்திய அஞ்சலிக் கூட்டம் அசோகமித்திரனுக்கு .
ஞாபகத்திலிருந்து சொல்ல விரும்புகிறேன் யார் யாருக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேனென்று. 1. சி சு செல்லப்பா 2. ஷண்முக சுப்பையா 3. கரிச்சான் குஞ்சு 4. வெங்கட் சாமிநாதன் 5. ஜெயகாந்தன் 6. ஞானக்கூத்தன் 7 அசோகமித்திரன்
இவர்களில் பலர் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள். சிலர் நண்பர்கள் சொல்லி கூட்டம் நடத்தியிருக்கிறேன்.
இந்த முறை சூம் மூலமாகக் கூட்டம் நடத்த எண்ணம். கலந்து கொள்ள விரும்புபவர்கள் 9444113205 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் வாட்ஸ்அப்பில் தெரியப்படுத்தவும்.
தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய எழுத்தாளர்களில் சா.கந்தசாமியும் ஒருவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று அவருடைய பங்களிப்பை யாரும் மறைக்க முடியாது.
அவருடைய சாயா வனம் என்ற நாவல் புத்தகமாக வரும்போது அவருக்கு வயது 24. திரும்பவும் அதை மூன்று முறை எழுதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டம் வரும் வியாழக்கிழமை – 06.08.2020 – 7 மணிக்கு நடைபெற உள்ளது.
சா.கந்தசாமிக்கு அஞ்சலியைத் தெரிவிக்க வேண்டியவர்கள் முன்னதாக பதிவு செய்து கொள்ளுங்கள். 9444113205 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுங்கள்.