அழகியசிங்கர்
ஒவ்வாச் சுருதி
ராஜசுந்தரராஜன்
குளிர் கண்டிருந்தது காற்றில்,
என்னவோ செய்தது என் உடம்புக்கு
.
கட்டுக்கயிறில் நிம்மதியற்றுப்
பரபரத்தது வீட்டு நாய்.
கட்டற்றுப் புணர்ந்தன தெரு நாய்கள் .
விடலை என்
எதிரே தோன்றி
ஒரு விற்பனைக்காரி
வேண்டுமோ என்றாள்
முழம் மல்லிகை.
நன்றி : உயிர் மீட்சி – ராஜசுந்தரராஜன் – இது ஓர் அன்னம் வெளியீடு – வெளியான ஆண்டு : 1986 – விலை ரூ.5.