அழகியசிங்கர்
மாலதி சுவாமிநாதன் எழுதிய காக்கைகள் என்ற சிறு கதை நவீன விருட்சம் 113வது இதழில் வெளிவருகிறது. இதழை முதலில் மின் இதழாகக் கொண்டு வர எண்ணம். அதில் வெளிவர உள்ள கதையை நீங்களும் வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சிறிய கதை. மாலதி சுவாமிநாதன் ஒரு மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்.
சிறு கதை
காக்கைகள்
மாலதி சுவாமிநாதன்(மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்)
தினமும் அதே நேரத்தில் அந்த காக்கைக் கூட்டம் வருவதுண்டு. அதே இடத்தில். உட்கார்ந்ததுமே கா…கா..கா எனக் குரலை எழுப்பிப் பாடும். என்ன பிரயோஜனம்? நிராசைதான்!.
இந்த கூச்சலுக்குக் காரணம் உண்டு. காக்கைகளுக்கு ஞாபக சக்தி யானைகள் மாதிரி, புத்திக் கூர்மை அதிகம் என்று படித்திருக்கிறேன். நமக்குத் தான் எல்லாக் காக்கைகளும் ஒன்று போலத் எனத் தோன்றும். அவற்றுக்கு நம்மை அடையாளம் தெரியுமாம் .
காக்கைகளுக்கு இங்கே நிலவுவது லாக்டவுன், கோவிட்-19 என்று தெரியவில்லை. தங்களுக்கு உணவு தருபவரைக் காண விரும்பின.
அவள் கண்ணில் பட்டாள். ஆனால் ஆடாமல், அசையாமல் இருக்கிறாளே? ஒன்றும் புரியவில்லை. காக்கை கூட்டம் நெடுநேரம் சத்தமிட்டு விட்டு, பறந்து போய் விட்டது.
மறு நாளும்.
அதே நேரத்தில் வந்தது காக்கை கூட்டம். கா…கா..என்று குரல் எழுப்பியது . சற்று நேரம் காத்திருந்து, பிறகு எல்லாக் காக்கைகளும் பறந்து விட்டன.
அடுத்த நாளும், காலை ஐந்தரை மணிக்கு வரும் காக்கை கூட்டம், வழக்கம் போல் அவளுடைய பால்கனி அருகில் வந்தது. சமையலறைக்குப் பக்கத்திலிருந்தது இந்த பால்கனி. அங்கு அமர்ந்து, கா…கா..கா…வென கரைந்து இறக்கையை வேகமாக அடித்துக் கொள்ளும் சத்தம்…. ஒரே சத்தம்.
அடக் கடவுளே! என்றே அவள் விரைந்து வந்தாள். ஆனால், வெடுக்கென்று திரும்பி விட்டாள்.
கால்களைத் தேய்த்துக் கொண்டு நடந்தாள், தலை கலைந்து இருந்தது, முகத்தில் சோகம் மட்டுமே. எதிலுமே எந்த பிடிப்பும், ஈடுபாடும் இல்லாதது வெளிப்பட்டது. காக்கை ஆரவாரம் செய்யும் போது, முன்பெல்லாம் இவளும் உணவு வைத்து, காக்கைகளுடன் கடகடவென உயர்ந்த குரலில் குதுகலமாகப் பேசுபவள். இன்று பேசாமல் போய்விட்டாளே? அவளது மௌனம் காக்கைகளுக்குப் புரியவில்லை. ஏன் உணவு வைக்கவில்லை ஏன் தங்களுக்கு ஈடுகொடுத்து சத்தம் போடவில்லை? என்ற கேள்விகள்.
குழப்பம் நிலவியது. காக்கை கூட்டம் வந்தாலும் அன்று ஒரு கா சத்தம் செய்யாமலேயே இருந்து விட்டுப் பறந்துசென்றது..
அடுத்த நாள், கொஞ்சம் தாமதமாக, ஆறு மணி அளவில் வழக்கம் போல் அந்த பால்கனியில் காக்கைக் கூட்டம் வந்து அமர்ந்தது. அவள் ஏதோ செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தது. அங்கேயே உட்கார்ந்து, சிறிது நேரத்திற்குப் பிறகு பறந்து விட்டது.
காப்பி கோப்பையைக் கையில் ஏந்தி, தற்செயலாக பால்கனிக்குச் சென்ற அவள் கால் வைத்த இடத்தில், ஒரு செம்பருத்திப் பூ. அவ்வளவு ‘ஃப்ரெஷ்’! வியக்கவில்லை. அப்படியே விட்டு விட்டாள்.
பிற்பகல், இவள் உணவு உண்ணும் நேரத்தில் ஒரு பிடி சாதத்தைக் காக்கைகளுக்கு வைப்பது வழக்கம். ஐந்து காக்கைகள் பழக்கத் தோஷத்தில் வந்தன. அன்று உணவு வைக்கப்படவில்லை. அவை ஏன் வந்தன? பசியைப் போக்கிக்கொள்ளவா அல்லது அவளுக்கு ஞாபகப் படுத்தவா? தெரியவில்லை. காக்கைகளின் பாட்டு பலமாக இருந்தது. பல நிமிடங்கள் பாட, அவள் அங்கே வந்ததும் வெடுக்கென்று பறந்து விட்டன. பால்கனியில் பல சுள்ளிகளைப் பார்த்தாள். ம்ச் எனப் பெருமூச்சுடன் உள்ளே வந்துவிட்டாள். செம்பருத்தி இவளைப் போல வாட ஆரம்பித்து இருந்தது.
மாலை, நாலரை மணி. அவள் தேநீர் அருந்தும் நேரம். அந்நேரத்தில், பிஸ்கட் போடுவாள். போடவில்லை. ஆனாலும் காக்கைகள், அந்த நேரத்தில் வந்தன, இலைகளைக் கொத்து கொத்தாக விட்டுச் சென்றன.
அவளுடைய எதிர்வீட்டுனர் கோவிட் தொற்று பறவைகளுக்கு வரக்கூடாது என்ற அச்சத்தினால்தான் அவள் உணவு வைக்கவில்லை என எடுத்துக் கொண்டன. . காக்கைகளோ இதை எல்லாவற்றிற்கும் அப்பால், “நாங்கள் அவளைப் பார்க்கவே தினமும் வருவோம்-பாடுவோம்”. (காக்கைகளின் மைன்ட் வாயிஸ்) . ஒரு ஒப்பந்தம் – ஏதோ ஒன்றைப் போட்டுப் போவதாக.
ஒரு காக்கை, அவளுடைய ஒரு ஜன்னலை மூக்கால் தட்டத் தட்ட, அவள் அங்கே பக்கத்தில் வருவது போல் இருந்தது, அவள் ஜன்னலைத் திறந்ததும் பறந்து விட்டது. மிதமான மாலை வெயில், சில்லென்று காற்று அவள் முகத்தில் மல்லிகையின் சுகந்தத்துடன் பட்டதும் திடீரென விழித்ததுப் பார்த்தாள். அந்நிலப்பரப்பில் மல்லி விழுந்த கிடந்த தரையைப் பார்த்து நின்றாள். காக்கை தானும் அங்கே இருப்பதை ஞாபகப் படுத்த, இப்படி அப்படிப் பறந்து சென்று கொண்டிருந்தது. ஒரு விளையாட்டானது.
இந்த ஜன்னல் வழியே வெளியே பார்ப்பது ஆரம்பமானது. உலகைப் பார்த்தாள். இன்னொரு அறையின் ஜன்னலை ஒட்டினார்போல இன்னொரு பால்கனி. அந்தப் பக்கம் காக்கை அழைப்பது கேட்டது. பல நாட்களுக்குப் பின் அங்குச் சென்றாள். விதவிதமான பூக்கள், சுள்ளி, காகிதம் என்னென்னவோ. அதையும் பார்த்து, காக்கை பறப்பதையும் பார்த்தாள், வெளியே பார்த்தாள். அவளுக்கு அன்று தான் புதியதாகப் பார்ப்பது போலத் தோன்றியது. இந்த ஜன்னலின் வெளியே உள்ள உலகம் வேறாக இருந்தது. ஒவ்வொரு ஜன்னல் வெவ்வேறு காட்சிகள்.
காக்கைகள், அவளை ஜன்னல் அருகே, பால்கனியில் சந்தித்தன. தாங்கள் உச்சத் ஸ்தாயியில் பாடும் பாட்டைக் கேட்டும் , அவளை மெதுவாகச் சுற்றி உள்ள உலகைப் பார்த்தும், ரசிக்கச் செய்தன .
காக்கை கூட்டம் தங்களது தோழியைத் திரும்பப் பெற்றதில் மிகக் குதுகலமாகப் பாடிக் கொண்டாடியது.
தினமும் அதே நேரத்தில் அந்த காக்கைக் கூட்டம் வருவதுண்டு. அதே இடத்தில். உட்கார்ந்ததுமே கா…கா..கா எனக் குரலை எழுப்பிப் பாடும். என்ன பிரயோஜனம்? நிராசைதான்!.
இந்த கூச்சலுக்குக் காரணம் உண்டு. காக்கைகளுக்கு ஞாபக சக்தி யானைகள் மாதிரி, புத்திக் கூர்மை அதிகம் என்று படித்திருக்கிறேன். நமக்குத் தான் எல்லா காக்கையும் ஒரே மாதிரியே எனத் தோன்றும். அவர்கள் நம்மை அறிவார்கள்.
காக்கைகளுக்கு இங்கே நிலவுவது லாக்டவுன், கோவிட்-19 என்று தெரியவில்லை. அவர்களைப் பொருத்தவரை தங்களுக்கு உணவு தருபவரைக் காண ஆவல்.
கண்பட்டாள். ஆடாமல், அசையாமல் இருப்பதைப் பார்த்தார்கள். ஒன்றும் புரியவில்லை. காக்கை கூட்டம் நெடுநேரம் சத்தமிட்டு விட்டு, பறந்து போய் விட்டது.
மறு நாளும்.
அதே நேரத்தில் வந்தன காக்கையர் கூட்டம். கா…கா..என்று குரல் எழுப்பின. சற்று நேரம் காத்திருந்து, பிறகு பறந்து விட்டன.
அடுத்த நாளும், காலை ஐந்தரை மணிக்கு வரும் காக்கை கூட்டம், வழக்கம் போல் அவளுடைய பால்கனியில் வந்தது. சமையலறைக்குப் பக்கத்திலிருந்தது இந்த பால்கனி. அங்கு அமர்ந்து, கா…கா..கா…வென, இறக்கையை வேகமாக அடுத்துக் கொள்ளும் சத்தம் வந்தது. அவ்வளவு சத்தம்.
அடக் கடவுளே! என்றே அவள் விரைந்து வந்தாள். வெடுக்கென்று திரும்பி விட்டாள்.
கால்களைத் தேய்த்துக் கொண்டு நடந்தாள், தலை கலைந்து இருந்தது, முகத்தில் சோகம் மட்டுமே. எதிலுமே எந்த பிடிப்பும், ஈடுபாடும் இல்லாதது வெளிப்பட்டது. காக்கை ஆரவாரம் செய்யும் போது, முன்பெல்லாம் இவளும் காக்கையுடன் டகடகவென உயர்த்த குரலில் பேசி, நெல் வைத்து, அவர்களுடன் குதுகலமாகப் பேசுபவள்.
அதனால் தான் இந்த மொளனமாக இருப்பது காக்கைக்குப் புரியவில்லை. ஏன் நெல் இல்லை? ஏன் தங்களுக்கு ஈடுகொடுத்து சத்தம் வருவதில்லை? என்ற கேள்விகள்.
குழப்பம் நிலவியது. காக்கை கூட்டம் வந்தாலும் அன்று ஒரு கா சத்தம் செய்யாமலேயே இருந்து விட்டுப் பறந்து சென்றார்கள்.
அடுத்த நாள், கொஞ்சம் தாமதமாக, ஆறு மணி அளவில் வழக்கம் போல் அந்த பால்கனியில் காக்கைக் கூட்டம் வந்து அமர்ந்தது. அவள் ஏதோ செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தது. அங்கேயே உட்கார்ந்து, சிறிது நேரத்திற்குப் பிறகு பறந்து விட்டது.
காப்பி கோப்பையைக் கையில் ஏந்தி, அகஸ்மாத்தாக பால்கனிக்குச் சென்ற அவள் கால் வைத்த இடத்தில், ஒரு செம்பருத்திப் பூ. அவ்வளவு ஃப்ரெஷ்! வியக்கவில்லை. அப்படியே விட்டு விட்டாள்.
பிற்பகல், இவள் உணவு உண்ணும் நேரத்தில் ஒரு பிடி சாதத்தைக் காக்கைகளுக்கு வைப்பது வழக்கம். அந்த ஐந்து காக்கை பழக்கத் தோஷத்தில் வந்தார்கள். அன்று உணவு இல்லை. பசியைப் போக்கவா இல்லை அவளுக்கு ஞாபகப் படுத்தவா? தெரியவில்லை காக்கைகளின் பாட்டு பலமாக இருந்தது. பல நிமிடங்கள் பாட, அவள் வெடுக்கென்று அங்கே வந்ததும் பறந்து விட்டார்கள். பால்கனியில் பல சுள்ளிகளைப் பார்த்தாள். ம்ச் எனப் பெருமூச்சுடன் உள்ளே வந்துவிட்டாள். செம்பருத்தி இவளைப் போல வாட ஆரம்பித்து இருந்தது.மாலை, நாலரை மணி. அவள் தேநீர் அருந்தும் நேரம். அந்நேரத்தில், பிஸ்கட் போடுவாள். போடவில்லை. ஆனாலும் இவர்கள், அதே நேரத்தில் வந்தார்கள், இலை கொத்து கொத்தாக விட்டுச் சென்றார்கள்.அவளுடைய எதிர்வீட்டுனர் கோவிட் தொற்று பறவைகளுக்கு வரக்கூடாது என்ற அச்சத்தினால்தான் அவள் உணவு வைக்கவில்லை என எடுத்துக் கொண்டார்கள். காக்கைகளோ இதை எல்லாவிற்கும் அப்பால், “நாங்கள் அவளைப் பார்த்துக் கொள்ள நேரம், வருவோம்-பாடுவோம்”. அவர்களுக்குள்ளேயே ஒரு ஒப்பந்தம் (காக்கைகளின் மைன்ட் வாயிஸ்) – ஏதோ ஒன்றைப் போட்டுப் போவதாக.
ஒரு காக்கை, அவளுடைய ஒரு ஜன்னலை மூக்கால் தட்டத் தட்ட, அவள் அங்கே பக்கத்தில் வருவது போல் செய்ய, அவள் ஜன்னலைத் திறந்ததும் பறந்து விட்டது. மிதமான மாலை வெயில், சில்லென்று காற்று அவள் முகத்தில் அந்த மல்லியின் சுகந்தத்துடன் பட்டதும் திடீரென விழித்ததுப் பார்த்தாள். அந்நிலப்பரப்பில் மல்லி விழுந்த வெள்ளை தரையைப் பார்த்து நின்றாள். காக்கை தானும் அங்கே இருப்பதை ஞாபகப் படுத்த, இப்படி அப்படிப் பறந்து சென்று கொண்டிருந்தது. ஒரு விளையாட்டானது.
இந்த ஜன்னல் வழியே வெளியே பார்ப்பது ஆரம்பமானது. உலகைப் பார்த்தாள்.
இன்னொரு அறையின் ஜன்னலை ஒட்டினார் போல இன்னொரு பால்கனி. அந்த பக்கம் காக்கை அழைப்பது கேட்டது. பல நாட்களுக்குப் பின் அங்குச் சென்றாள். விதவிதமான பூக்கள், சுள்ளி, காகிதம் என்னென்னவோ. அதையும் பார்த்து, காக்கை பறப்பதையும் பார்த்தாள், வெளியே பார்த்தாள். அவளுக்கு அன்று தான் புதியதாகப் பார்ப்பது போலத் தோன்றியது. இந்த ஜன்னலின் வெளியே உள்ள உலகம் வேறாக இருந்தது. ஒவ்வொரு ஜன்னல் வெவ்வேறு காட்சிகள்.
காக்கைகள், அவளை ஜன்னல் அருகே, பால்கனியில் சந்தித்தன. தாங்கள் உச்சத் ஸ்தாயில் பாடும் பாட்டை, அவளை மெதுவாகச் சுற்றி உள்ள உலகைப் பார்க்க, ரசிக்கச் செய்தது.
காக்கை கூட்டம் தங்களது தோழியைத் திரும்பப் பெற்றதில் மிகக் குதுகலமாகப் பாடி கொண்டாடினார்கள்.