அழகியசிங்கர்

காணாமல் போன ஆறு
சுரேஷ் பரதன்
ஆதியில் அந்த ஆறு
ஆதியில் அந்த ஆறு
ஓர் ஆறாகவே இருந்தது.
அதன் கரையில்
படகுத்துறையும் இருந்தது.
படகோட்டி ஒருவனும்
இருந்தான்
படகோட்டிகாரோட்டியான சில நாட்களில்
படகுத்துறை ஆற்றோடு
போயிற்று
படகுத்துறை போன பின்புதான்
ஆறும் காணாமலேயே
போய்விட்டது.
நன்றி : ஊர் நடுவே ஒரு வன தேவதை – சுரேஷ் பரதன் – வெளியீடு : நான்காவது கோணம் வெளியீடு – பக் : 112 – விலை : ரூ.90