Author virutchamPosted on 2020-03-082020-03-08 கொரோனா அழகியசிங்கர் தெருவில் நடந்து செல்ல வீட்டுக் கேட்டைத் திறந்து தெருவில் இறங்கினான் சுற்றிலும் கொரோனா கொரோனா என்ற ஓலம் காதில் விழ யாரும் கண்ணில் படவில்லை தெருவில் நடந்தவன் திரும்பவும் வீட்டிற்குள் சென்று கட்டிலின் அடியில் போய் பதுங்கிக்கொண்டான்