இன்று மாலை தில்லி செல்கிறேன். முதல் முறை 1980 செப்டம்பர் மாதம். அப்போது குர்மானி என்ற ஹிந்திப் படம் பிரபலமாக இருந்தது. இது நாலாவது முறை என்று நினைக்கிறேன். அடுத்த வெள்ளிக்கிழமை கிளம்பி வந்து விடுவேன். அதுவரை முக நூல் நண்பர்கள் தொல்லை விட்டது என்று நிம்மதியாக இருப்பாரகள் என்று நினைக்கிறேன். நான் கையில் புத்தகங்கள் எதுவும் எடுத்துப் போகப்போவதில்லை. கின்டல் எடுத்துப் போகிறேன். அதில் ஏகப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் படிக்க முடியுமா என்பது தெரியவில்லை. நண்பர்கள் யாராவது தில்லியில் எங்கே செல்லலாம் என்று சொல்ல முடியுமா? டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் என்ற சிறுகதைப் புத்தகம் எழுதிய கணேஷ் வெங்கட்ராமன் டில்லியில்தான் உள்ளார். அவர் அறிவுரை கூறுவார் என்று நினைக்கிறேன். அவர் புத்தகத்தைப் படிப்பதற்குக் கையில் வைத்துள்ளேன். ஒரு வாரத்திற்குள் முகநூலில் உள்ளே நுழைந்து எதாவது எழுத முடியுமா என்று பார்க்கிறேன். முடியாது என்றே தோன்றுகிறது.
Sir.. I am Murugan and your fan.. in Delhi now..Call me 9962602711