மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 35


அழகியசிங்கர்  

நீர் பருகும் மர நிழல்கள்

சத்யன்
டீயில் தோய்த்த ரொட்டித்துண்டுகள்
என் நாளேட்டில் புதிய பக்கத்தைத் துவக்கின.
இரவு மழையினால் இளம் குளிர்
கால்சராய் பையில் என்கைகள்
நேற்றைய உணவு நேரத்தை
தூக்கத்தில் மறக்கச் செய்து
ப்ளாஸ்டிக் போர்வைகளில்
முடங்கிக் கொண்டிருந்த குடிமக்கள், நகரை
லட்சியம் செய்யவில்லை.
காற்றில் மிதந்துவரும் ஸ÷ப்ரபாதம்
கொடிக்கம்பியில் வரிசைப் புறாக்கள்
வேலியில் படர்ந்திருந்த ஒற்றை ரோஜா
கிரிக்கெட் பயிலும் பெண்கள்
தேங்கி நிற்கும் குட்டையில்
சிறகு சிலிர்த்து குளிக்கும் குருவிகள்
இன்னும் எங்கள் உலகில்
செயற்கை படியவில்லை என்றன.
பருக்கைகளுக்குப் பாய்ந்துவரும் மீன்கள்போல்
நேற்றைய கனவின் சிதிலங்கள்
காப்பிக் கோப்பையில் கனவுமுகங்களைத் துழாவின.
பஸ்களின் ஹார்ன் ஒலியில்
பாஸ்பரûஸ கரைத்து ஆபீஸ் சேர்ந்தேன்.
திவசக் காக்கைகளுக்கு அன்னம் இட்டு
காத்திருக்கும் அந்தணனாய்
கடிதங்கûடிள எதிர்பார்ப்பது
பழக்கமாகிப்போனது.

KAIPPRATHIYAL SILA THIUTHANGAL – COLLECTION OF POEMS – SATHYAN – PUBLISHED BY MEETCHI BOOKS – 61 N G G O COLONY, DHARMAPURI 636 705 – FIRST EDITION :  MAY 1986 – PRICE : 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *