அழகியசிங்கர்
நான்
நகுலன்
வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
üüயார்?ýý
என்று கேட்டேன்.
üüநான்தான்
சுசீலா
கதவைத் திறýý
என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?
நன்றி : நகுலன் கவிதைகள் – தொகுப்பும் பதிப்பும் : முனைவர் சு. சண்முகசுந்தரம் – காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை – பதிப்பாண்டு : 2001 – விலை : ரூ.100