பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 7

பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 7
அழகியசிங்கர்
      நண்பர்களே,
வணக்கம்.
பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற பகுதியில் ஞாநியைப் பேட்டி கண்டுள்ளேன்.  இது என்னுடைய ஏழாவது பேட்டி.  மிகச் சிறிய சோனி டிஜிட்டல் காமெரா மூலம் இதை செய்துகொண்டு வருகிறேன். இன்னும் தொடர்ச்சியாக இதைத் தொடர விரும்புகிறேன்.  இதை நீங்கள் பார்த்து உங்கள் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.எழுத்தாளர்கள் மட்டுமின்றி மிகச் சாதாரண மனிதர்களையும் பேட்டி எடுக்க உள்ளேன்.  இதில் நான் இன்னும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்பதை நீங்கள் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு ஞாநியை பரீக்க்ஷா மூலம் தெரியும்.  இதற்கு முன்னால் அவர் கிருத்துவக் கல்லூரியில் படித்தவர்.  அவரை ஞாநியாகத் தெரியாத தருணத்தில் கல்லூரியில் சில நண்பர்களிடம், இனி கசடதபற வராது என்று சொல்லிக்கொண்டிருந்ததை நான் கேட்டிருக்கிறேன்.  பின் பரீக்ஷா ஏற்பாடு செய்த நாடகத்தில் நானும் நடித்திருக்கிறேன். அப்போது ஒரு வியாபார ரீதியில் சரியாக இயங்கத் தெரியாத ஒரு நாடகக் குழுவில் போய்ச் சேர்ந்து, அவர்கள் என்னை துரத்தி விட்டார்கள். அந்தத் தருணத்தில் ஞாநியின் நாடகத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.  எப்படி நடிக்க வேண்டுமென்று ஞாநி எப்போதும் சொன்னது கிடையாது.  ஒரு அப்பாவி இளைஞனாக அறந்தை நாராயணனின் மூர் மார்க்கெட் என்ற நாடகத்தில், மேடையில் பாதி தூரம் நடக்கும் நடிகனாக நான் நடித்தேன்.  அதன்பின் நான் நடிக்கவில்லை.  என் இயல்புக்கு அது சரியாகப் படவில்லை.
இதோ நீங்கள் ஞாநியின் பேட்டியைக் கேளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *