அழகியசிங்கர்
முதல் முத்தம்
சுஜாதா செல்வராஜ்
அது அத்தனை நேர்த்தியாக இருக்கவில்லை
முன்னறிவிப்பின்றி நிகழ்ந்து முடிந்த முயற்சி
மீனை கவ்விக்கொண்டு பறக்கும்
பறவையின் துரிதக்கணம் அது
கன்னத்தின்
இதழ் சித்திரம் மட்டுமே
அது முத்தம் நிகழ்ந்த இடமென்று
அறிவித்துக்கொண்டிருந்தது
நினைவைக் கலைத்துக் கலைத்து அடுக்கிப்பார்க்கிறேன்
ஒரு முழு முத்தக்காட்சியை
கண்டுணரவே முடியவில்லை
ஆனால்
அதிர்வு அடங்கா நரம்புகளும்
கொதித்து ஓடும் குருதியும்
சொல்லும்
இது போன்றதொரு முத்தம்
இனி சாத்தியமே இல்லை என்று
நன்றி : காலங்களைக் கடந்து வருபவன் – சுஜாதா செல்வராஜ் – கவிதைகள் – விலை : ரூ.90 – முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2014 – வெளியீடு : புது எழுத்து, 2/205 அண்ணா நகர். காவேரிப்பட்டினம் 635 112 தொலை பேசி : 9042158667