மனதுக்குப் பிடித்த கவிதைகள் 8

அழகியசிங்கர் 

 பரம ரகசியம்


குவளைக் கண்ணன்
என் அப்பா ஒரு சும்மா
இது
அவர் இறந்து
பல வருடங்கள் கழித்து
இப்போதுதான் தெரிந்தது

அதுவும் நான் ஒரு சும்மா
என்பது தெரிந்தபிறகு

வெவ்வேறு தொழில்களில் பொருளீட்டும்
நண்பர்கள் உண்டெனக்கு
அவர்களின் வாழ்வுமுறை பற்றி
எனக்கு ஒன்றும் தெரியாது
புதிய நண்பர்களும் கிடைக்கிறார்கள்

அனைவருடனான எனது
அனைத்துத் தொடர்பும் உறவும்
சும்மாவுடனான சும்மாவுடையது

நான் சும்மாவுக்குப் பிறந்தவன் என்பதாலும்
சும்மா என் பிறவிக் குணமாக இருப்பதாலும்
சும்மாவில் வாழும் சும்மா நான் என்பதாலும்
இப்படி இருக்கிறதாக
இருக்கும்

நன்றி : பிள்ளை விளையாட்டு – கவிதைகள் – குவளைக் கண்ணன் – விலை ரூ.40 – பக் : 80 – முதல் பதிப்பு : டிசம்பர் 2005 காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் – போன் : 04652 – 278525

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *