அழகியசிங்கர்
தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் என்ற தொகுதி மட்டுமல்ல, மீட்சி விண்ணப்பம் என்ற தொகுதியிலிருந்தும் கவிதைகளை மறந்து போன பக்கங்கள் என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வர எண்ணம்.
விசாரணை
தத்துவம்தானே? வெங்காயம்…!
போடா! போ!
மூடியதை மூடிப்
பின்மூடி?….முடிவா?….
உரித்தால்? மேலும் உரித்தால்?
கண்ணீர் கொட்டும்
முட்டாளுக்கு உருக்கம்;
மூளை மோதினால்
தலைக்குத் தேங்காய்!
உனக்கும் எனக்கும்
முடிந்தால்
இதயத்துக்கு மருந்து;
அநேகருக்கு
வயிற்றை நிரப்ப
வேகும் கூத்துத்தான்!
வெட்டித் தனமாய்
வேடிக்கையாய்
அட வீம்புக்குத்தான்
வைத்தாலும்
தோலுரிக்கும் தொல்லையின்றி
வேறென்ன கண்டபயன்?
முட்டிமோதி முடிந்தமட்டும்
பார்த்து
முக்கித் திணறி முடிவில்
சிக்காத சிக்கல் என்று
நடையைக் கட்டும்
வேலை!