வரவே மாட்டார்கள்……

அழகியசிங்கர்

எங்கள் வீட்டு வாசலில் உள்ள இளைஞர்கள் விளையாடிக்கொண்டே இருக்கிறார்கள்.   தினமும்.  எதாவது ஒரு விளையாட்டு.  என் வீட்டு வாசலில் அவர்கள் போடும் கூச்சல செவிப்பறையைப் பிளந்துவிடும்.  பெரும்பாலும் கிரிக்கெட் விளையாடுவார்கள்.  அல்லது பந்தை தூக்கிப் போட்டு விளையாடுவார்கள்.  கேட்டைத் திறந்து என் வீட்டிற்குள் நுழைந்து கலாட்டா செய்வார்கள்.   நான் பால்கனியிலிருந்து சத்தம் போடுவேன்.  
ஒருமுறை வீட்டு வாசல் படிக்கட்டில் இருந்து ஸ்மார்ட் போனை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  பத்து பேர்களாவது ஒரே விளையாட்டை ஸ்மார்ட் போனில் விளையாடி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.  ராத்திரி பத்து மணிக்கு மேல் இது மாதிரியான விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  நான் வீட்டு வாசலில் இப்படி விளையாடக் கூடாது என்று சத்தம் போட்டேன்.   போய் விட்டார்கள்.இருபது வயதுக்கு மேல் உள்ள இந்த இளைஞர்கள் கல்லூரி படிப்பவர்களாக இருக்கிறார்கள்.  அல்லது படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்களாக இருக்கிறார்கள்.  இது மாதிரியான இளைஞர்கள் ஒரு ரகம்.
இன்னொரு ரகம் இவர்களை விட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்.  அவர்கள் போடும் கூச்சல் இன்னும் அதிகம்.ஓடி ஓடி அவுட் என்று கத்தி கத்தி விளையாடுவார்கள்.  கட்டுப்படுத்தவே முடியாது.  
புத்தகக் காட்சிக்காக இந்த இளைஞர்களில் யாராவது வந்து உதவி செய்தால் நன்றாக இருக்குமே என்று ஒருவனைப் பார்த்து கேட்டேன்.  ‘நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?ý என்று.  அவன் சொன்னான்: üமெக்கானிக் இனஜினியரிங் படித்துவிட்டு வேலை தேடுகிறேன்,’ என்று. ‘சும்மாதானே இருக்கிறாய்…ஒரு வேலை கொடுக்கிறேன் வருகிறாயா,’ என்று.  ‘என்ன வேலை?’ என்று கேட்டான்.  
‘புத்தகக் காட்சிக்கு வர வேண்டும்.  13 ஆம் தேதி வரைதான்..’
அவன் புத்தகம் என்றவுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டான்.   வெட்டியாய் 24 மணிநேரமும் தெருவில் விளையாடிக்கொண்டே இருக்கும் இவர்கள், எந்தப் புத்தகக் காட்சிக்கும் வர மாட்டார்கள்.  புத்தகம் படிக்கவும் மாட்டார்கள். சிலாகித்துப் பேசவும்  மாட்டார்கள்.  
புத்தகக் காட்சியில் கலந்து கொண்ட என் நண்பர்களுக்கு நான் மார்க் போட விரும்புகிறேன்.
க்ருபானந்தனுக்கு 99%
மலைச்சாமிக்கு 30% (சனி ஞாயிறு மட்டும் வந்தார்)
என் கல்லூரி நண்பர் சுரேஷ÷ற்கு 25% (ஞாயிறு திங்கள் வந்தார்)
எனக்கு 45% (மாலை நேரம் மட்டும் வர முடிந்தது)
கால சுப்பிரமணியத்திற்கு : 3% 
பெருந்தேவி : 5%
வேம்பு : 2%
இந்தப் புத்தகக் காட்சியில் விருட்சம் எதிர்பார்த்தத விட அதிகமாக விற்றது.  அதனால் என் ஸ்டால் முழுவதும் விருட்சம் புத்தகமே விற்கலாம் என்று தோன்றுகிறது.
நான் ஒவ்வொரு ஆண்டும் என் புத்தகக் காட்சியில் வருபவர்களைப் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரித்து வைத்துக்கொள்வேன்.  இந்த முறையும் அப்படி செய்ய உத்தேசம்.
புத்தகக் காட்சியில் கிடைக்கும் புத்தகங்களையும், வாங்கும் புத்தகங்களையும் படித்து அடியேனுக்கு தெரிந்ததை எழுத உத்தேசம். என்ன புத்தகம் என்பதை லிஸ்ட் போடடு தெரிவிக்கிறேன்.
புத்தகம் வாங்க வந்தவர்களுக்கும், உதவி செய்த நண்பர்களுக்கும் நன்றி.

“வரவே மாட்டார்கள்……” இல் ஒரு கருத்து உள்ளது

சமயவேல் உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன