நவீனவிருட்சம்

நவீனவிருட்சம் 98வது இதழ் வெளிவந்து விட்டது.  வழக்கம்போல கதைகள், கவிதைகள், கட்டுரைகள், புத்தக மதிபபுரை எல்லாம். வழக்கம்போல இதழ் தாமதமாக வந்துள்ளது.  முதன் முதலாக விருட்சம் அட்டையில் ஒரு எழுத்தாளரின் புகைப்படத்தைப் பிரசுரம் செய்துள்ளேன்.  வருத்தமான சூழ்நிலையில்தான இதைச செய்யுமபடி நேரிட்டது.  படைப்பின் ரகசியம் என்ற தலைப்பில் ஞானக்கூத்தன் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.  இதழில் மூன்று சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.  அ மலைச்சாமி என்பவர் ஊமைக் கொலுசுகள் என்ற பெயரில் கதை எழுதி உள்ளார்.  ஜாதுஷ்டிரன் என்ற கவிஞர் யார் என்பது தெரியவில்லை.  அவருடைய கவிதைகளை எல்லாம் திரட்டி வெளியிட்டிருக்கிறேன்.  இன்னும் சில கவிஞர்களின் கவிதைகளை இப்படிப் பிரசுரம் செய்ய உத்தேசம்.  இரண்டு புத்தகங்களுக்கு விமர்சனம் வந்துள்ளன.   

    கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக நவீன விருட்சம் வெளிவந்து கொண்டிருக்கிறது.  அதிகப் பக்கங்கள் இல்லை எளிமையான பத்திரிகையாகத்தான் விருட்சம் வெளிவந்து கொண்டிருக்கிறது.  இனிமேலும் வரும்.  உங்களுடைய வாழ்த்துகள் தேவை.

    வழக்கம் போல் நவீன விருட்சம் தனி இதழ் ரூ15.  ஆண்டுச் சந்தா ரூ.60.  பத்திரிகை யாருக்காவது வேண்டுமென்றால் அனுப்பி வைக்கப்படும.  பத்திரிகையைப் படிககப் பிடித்திருந்தால், ரூ.60 கொடுத்து சந்தா செலுத்துங்கள்.  இல்லாவிட்டால் ஒரு இதழ் அனுப்பியதற்காக ரு15 அனுப்பவும்.  இதழ் திருப்தி அளிக்காவிட்டால், பத்திரிகையை ஒரு கவரில் போட்டு பத்திரிகை அலுவலகத்திற்கே அனுப்பி விடலாம்.  

    இது குறித்து 9444113205 தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.  அல்லது navina.virutcham@gmail.com  உங்கள் முகவரியைக் குறித்து அனுப்பவும்
                                                                                                                  அன்புடன்
                                                                                                               அழகியசிங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *