பிரேம பிரபா
கருணை துளியுமற்ற
கட்டுப்பாடுகளின்
முட்கிரீடம் தரித்த முதுமை
கனிந்துறுகிய
கடைசித் தருணங்களில்
தவிப்பின் உச்சமாய்
தத்தளிக்கிறது
இமைகளின் மென் துடிப்பு.
முதியவரின் அளப்பறிய யாசிப்பின்
அனைத்து வேண்டுதல்களும்
நிறைவேறிடத் துடிக்கும்
மௌனமாக இடப் பெயர்தல்.
துளியும் அறிமுகம் இல்லாத
பெரு வெளியில்
முதியவரின் முதல்
சுதந்திரப் பயணம்.
பாதைகளில் கிடக்கும்
முட்கிரீடங்களை விலக்கி
குழந்தையின் மகிழ்ச்சியில்
முன்னேறுகிறார் முதியவர்
புதுப் பிறவி அடைந்த மகிழ்ச்சியில்.