புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)


மரம்

வானத்திலே எங்கேயோ உள்ள
சூரியனுடன் மத்து – மத்து ஆடுகிறது
என் நிழல்
வேரடியில் தேங்கிக் கிடக்கும்
சாக்கடை நீரில் என்
பிம்பத்தைக் கண்டு
வெறுப்புறுகிறேன் நான்.

என்னை வெட்டிச் சாய்க்க
வருகிற வீரன்
என் நிழலை மட்டும்
வெட்டிச் சாய்த்து விட்டானானால்
நான் ஓங்கிக் கிளைத்து வளருவேன் –
ஒன்பதாய்ப் பெருகுவேன்
என்னோடு
என் நிழலையும் சாய்க்க
உன்னால் முடியும் –
முடியுமா
என் நிழலை மட்டும்
அப்புறப் படுத்திவிட….?
                                                                                                 க நா சுப்ரமண்யம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன