பூ, பட்டாம் பூச்சி,மற்றும் நேஹா

ரவிஉதயன்

பூவின் இதழ்களை
பட்டாம் பூச்சியின் சிறகுகள் போல
வரைந்திருந்தாள்.

பட்டாம் பூச்சியின் சிறகுகளை
பூவின் இதழ்களைப் போல்
வரைந்து முடித்து விட்டு
சிறு கடவுளாகி சிரிக்கிறாள் நேஹா.

இப்பொழுது நான் காண்கிறேன்!

பட்டாம் பூச்சியின் சிறகுகள்
விரிய பூ மலர்வதையும்!

பூவின் இதழ்களோடு
பட்டாம் பூச்சி பறப்பதையும்!

“பூ, பட்டாம் பூச்சி,மற்றும் நேஹா” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன