ரவிஉதயன்
சேமித்தக் காற்றையெல்லாம்
இசையோடு ஊதி
பாம்பிடம் கேட்கிறான்
சீறலை.
மீதம் வைத்திருந்த
வலுவைஎல்லாம் திரட்டி
படமெடுத்துப் பாம்பு
கேட்கிறது சீறலோடு
பிடரனிடம்.
தன் இரையை.
சுற்றிலும்
பசியின்விழிகளோடு
பார்த்துக்கொண்டிருந்தவர்கள்
அவ்வளவு பயந்திருந்தார்கள்
பசியைக் கண்ணுற்று.
அருமை… பசி என்றால் பாம்பும் பறந்து போகும்…