ஏழு வயதுக் குழந்தை
ஸ்கூட்டர் ஓட்டும்
பாவனையில்
பிர்பிர் என்று
ஒலி எழுப்பிக் கொண்டே
ஓடிக் கொண்டிருந்தது.
வலது கையைச்
சுழற்றிச் சுழற்றி
வாகனத்தின் வேகத்தை
வாயால் கூட்டிற்று
குழந்தை.
இடது கை மட்டும்
காதினில் குவிந்திருக்க
சாலையில்
வாகனச்சப்தம்
காதை அடைக்கிறதா
என்றேன்.
உடனே குழந்தை
தொல்லைக்
கொடுக்காதே நான்
செல்ஃபோனில் பேசிக்
கொண்டேச்
செல்கிறேன் என்றது.
எப்படியான விதியை அடுத்த தலைமுறைக்குக் கடத்தி இருக்கிறோம் என அதிர வைக்கிறது கவிதை. அதைச் சொன்ன விதம் மிக நன்று.
உன்னிப்பாக உலகத்தைக் கவனிக்கிறீர்கள்.. யதார்த்தங்களில் இருந்து கவிதைகளைக் கண்டுபிடித்துத் தருகிறீர்கள்.. வாழ்த்துகள்
ஆஹா..நிகழ்கால நிகழ்த்துக்கவிதை.
தாக்கம் மறக்க நாளாகும்.. அருமையான கவி.
நல்ல கவிதை