ழ 5வது இதழ்
டிசம்பர் 1978 ஜனவரி 1979
மூன்று கவிதைகள்
வி பார்த்தசாரதி
1.
திரும்புகிறார்கள்
மழைத்துளிக்குப்
பயந்து பலர்
கடற்கரையில்
2.
நேற்று என்னால்
காற்றைப் பார்க்க முடிந்தது
இன்று நீ இதை
‘செடி’ என்று சொன்னாலும் சரி
‘சிறு மரம்’ என்று சொன்னாலும் சரியே
3.
நீ போய்க் கொண்டிருக்கிறாய்
நான் வந்து கொண்டிருக்கிறேன் அல்லது
நீ வந்து கொண்டிருக்கிறாய்
நான் போய்க் கொண்டிருக்கிறேன் அதனால்தான்
நாம் சந்திக்க முடிகிறது வெளியில் இப்படி.
போய் கொண்டிருக்கிறது காலம். வாழ்ந்து கொண்டிருக்கிறது இன்னும் இக் கவிதைகள்… வாழ்க அதன் படைப்பாளிகள்.
நீ போய்க் கொண்டிருக்கிறாய்
நான் வந்து கொண்டிருக்கிறேன் அல்லது
நீ வந்து கொண்டிருக்கிறாய்
நான் போய்க் கொண்டிருக்கிறேன் அதனால்தான்
நாம் சந்திக்க முடிகிறது வெளியில் இப்படி.
நல்லா இருக்கு உங்க ஸ்டைல்