*
மழையைக் கொண்டு வந்து சேர்கிறது
உன் சொற்கள்
அதன் ஈரத் திவலைகள் சிதறி
முளைக்கிறது என் மௌனம்
காரைப் பெயர்ந்த நம் சுவரின்
சுண்ணாம்புச் செதிலில்
விரல் வரைந்த கோடுகளாகி
பாசிப் படர்கிறது
கரும் பச்சை நிறமாகும் பெயர்கள்
விட்டுக் கொடுத்தல்களோடு
முடிந்து போகும் உரையாடல்களை
காலக் காகிதத்தின் கசங்கியப் பக்கங்களில்
சேமித்து வைத்திருக்கிறேன்
அதிலிருந்து புறப்படும் இசைக் குறிப்புகள்
ஜன்னல் கடந்து விரையும் காற்றோடு
போய் சேர்கிறது
கிளையிலமர்ந்திருக்கும்
பறவையிடம்
சிறகைக் கோதும் சாம்பல் நிற மாலையில்
குறுஞ் செய்தியொன்றை தாவிப் பிடிக்கிறது
கண்கள்
மழையைக் கொண்டு வந்து
சேர்பிக்கிறது உன் சொற்கள்..
******
ஒரு பலஹீனமான உரையாடல் வலுப்பெறுகிறது வந்த மழை வார்த்த சொற்துளிகளில்….
சுவர், மரக்கிளை, மாலை நேரம் என அருமையாக பயணிக்கிரது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்.
beautiful.
ஓர் பின்மதிய நேரத்தில் இனிமையான பாடல் ஒன்று மெலிதாக ஒலித்து கொண்டிருக்க படிதேன் இக் கவிதையை… ஒரே கவிதை படிக்கும் நேரத்திற்க்கு ஏற்ப குணம் மாறி விடுகிறதோ என்று தோன்றுகிறது…