ப்ளோரிடாவில் இரவு 8 மணி என்பது பகல்மாதிரி தெரிகிறது. அதேபோல் காலை எட்டுமணிக்குத்தான் சூரியன் தன் கிரணங்களை வீசுகிறான். வீட்டில் 24 மணிநேரமும் ஏ.சி என்பதால் ஒரே குளிர். நான் அடிக்கடி ஏ சியை அணைக்க வேண்டி உள்ளது. இங்கு ஒரு பால், தயிர் வாங்கக்கூட காரில்தான் செல்லவேண்டும். பஸ், டிரெயின் என்பதே கிடையாது. சைகிளை யாரும் பயன்படுத்தவில்லை. டூ வீலர் யாரும் ஓட்டுவதில்லை. வெயில் சென்னையில் அடிப்பதுபோல் சுள்ளென்று அடிப்பதில்லை. பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியவில்லை. Publix என்ற கடையில் ஒரு குடும்ப வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாம் கிடைத்து விடுகிறது. ஒவ்வொரு சனி ஞாயிறுகளில்தான் வெளியே சுற்ற முடியும். மற்ற நாட்களில் மிகச் சிறிய இடங்களுக்குச் சுற்ற முடிகிறது. சென்னையில் அண்ணா மறுமலர்ச்சி நூல் நிலையம் மாதிரி, இங்கு
Broward County Library என்ற நூல்நிலையத்தைப் பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது. ஆனால் சென்னையில் அமெரிக்கன் நூல்நிலையம் மாதிரி புத்தகங்கள் இருந்தன. அமெரிக்கன் நூல்நிலையத்தில்பெரும்பாலான நூல்களை நாம் படிக்காமல் தள்ளி விடலாம். Library யில் கணிணிகள் அதிகமாக இருந்தன.
Broward County Library என்ற நூல்நிலையத்தைப் பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது. ஆனால் சென்னையில் அமெரிக்கன் நூல்நிலையம் மாதிரி புத்தகங்கள் இருந்தன. அமெரிக்கன் நூல்நிலையத்தில்பெரும்பாலான நூல்களை நாம் படிக்காமல் தள்ளி விடலாம். Library யில் கணிணிகள் அதிகமாக இருந்தன.
தினமும் காலையில் 30 நிமிடங்கள் நடை பயிற்சி செய்வேன். எட்டு மணிக்குக் கிளம்பி. அந்த நேரத்தில் எந்த மனித உருவமும் தென்படாது. இந்த இடம் முழுவதையும் திட்டமிட்டு திறமையாக வைத்திருப்பதாக தோன்றுகிறது. இப்படி திட்டமிட்டு ஒரு இடத்தை சென்னையில் பார்க்க முடியாது. தினமும் மாலை 6மணிக்குமேல் மழை பெய்வதுபோல் இருந்தாலும் மழை பெய்வதில்லை. நான் இங்கு வந்த முதல் சனி ஞாயிறில் sanibell என்ற இடத்திற்கு பையன் எங்களை அழைத்துக்கொண்டு சென்றான். அவனே 70 மைல் வேகத்தில் வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு அழைத்துக்கொண்டு போனனான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்கு முக்கியமாக டால்பின் விளையாட்டை ரொம்பவும் ரசித்தோம். மனித முயற்சிக்குக் கட்டுப்பட்டு டால்பின் செய்யும் சேஷ்டைகள் ஆச்சரியத்தைத் தந்தன. இந்த இடமெல்லாம் கூட்டம் அதிகம். விதவிதமான மனிதர்கள். பெண்கள் யாரும் அவர்கள் உடை அணிவதைப் பற்றி கவலைப்படவில்லை. அவ்வளவு சுதந்திரமாக அவர்கள் தென்பட்டார்கள். பிறகு பெரிய படகில் டால்பின் இருக்குமிடத்தைப் பார்க்கச் சென்றோம். ஒன்றிண்டு தவிர அதிகமாக தட்டுப்படவில்லை. நாங்கள் அவதிப்பட்டது சாப்பாட்டிற்குதான். வாய்க்கு ருசியாக ஒரு காப்பியைக் கூட குடிக்க முடியவில்லை.
அங்கிருந்து நாங்கள் sanibell கடற்கரைக்குச் சென்றோம். அங்கு மண் கறுப்பு நிறத்தில் பவுடர் மாதிரி இருந்தது. எந்த நேரத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் கடலில் பீர் குடித்தபடி குளித்தபடி இருந்தார்கள்.
@@@@@@@@
தெரியாமல் 3 புத்தகங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு வந்தேன். Carlos Castenada வின் The Active Side of Infinity என்ற புத்தகமும், யு ஜி கிருஷ்ணமூர்த்தியின் Stopped in our tracks என்ற புத்தகமும். யு ஜியைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. சந்திரசேகர் என்பவர் யு ஜியைப் பற்றி எழுதிய புத்தகம். பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. நான் மேலும் netல் சென்று இன்னும் அதிகமாக யு ஜியைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவருடைய வீடியோ டேப்பெல்லாம் பார்த்தேன். அவர் சொன்னதையெல்லாம் எதாவது எழுத முடியுமா என்று பார்க்கிறேன்.
சார்.. இப்போது அமெரிக்காவிற்கும் சென்னைக்கும் ஒற்றுமையாகச் சொல்ல வேண்டுமானால் இங்கும் மாலையில் மழை பெய்வது போல் மேகம் வட்டமிடுகிறது. ஆனால் மழை இல்லை.
தங்கள் அமெரிக்க அனுபவங்கள் பார்த்தேன். என்னுடைய மகள்கூட சென்ற மாதம்தான் அமெரிக்கா வந்திருக்கிறாள். நார்த் கரோலினாவில் கிரீன்ஸ்பரோவில் வாசம். நீங்கள் சொல்வதுபோன்ற அதேவகை அனுபவங்களைத்தான் போனில் சொல்லுகிறாள்.எப்படியிருப்பினும் வித்தியாச அனுபவங்கள்தாமே..அனுபவித்துவிட்டு வாருங்கள், வாழ்த்துக்கள்.