நான் பார்த்துக்கொண்டிருந்த இடம்
என் கனவாக இருந்தது
எப்போதும் தண்ணீர்
தட்டுப்படாமல் கிடைத்தது
மின்சாரம் முணுக்கென்று போகாமலிருந்தது
மழையும் வெயிலும்
மாறி மாறி வித்தைக் காட்டிக்கொண்டிருந்தன
எங்கும் பார்த்தாலும்
அசையாமல் கட்டிடங்கள்
காத்துக்கொண்டிருந்தன
மனிதர்கள்
உள்ளேயிருந்து வெளியில் வந்தார்களா
அல்லது
வெளியிலிருந்து உள்ளே வந்தார்களா
என்பது தெரியவில்லை
நடந்துபோய் பொருள் வாங்க
வேண்டுமென்றால்
காரைக் காட்டினான் புதல்வன்
நாங்கள் அசைவற்று நின்றிருந்தோம்…
21.07.2011
1.30 pm
"புதிய ஊர்" அல்லவா??
நாங்கள் அசைவற்று நின்றிருந்தோம்…//
அப்படித்தான்.. பழகிவிடும் சில காலங்களில்…
அதன் தொடர்ச்சியாய் ஒரு வரி கூட…
மனம் மட்டும் பழைய ஊருக்கும் புதிய ஊருக்கும் அலைந்து கொண்டிருந்தது.
எல்லா சூழ்நிலைகளிலும் மனசோட ஊசலாட்டம் இருக்த்தான் செய்யும் போலிருக்கு