கோலமிட குனிந்தவள் மீது
பனித்துளி விழுந்தது
ஊரையே கழுவி
துடைத்து வைத்திருந்தது
நேற்றிரவு பெய்த மழை
சகதியில் உழலும் பன்றிகள்
சந்தன வாசனையை அறியாது
நரகல் தின்னும் நாய்
காலை வேளையில்
குளத்துக் கரையையே
சுற்றி வரும்
காற்று கேட்ட கேள்விக்கு
விடைதெரியாமல்
மரங்கள் இலை உதிர்த்தன
வெண்மேகம் மயிலுக்கு
என்ன துரோகம் செய்தது
வீதியில் நடப்பவர்கள்
மற்றவர் முகம் பார்த்து
நடப்பதில்லை
நெல் கொறிக்கும்
சிட்டுக்குருவி
எப்படி விளைந்ததென்று
அறியாது.
அறியாமலேயே நடக்கின்றன அனைத்துமே…நன்றிகள்
எதார்த்தம் என்றாலும் அதற்குள்தான் இயங்கவும் வாழவேண்டியிருக்கிறது. பிறிதொன்றின் இடரையும் துயரையும் பிறிதொன்றின் ஆறுதலில் பெற்றுவிடுவதால்.