கோடையின் உவப்பு

இந்த கோடையின் வெம்மை
இனிமையானதொரு உவப்பை வெளியிடுகிறது.
ஒரு பழங்கால அறையை போன்ற இந்த பூமி
அதன் ஆதி சாயல் துலங்கித் தெரிய
இலைகள் உதிர்த்த பற்பல கிளைகள் வழி
வானைக் கண்ணுக்குள் அணுக்கி வைக்கிறது.
ஒரு மங்கலான சோபை வழியும்
நான்கு மணி மனிதர்கள்
விருப்பு வெறுப்பற்ற ஞானியராய்
பேருந்தில் சாய்ந்தபடி இருக்கிறார்கள்
அவர்களின் பார்வையற்ற பார்வை
கலைக்க முடியாதொரு அமைதியை
வழியெங்கும் பேசிச் செல்கிறது

பயணம் முடிந்து திரும்பும் வேளை
அந்தியின் சோபை அவர்களை அழகூட்ட
மெல்லக் கரைகிறார்கள் கோடையின் உவப்பில்
பின்/
பழங்களாய் சூரியன் தணிய
கனிந்து விம்முகிறது கோடைப் பழம்.

“கோடையின் உவப்பு” இல் ஒரு கருத்து உள்ளது

Pranavam Ravikumar a.k.a. Kochuravi உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன