இம்மாலை ததும்பி வழிந்திருந்தது பொழுது –

யாருமற்ற ஆல மரத்தடியில்இலைகளும் பறவையொலிகளும் உதிரஅறிவு உலகில் வாழ்ந்த நாட்கள்…மேய்ச்சல் போகும் மந்தை மாடுகளின்மணியொலிச் சத்தமும்அவ்வப்போது வியந்துநின்று அகலும்செருப்போசைகளும்ஆலம்பழத்தின் ஊடே ஆசுவாசித்திருந்த பறவையும்வழி தவறிநம்மிடையே வந்த சிறு வெள்ளாடும்காற்றில் படபடத்தபுத்தகப் பக்கங்களும்வியந்து ரசித்தவண்ணச் சிறு பூக்களும்நினைவுகளில்நுண்ணெழிற் சித்திரங்கள் ஆக…பார்க்கவோ பேசவோஎண்ணவோ எழுதவோகூடாத இந்நாளில்கடந்த பாதைகளின்புத்தகங்களும் பேச்சுக்களும் வழித்தடங்களும் மரங்களும்ஒலிகளும் இலைகளும்மாடுகளும் மந்தைகளும்பேரோசையோடுகடந்து விரையஉறைகிறது இம்மாலை பிரிவின் துரு பூசிய அந்த ஆலம் விழுதுகளில்.

“இம்மாலை ததும்பி வழிந்திருந்தது பொழுது –” இல் ஒரு கருத்து உள்ளது

சைக்கிள் உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன