திருட்டுப் பூனை
எல்லோருக்கும் உரியது எல்லாம் என்று எண்ணி இயங்குகிற பூனைக்கு கிட்டியப் பெயர் திருட்டுப் பூனை.
திருடாத பூனைக்கும் உண்டு இப்பட்டம். இன்னொரு இனத்தால் இடப் பட்ட ஈனப் பெயர். இரையாகிற எலிகள் கூட நம்புகிறபோது இவர்களுக்கு மட்டும் திருட்டுப் பூனை. கட்சித்தொண்டனாய் தீக் குளித்தும் காட்ட முடியாது அதற்கு அதன் விசுவாசத்தை.
பாவம் விசுவாச அரிதாரம் பூசத் தெரியாத விழிகளுடன் பதுங்கி பதுங்கி வாழும் பரம சாதுவாய் திருட்டுப் பூனை
