எப்போதாவது என்றால் சரி. எங்காவது ஒருமுறை என்றால் சரி. யாராவது ஒருமுறை எனில் சரி நடைபெற்ற யாவற்றிலும் நாம் இருவருமே பங்கு பெற்றிருக்க பிரச்சினை என்றவுடன் பின்வாங்கி நிற்கும் உங்களிடம் பெரிதாய் வருத்தமேதுமில்லை எனக்கு. எதையுமே அறியாத தோற்றம் தரும் உங்களின் முகம் குறித்தும் எனக்கு முழு சம்மதமே. எல்லாப் பிரச்சனைக்கும் என்னை நோக்கி நீளும் உங்கள் கைகளைப் பற்றிக் குலுக்க இப்பொழுதும் எனக்கு சம்மதம். ஆயினும் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் நான் இப்போது. முடிவொன்று தேவையா என்றாவது முடிவு செய்ய வேண்டும். முன் செய்த முடிவுகளெல்லாம் முடிவில் இப்படி எப்படியோ ஆகிக்கொண்டிருக்க முன் முடிவுகளற்று இருப்பதைப் பற்றி முழு மூச்சாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
நல்லா இருக்கு
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
http://www.bogy.in
நன்றி பத்மா & Bogy.
எந்த ஒரு பிரச்சனையோ நிகழ்ந்தாலும், அந்த பிரச்சனையில் சம்பந்தம் பட்ட அனைவருக்கும் அதில் பங்கிருக்கும் என்பது பழைய வாக்கு. உங்கள் கவிதையின் முதல் பகுதி அப்படி ஒரு படிமத்தைத்தான் எனக்குள் ஏற்படித்தியது. பின்பகுதி மன்னிப்பு, அன்பு, கருனை என்று சிலவற்றை நிரப்பினாலும். இது போன்றவற்றாலும் இந்த வாழ்க்கை நிரப்பப்பட்டுள்ளது, இது இந்த வாழ்வில் வெகு சாதார்ணமான ஒன்று என்று யோசிக்க வைத்தது..
முடிவெடுப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும் என்பது மிக யதார்த்தம்..
பாராட்டிக்கள் ஜெகஜீசன் அவர்களே..
உங்கள் ப்ளாக்கரில் என்னால் பதிலட முடியவில்லை.. ஏன் என்றும் தெரியவில்லை..
Ꮃow, wonderful blߋg format! How long have you been bⅼogցing for?
you mɑкe bl᧐gging glance easy. Thе total glance of yоuг web site is great, let alone
the content!