அன்புடையீர்,

வணக்கம்.

இந்த முறை சற்று சிரமமாக இருந்தாலும், நவீன விருட்சம் இதழை கொண்டு வந்து விட்டேன். இப்போது வந்துள்ள இதழ் இரு இதழ்களான 85/86ன் தொகுப்பு. 80 பக்கம் கொண்டு வந்துள்ளேன். வழக்கம்போல் பலருடைய படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

யார் படைப்புகள் இடம் பெற்றுள்ளன என்ற விபரம் இதோ

1. ஐராவதம் – இக்கணத்தின் அருமை
– பாரதிமணி எழுதிய பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தக
விமர்சனம்
கதைமொழி – எஸ் சண்முகம் புத்தகத்தின் விமர்சனம்

2. விட்டல்ராவ் – பழம் புத்தகக் கடை
3. கோசின்ரா – எனது புனைபெயர்கள் (கவிதை)
4. ஆ முத்துராமலிங்கம் – மழை இரவு (கவிதை)
5. ஏ ஏ ஹெச் கோரி – உறவு ஜீவிகள் (சிறு கதை)
6. அழகியசிங்கர் – சில குறிப்புகள்
7. யோசிப்பவர் – செருப்பு (சிறு கதை)
8. விட்டல்ராவ் – ரிச்சியும் நானும் (சிறு கதை)
9. நீல பத்மநாபன் – விஜய தசமி (கவிதை)
10. மஹேஷ் முணசிங்ஹா – ஜனாதிபதித் தேர்தல்
11. எஸ் வைத்தியநாதன் – சுமை (கவிதை)
12. அழகியசிங்கர் – பத்மநாபன் எதையோ தேடுகிறார் (சிறு கதை)
13. பானுமதி – தனிமை (கவிதை)
14. ஜெயஸ்ரீ – இதையுதிர் காலம் (கவிதை)
15. விஷ்வக்சேனன் கவிதை
16. எம் ரிஷான் ஷெரீப் – என்னை ஆளும் விலங்குகள் (கவிதை)
17. அனுஜன்யா – மகத்தான (கவிதை)
18. ம மோகன் – காட்டை மறத்தல் (சிறு கதை)
19. அழகியசிங்கர் – உறவு, வேண்டாத இடம் (கவிதைகள்)

படைப்பாளிகள் தங்கள் முகவரிகளை அனுப்ப வேண்டுகிறேன். இதழை உடனே அனுப்பி வைப்பேன்.

அன்புடன்

“அன்புடையீர்,” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. அன்பின் ஆசிரியருக்கு,

    இதழில் எனது கவிதையையும் தேர்ந்தெடுத்திருப்பதில் மகிழ்ச்சி.
    நன்றி நண்பரே !

    என்றும் அன்புடன்,
    எம்.ரிஷான் ஷெரீப்

  2. வலைப்பூவில் வெளியாகும் கவிதைகளை புத்தகத்திலும் அச்சேற்றுவீர்கள் என்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால், என்னுடைய கவிதைகளை( அப்படி இல்லாமலும் இருக்கலாம்) வலைப்பூவில் பிரசுரித்து விட்டு, புத்தகத்தில் விட்டுவிடுவது, இது முதன்முறையல்ல என்பதை சற்று நினைவுபடுத்திப் பார்க்கவும்.

    வலைப்பூவில் உங்களால் பிரசுரிக்கப்படும்போது, அதை கவிதையென்று நம்பிவிடுகிற எளிய மனம், புத்தகத்தில் இடம்பெறாதபோது, கவிதைமீதுதான் முதலில் சந்தேகம் வந்தது,வருகிறது.

    ஆனால், தொடர்ச்சியாக என் முயற்சிகள் புத்தகத்திற்கு மட்டும் நிராகரிக்கப்படும்போது, வேறு ஏதாவது யோசிக்கத்தோன்றுகிறது.

    இதுதொடர்பாய், நான் உங்களுடன் ஏற்கனவே பக்குவத்தோடும், பெருந்தன்மையாகவும் பேசியிருந்ததை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளவும்.

    இப்போதும் நான் எனக்காக மட்டுமே பேசுவதாய் எடுத்துக்கொள்ளமுடியாது என்றே எண்ணுகிறேன். மற்றவர்களின் அனுபவம் எனக்குத் தெரியாது.

    ஒருவேளை, நான் தொகுப்புப் போடும்போது, உங்கள் வலைப்பூவில் இடப்பட்டு, இதழில் நிராகரிக்கப்பட்ட கவிதைகள், பிரசுரம் பெற்றவை, பெயர் இல்லாமல் பிரசுரம் பெற்றவை, மறந்துபோனவை என்று எதையுமே, தணீக்கை செய்து, ஒன்றோ, இரண்டோ தேற்றலாம். அல்லது விட்டேக்கூட விடலாம்.எனக்கும் அக் கவிதைகள் மீது அப்படியான ஒரு மதிப்பீடுதான் இன்று உள்ளது.

    சுந்தரராமசாமி, நகுலன் போன்ற பல ஜாம்பவான்கள் எழுதிய பாரம்பரியமுள்ள இதழென்கிற வகையிலேயே எனக்கு நவீன விருட்சத்தின் மேல் ஈடுபாடு.

    இதழில் இடம்பெற்ற படைப்பாளீகளுக்கு என் வாழ்த்துக்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன