வணக்கம்.
நவீன விருட்சம் 84வது இதழ் வெளிவந்து விட்டது. 21 ஆண்டுகள் முயற்சி. 160 பக்கம் கொண்ட இந்த இதழ், புதுக்கவிதை இயக்கம் தோன்றி 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது. க.நா.சு., ந பிச்சமூர்த்தி, சி சு செல்லப்பாவிற்கு நன்றி கூறும் விதமாக இதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. எளிதில் முடியும் என்று நினைத்த இந்த இதழ் அவ்வளவு எளிதில் முடியவில்லை. ஜனவரி 2009க்குப் பிறகு ஜூலை மாதம்தான் இதழ் வருகிறது. இவ்வளவு தாமதமாக வருவதற்குக் காரணம் சற்றுகூட அவகாசம் தராத என்னுடைய கடுமையான பணி, மூட் எல்லாம் சேர்ந்ததுதான். எல்லாவற்றையும் மீறி இதழைக் கொண்டுவர வேண்டுமென்ற பிடிவாதத்தால்தான் இந்த இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழுக்காக நான் அதிகமாகவே செலவு செய்துள்ளேன். தனிப்பட்ட ஒரு இதழுக்காக நான் இந்த அளவு அதிகமாக செலவு செய்ததில்லை. நவீன விருட்சம் முதல் இதழ் 16 பக்கங்களுடன் தொடங்கியது. இப்போது 160 பக்கம் வரை வந்துவிட்டது. 21 ஆண்டுகளுக்கு முன் இதழ் வரும்போது இருந்த மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் ஏகப்பட்டவர்கள் படிக்கிறார்கள், ஏகப்பட்டவர்கள் எழுதுகிறார்கள்.
இந்த இதழ் தயாரிக்க உதவிய படைப்பாளிகளைப் பற்றி சொல்ல வேண்டும். வழக்கம்போல் நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் அசோகமித்திரன் இந்த இதழுக்கும் தன்னுடைய பங்களிப்பை நல்கி உள்ளார். நாகார்ஜூனன் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஆங்கிலத்திலிருந்தும், பிரெஞ்சு மொழியிலிருந்தும் நேரிடையாக மொழிப்பெயர்த்துள்ள கவிதைகளில் சில்வியா பிளாத் கவிதைகள் சிலவற்றை அளித்துள்ளார். என்னுடைய பல ஆண்டு கால நண்பரான ஞானக்கூத்தன் இன்னொரு என்னுடைய நண்பரான ஆனந்த் கவிதையைப் பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை அளித்துள்ளார். அதேபோல் அம்சன்குமார், விட்டல்ராவ், வைதீஸ்வரன், ஐராவதம், ரா ஸ்ரீனிவாஸன், எஸ் வைத்தியநாதன், கொம்பன், க்ருஷாங்கினி முதலிய பல இலக்கிய நண்பர்கள் இதழுக்கு மகுடம் சேர்த்துள்ளார்கள்.
நவீனவிருட்சம் நெட்டில் தெரியவந்தபோது, பலர் நவீன விருட்சத்திற்குப் படைப்புகளை அனுப்பி இதழை சிறப்பிக்க உதவி செய்துள்ளார்கள். அவர்களுடைய படைப்புகள் உடனுக்குடன் நவீனவிருட்ம் blogspot ல் வருவதோடல்லாமல், நவீன விருட்சம் இதழிலும் வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவித்தக் கொள்வதோடு அடுத்த இதழ் இன்னும் சீக்கிரமாக கொண்டுவர எல்லாவித முயற்சியையும் எடுத்துக்கொள்வேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். யார் யார் படைப்புகள் வெளிவந்துள்ளன என்பதற்கு ஒரு லிஸ்ட் கீழ்கண்டவாறு தருகிறேன். எல்லோருக்கும் பத்திரிகை அனுப்ப விரும்புகிறேன். தயவுசெய்து முகவரிகளை அனுப்பி உதவுங்கள்.
1. அனுஜன்யா – பிக்பாக்கெட் – சிறுகதை 2 கார்க்கோ – கவிதை – அன்னம், கிளி, மயில், மேகம், ஆன்ந்த் – பக்கம் ௭3. செ செந்தில்வேல் – நான்கு கவிதைகள் – பக்கம் 84. ரா ஸ்ரீனிவாஸன் கவிதை – சொல்லும் சொல்லமைப்பும் – பக்கம் ௧௧5. இரா வசந்தகுமார் – மாமா எங்கே? – சிறுகதை – பக்கம் ௧௨6. யோசிப்பவர் – உயிர் – சிறுகதை – பக்கம் ௧௬7. அம்ஷன்குமார் – வேர்கள் – கட்டுரை – பக்கம் ௨௧8. ஜான்சிராணி – விஸ்வரூபம் – கவிதை – பக்கம் ௨௫9. இரங்கல்கள் – அஞ்சலி – அசோகமித்திரன் – பக்கம் ௨௬10. க்ருஷாங்கினி – அஞ்சலி – கிருத்திகாவும், சுகந்தியும் – பக்கம் ௩௧11. அழகியசிங்கர் – அஞ்சலி – எதிர்பாராத மரணம் – பக்கம் ௩௪12. ஸில்வியா ப்ளாத் கவிதைகள் – தமிழில் நாகார்ஜூனன் – பக்கம் ௩௮13. அழகியசிங்கர் – புரியாத பிரச்சினை – சிறுகதை – பக்கம் ௫014. செல்வராஜ் ஜெகதீசன் – 6 கவிதைகள் – பக்கம் ௫௬15. வடகரை வேலன் கவிதை – 9 மணி அலுவலகத்திற்கு – பக்கம் ௬016. மதன் – என் சட்டைப்பையினுள் – கவிதை – பக்கம் ௬௨17. ஞானக்கூத்தன் – மதிமை சாலா மருட்கை – கட்டுரை – பக்கம் ௬௩18. இரா பூபாலன் – கவிதை – அக்காவின் அன்பளிப்பு – பக்கம் ௭௬19. என் விநாயக முருகன் – கவிதை – இலக்கணப்பிழை – பக்கம் 7௬௨20. பாவண்ணன் – இரண்டு கவிதைகள் – பக்கம் ௭௭21. எம் ரிஷான் ஷெரீப் – நிழற்படங்கள் – சிறுகதை – பக்கம் ௭௯22. அனுஜன்யா கவிதைகள் – பக்கம் ௮௫23. வைதீஸ்வரன் – இரு கவிதைகள் – பக்கம் ௮௮24. நிலா ரசீகன் – மூன்று கவிதை – பக்கம் ௯025. ஒரு தேசமே சேவல் பண்ணையாய் – சிறு – சோ சுப்புராஜ் – பக்கம் ௯௨26. த அரவிந்தன் – கவிதை – பூனையின் உலக இலக்கியம் – பக்கம் ௧0௫27. எம் ரிஷான் ஷெரீப் – கவிதை – சாகசக்காரியின் வெளி – பக்கம் ௧08. பிரேம்குமார் – கவிதை – கோவில் யானை – பக்கம் ௧0௭29. கே ரவிசங்கர் – கவிதை – அபார்ட்மெண்ட் பித்ருக்கள் – பக்கம் ௧0௮30. மாலினி புவனேஷ் – நான்கு கவிதைகள் – பக்கம் ௧0௯31. விட்டல்ராவ் – சிறுகதை – ஓர் ஓவியனும் ஒரு ரசிகனும் – பக்கம் ௧௧௧32, அழகியசிங்கர் – கட்டுரை – சில குறிப்புகள் – பக்கம் ௧௨௧33. விக்கிரமாதித்யன் – கவிதை – என் இனிய இளம்கவி நண்பரே – பக்கம் ௧௩௪34. ப்ரியன் – கவிதை – பூட்டிய வீட்டினுள் அலையும் தனிமை – பக்கம் ௧௩35. கோகுல கண்ணன் – சிறுகதை – ஒரே நாளில் – பக்கம் ௧௩௯36. கொம்பன் – சந்தி – கட்டுரை – பக்கம் ௧௪௯37. புத்தக விமர்சனங்கள் – ஐராவதம் – பக்கம் ௧௫௨௩அழியா கைக்கிளி – புத்தக விமர்சனம் – மா அரங்கநாதன் – பக்கம் ௧௫௬39. உரையாடல் – அழகியசிங்கர், ஜெகன், மோகினி – பக்கம் 159
நவீன விருட்சம் அச்சு இதழாக வெளிவந்திருப்பதில் மகிழ்கிறேன்.
எனது சிறுகதை மற்றும் கவிதையை இதழுக்குத் தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி.
ஆசிரியருக்கும், சக படைப்பாளிகளுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் !
உங்கள் சேவை தொடரட்டும் !
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
வாழ்த்துக்கள்.. உங்கள் முயற்சிகளால் ஊக்கமுறும் படைப்பாளிகளின் படைப்புகள் கூறும் காலத்துக்கும்.. தங்கள் உழைப்புக்கும், உறுதிக்குமான தலைவணங்குதலை..
நன்றிகளுடன்..!
நண்பர்கள் அனுஜன்யா, யாத்ரா, வேலன், ரிஷான், மதன், ரவி, பிரேம்குமார் மற்றும் அழகியசிங்கர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
எனது கவிதையை இதழுக்குத் தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி.
சக படைப்பாளிகளுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்…
தங்கள் உழைப்புக்கும், உறுதியும் பிரமிப்பூட்டுகிறது. வாழ்த்துக்கள்
அனுஜன்யா, யாத்ரா, ரிஷான், மதன், ரவி, பிரேம்குமார் ஆகிய நண்பர்களுக்கு வாழ்த்துகளும், என் படைப்பையும்வெளியிடும் அழகிய சிங்கருக்கு நன்றிகளும்.
மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சியாய் உணர்கிறேன், சக நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள். என் முகவரியை தனிமடலிடுகிறேன். வேறு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. மீண்டும் மிக்க நன்றி.
அன்பு அழகியசிங்கர் ஐயா…
நவீன விருட்சத்தில் அச்சில் கதை வருவதில் மிக மகிழ்ச்சியடைகிறேன். நன்றிகள். உங்களுக்கும் சேர்த்து, பிற அனைத்து படைப்பாளிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இரா.வசந்த குமார்.
வாழ்த்துக்கள்!!
அன்புள்ள அழகியசிங்கர் அய்யா,
உங்களது உழைப்பையும் விடாத முயற்சியும் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன்.
இதழ் சிறப்பாக வந்திருக்கும் என்பதை உங்களது பதிவு சொல்கிறது.
வாழ்த்துகள்.
அன்புடன்
நிலாரசிகன்.