யோகிராம் சுரத்குமார் – ஓர் நினைவு

விசிறி சாமியார் யோகிராம் சுரத்குமார் குறித்த என் அனுபவம் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்ள விருப்பம்.

பாலகுமாரன் புத்தகங்களில் (ஆசைக்கடல், குரு) இடம்பெற்ற விசிறி சாமியார் பற்றிய சம்பவங்களைப் படித்த பின், ஒரு சனிக்கிழமை கிளம்பி திருவண்ணாமலை போய் இருந்தேன்.

தியான மண்டபத்தில் (அப்போது பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்தது) நெடுநேரம் காத்திருந்த பலரோடு நானும் சேர்ந்து கொண்டேன். இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் அன்று விசிறி சாமியார் தியான மண்டபத்திற்கு வரவில்லை.

சாமியார் தன் குடிலுக்கு கிளம்புவதாக,யாரோ ஒருவர் சொல்லிப்போனார்.குழுமியிருந்த மற்ற எல்லோரோடு நானும் வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.

ஒரு வெள்ளை நிற அம்பாசடர் காரில், கண்களில் குளிர் கண்ணாடியோடு விசிறி சாமியார் வெளிவந்து கொண்டிருந்தார்.

அப்போது நேரம் மதியம் மூன்று மணி இருக்கும். நல்ல சூட்டுடன் கூடிய சித்திரை வெயில்.

வலது கையை உயர்த்தி ஆசீர்வதித்தபடி வந்து கொண்டிருந்தார் விசிறி சாமியார்.

திடீரென்று கரு மேகங்கள் சூழ்ந்து தடதடவென மழை கொட்ட ஆரம்பித்தது. எல்லாம் ஒரு பத்து நிமிடமே. கார் அவர் குடிலைப் போய் சேர்ந்த அடுத்த நிமிடம், மழை நின்று மீண்டும் பளிச்சென்ற வானத்துடன் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது.

எப்பொழுதும் பசுமையாய் என்னுள் இருக்கும் இந்த சம்பவம், விசிறி சாமியார் குறித்த அழகியசிங்கரின் பதிவைக் கண்டபோது இன்னொரு முறை எட்டிப் பார்த்தது.
0

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன