01
அழைத்துப் போய்வந்தஆசிரியரின் அத்தனைகெடுபிடிகளுக்குப் பின்னும்இன்னமும் நினைவில்
அந்த ஸ்கூல் பயணம்இன்பச் சுற்றுலா என்றே.
o
02
இலவசமாய்அரிசி டிவி
இயற்கை
உபாதைக்குகட்டண
கழிப்பிடங்கள்.
o
03
எதிர்வரும் பேருந்தில்
அடிபடும் அபாயம்.இடப்புறம் நகர்ந்து
நடந்தேன்.இளவயது மாதொருத்தியை இடித்தபடி.
o
04யாருமற்ற பூங்காவில்ஊஞ்சல்ஆடிக்கொண்டிருக்கிறான்என் மகன்.எவரையோ சேருமென்றுகவிதைகள்எழுதிக்கொண்டிருக்கிறேன்நான்.
o
05
ஏதோவொன்றின் தொடர்பாகவே
எதுவொன்றின்நினைவும்.
அத்தைனையும் நல்லா இருக்கு.
நன்றி
நல்ல கவிதைகள்.எளிய வார்த்தைகளில் நேராகச் சொல்லப்படிருப்பது அதிக அடர்த்தியைத் தருகிறது.
உங்கள் இரண்டாம் கவிதையை மிக ரசித்தேன். என் தோழன் செல்வேந்திரன் கவிதை ஒன்று.
அடிக்கிற தண்ணிக்கு
அங்கங்கே கடை இருக்கு
குடிக்கிற தண்ணிக்கு
குடமெல்லாம் தவமிருக்கு
அழகான கவிதைகள்!!!
நன்றி நண்பர்களே.
செல்வராஜ் ஜெகதீசன்
முதல் மூன்று கவிதைகளின் கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. நான்காவதும் ஓகே. கடைசி அவ்வளவாக ஈர்க்கவில்லை. கவிதைகளின் பக்கம் அவ்வளவாக எட்டிக்கூட பார்க்காத என்னை, செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் திரும்பி பார்க்க/படிக்க வைத்தன. கவிதைகளுக்கு நன்றி!!!
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் யோசிப்பவர்.
செல்வராஜ் ஜெகதீசன்
Enjoyed reading your poems.
.
simple thoughts with perverse
expressions..
keep writing… all the best
பாராட்டுக்கு நன்றி ஆறுமுகம்.
எல்லாமே நல்ல வந்திருக்கு. முதலும் நான்காவதும் மிகப் பிடித்தது. வாழ்த்துகள் செல்வா.
அனுஜன்யா
வாழ்த்துக்கு நன்றி அனுஜன்யா.
அட!