அழைக்கும் பிம்பம்
தண்ணீரில்
தன் பிம்பம்
தழுவுதல்
தற்கொலையா
(ஆத்மாநாம் நினைவாக)
தனிமையிலேயே விட்டுவிடுங்கள்
என் பேரன்பும்
மரக்கிளையினின்று
சுழன்றபடி உதிரும்
பழுப்பு இலை போன்ற
என் பிரிவும்
கொன்றுவிடக்கூடும்
உங்களை.
விட்டுச்சென்றபின்
தத்தித் தத்தி
வல இட உள்ளங்கால்களால்
அழைத்து வந்த
கூழாங்கல்லை தாட்சண்யமின்றி
விட்டுச்சென்றதும்
திருப்பத்தில் மறையும் வரை
பார்த்திருந்தது
ரயில் மறையும் வரை
கையசைக்கும்
வழியனுப்ப வந்தவளைப்போல.
தலைப்பூ சூடாத கவிதா
புத்தரின் போதனைகள்
வாசித்து மூட
பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்தது
எறும்பு.
வாசலில்
சொற்களின் யாசகம்
கவிதையில் இடம் கேட்டு
பார்க்காதது மாதிரி
கடந்துவிடுகிறேன்.
எட்டிப்பிடிக்க முயல
ரொட்டித்துண்டை இன்னும் உயர்த்த
முயல
உயர்த்த
முயல
எவ்வளவு குரூரம்
நாயாயிருக்கவே சும்மா விட்டது.
மாமரக்கிளையில்
அளவளாவியபடியிருந்த சிட்டுக்குருவி
கிளம்புகிறேன் என்பதாய் தலையசைக்க
எப்போது பார்க்கலாம் என்றதற்கு
தெரியாதென தலையசைத்து பறந்தது.
விழி எழு
கழி போ வா
வாழ்வெனும் புனைவு பழகு
புணர் வளர்
பொருளற்ற பொருளீட்டு
மாண்டுபோ
சார் மிகவும் நெகிழ்வாய் உணர்கிறேன், சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை, நீங்கள் என் கவிதைகளை வெளியிடுவீர்களென.
மிக்க நன்றி
எப்பேர்ப்பட்டவர்கள் புழங்கிய இதழ், என்ன ஒரு பாரம்பர்யம்
ஞானக்கூத்தன், எஸ்.வைத்தீஸ்வரன், ஆத்மாநாம்,,,,,,,,,
மிகவும் பெருமிதமாய் உணர்கிறேன்
தங்களை புத்தகக் கண்காட்சியில் சந்தித்து உரையாடியது பசுமையாயிருக்கிறது நினைவில், தங்களுக்கு நினைவிலிருக்க வாய்ப்பில்லை.
இக்கவிதைகள் காலாண்டிதழில் வெளிவருமா, தங்கள் இதழை நூலகத்தில் தான் வாசித்து வருகிறேன், சந்தாதாரராக விருமபுகிறேன்
இதழ் எப்போது வெளிவரும், வருகையில் எனக்கு ஒரு பிரதி அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
என் முகவரி
செ.செந்தில்வேல்,
4/20, சிங்காரவனம் தெரு,
பூங்காநகர்,
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம்
602001
உணர்வு மிகுதியில் சொற்கள் குழைகிறது,,,,,,,
மிக்க நன்றி சார்,
I wonder what happened to the fourth poem…?
Great thoughts… well composed lines.
sleek and crisp words..
my heart felt wishes for your bright future..
முன்னரே படித்தாலும், மீள் வாசிப்பு நன்றாகவே இருக்கு யாத்ரா. நவீன விருட்சம் இதழில் வந்ததற்கு வாழ்த்துகள்.
அனுஜன்யா