இரண்டு கவிதைகள்

1.
சற்றைக்கு முன்
ஜன்னல் சட்டமிட்ட வானில்
பறந்து கொண்டிருந்த பறவை எங்கே?
அது
சற்றைக்குமுன்
பறந்து கொண்
டிருக்கிறது.

2.
பறந்து செல்லும்
பறவையை
நிறுத்திக் கேட்டான் :
பறப்பதெப்படி?
அமர்ந்திருக்கையில்
சொல்லத் தெரியாது கூடப்
பறந்து வா
சொல்கிறேன் என்றது.
கூடப்பறந்து கேட்டான் :
எப்படி?
சிரித்து உன்போலத்தான்
என்றது.
சிரித்து உன்போலத்தான்
என்றது.
அட ஆமாம்
ஆனால் எப்படி
எனக் கீழே கிடந்தான்
பறவை
மேலே பறந்து
சென்றது.

(பிப்ரவரி – மே 1979 ழ இதழில் வெளிவந்த கவிதை)

“இரண்டு கவிதைகள்” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. //சற்றைக்கு முன்
    ஜன்னல் சட்டமிட்ட வானில்
    பறந்து கொண்டிருந்த பறவை எங்கே?
    அது
    சற்றைக்குமுன்
    பறந்து கொண்
    டிருக்கிறது.//

    ஒருக்ககணம் என்கிற காலத்தை மொழியின் வேகத்தடன் சொல்லும் கவிதை. எனக்குப் பிடித்த ஆச்சர்யமான கவிதைகளில் ஒன்று. காலம் நமக்காக நிற்பதில்லை என்பதை சொல்லும் கவிதையும்கூட.

    இரண்டாவது கவிதையும் அனுபவம் பற்றிய உணர்வை தரும் நல்ல கவிதை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன