தாயிடம் குழந்தைபால் குடித்ததாய்க்குற்றம் சாட்டுகிறார்கள்.சக்தி பார்த்த சிவன்தாண்டவமாடியதாகக்குற்றம் சாட்டுகிறார்கள்இதயம் ரத்தம் பாய்ச்சுவதாய்க்குற்றம் சாட்டுகிறார்கள்.கருவறை மானுடரை அனுமதித்ததாய்க்குற்றம் சாட்டுகிறார்கள்
பூமலர்ந்ததாகக்குற்றம் சாட்டுகிறார்கள்காவிக்கு அடியில்சதை இருந்ததாய்க்குற்றம் சாட்டுகிறார்கள்திராட்சைமதுவானதாகக்குற்றம் சாட்டுகிறார்கள்தங்க மாலையைக் கழுத்து அணிந்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள்கைகள் கொடை வழங்கியதாயக்குற்றம் சாட்டுகிறார்கள்வள்ளுவர்காமத்துப்பால் எழுதியதாய்க்குற்றம் சாட்டுகிறார்கள்கண்கள் இமைதிறந்துகாட்சி உண்டதாகக்குற்றம் சாட்டுகிறார்கள்சுவாசித்தலைஅவ்வப்போது செய்ததாய்க்குற்றம் சாட்டுகிறார்கள்காற்றால் இலைகள் அசைந்ததாகக்குற்றம் சாட்டுகிறார்கள்.
Tag: நீலமணி
புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி
இது என் பேப்பர் ரெயிலில் செல்கையில் அடுத்தவர் தோள்மேல் அரை மேய்ந்ததில்லை விரைந்து விழுங்கும் இரவல் ஷீட் அல்ல கைக்குள் வைத்து மடித்துப் படிப்பேன் மேஜைமேல் போட்டு விரித்துப் பார்ப்பேன் பகலிலும் படிப்பேன் இரவிலும் படிப்பேன் படிக்காமல் கூட தூக்கிஎறிவேன் இது என் பேப்பர்
(புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதியை இலக்கியச் சங்க வெளியீடு டிசம்பர் 1972 ஆம் ஆண்டு. அப்போது அதன் விலை 30 பைசா. அதில் வெளியான கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் – அழகியசிங்கர்)